ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, September 28, 2011

வாழ்க ! வாழ்க ! வாழ்க !

ராதேக்ருஷ்ணா

யாவரும் நலமாயிருக்கட்டும் !

பூமி குளிரட்டும் !

தேவையான மழை பொழியட்டும் !

சுத்தமான ஆகாரம் கிடைக்கட்டும் !

நல்ல தண்ணீர் கிடைக்கட்டும் !

ஒற்றுமை ஓங்கட்டும் !

சமாதானம் பெருகட்டும் !

தீவிரவாதம் அழியட்டும் !

வியாதிகள் இல்லாமல் போகட்டும் !


ஆனந்தம் தாண்டவமாடட்டும் !

பக்தி அதிகமாகட்டும் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் !

ஏழ்மை இல்லாமல் போகட்டும் !

சாதிகள் அழிந்துபோகட்டும் !

பெண்ணடிமை எரிந்து சாம்பலாகட்டும் !

போலிகள் திருந்தட்டும் !

லஞ்சம் ஒழியட்டும் !

அருள் கூடட்டும் !

அன்பு பரவட்டும் !

வாழ்க . . . வாழ்க . . . வாழ்க . . .


Read more...

ஆசிர்வாதங்கள் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 உன் பயம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் குழப்பம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் சந்தேகம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் பிரச்சனைகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் வியாதிகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் கவலைகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் காமம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் முன் கோபம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் அழுகை உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் பலவீனங்கள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
 உன் தோல்விகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . . 

உன் அவமானங்கள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உன் பொறாமை உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உன் விரோதம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உன் முட்டாள்தனங்கள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உனக்கு தைரியம் வருகிறது . . .

உனக்கு பலம் வருகிறது . . .
 
உனக்கு நம்பிக்கை வருகிறது . . .
உனக்கு வெற்றி வருகிறது . . .

உனக்கு தீர்வு கிடைக்கிறது . . .

உனக்கு அறிவு வளர்கிறது . . .

உனக்கு நிதானம் வருகிறது . . .
 
உனக்கு மனது சமாதானமடைகிறது . . .
 
உனக்கு ஆரோக்கியம் கூடுகிறது . . .
 
உன் குடும்பம் நன்றாயிருக்கும் . . .
உன் வம்சமே க்ருஷ்ணனை அனுபவிக்கும் . . .
 
நீ சந்தோஷமாக இருப்பாய் . . .
நீ பக்தியோடு இருப்பாய் . . .
நீ நிம்மதியாக இருப்பாய் . . .
 
ஆசிர்வாதங்கள் . . .
மனதார ஆசிர்வாதங்கள் . . .
பக்தியோடு ஆசிர்வாதங்கள் . . .
 
எல்லா ஜன்மத்திற்கும் ஆசிர்வாதங்கள் ! ! ! 

Read more...

Sunday, September 25, 2011

தினமும் கவனி . . .

ராதேக்ருஷ்ணா


வாழ்க்கை தருவதை
எல்லாம் ஏற்றுக்கொள் . . .

வாழ்க்கை உனக்கு
என்னவெல்லாம் தேவையோ
அதை மட்டுமே தருகிறது . . .

வாழ்க்கை தருகிற விஷயங்களில்
நீ உன் வாழ்க்கையை
நடத்த ரஹஸ்யங்கள் ஒளிந்திருக்கிறது . . .

உன் வாழ்க்கை தருகிற பல
அற்புதங்களை அஹம்பாவத்தினால்
நீ உணருவதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
பரிசுகளை குழப்பத்தினால்
நீ வாங்கிகொள்வதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
நல்ல ஆசீர்வாதங்களை பயத்தினால்
நீ ஏற்றுக்கொள்வதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
விசேஷமான வாய்ப்புகளை
நீ கவலையினால் உபயோகப்படுத்துவதில்லை !

உன் வாழ்க்கை எப்படி
உனக்குத் துரோகம் இழைக்கும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை படாதபாடு படுத்தும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை அழ வைக்கும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை அவமானப்படுத்தும் ?

வாழ்வை புரிந்து கொள் !
உன் வாழ்வை புரிந்து கொள் !
சரியாகப் புரிந்து கொள் !

உன் வாழ்க்கை விசேஷமானது !
உன் வாழ்க்கை அற்புதமானது !
உன் வாழ்க்கை அருமையானது !

வாழ்க்கை உன் மீது முழுமையான
நம்பிக்கை வைத்திருக்கிறது . . .

நீ உன் வாழ்க்கையிடம்
பூரணமான நம்பிக்கையை வை . . .

இனியும் உன் வாழ்க்கையைக்
கேவலப்படுத்தாதே . . .

இனி உன் வாழ்க்கையைத்
தொலைக்காதே . . .

இனி உன் வாழ்க்கையை வாழ் . . .

அடுத்தவர் வாழ்க்கை வேறு . . .
உன் வாழ்க்கை வேறு . . .

அடுத்தவர் வாழ்க்கையை
உன்னால் வாழ முடியாது !

அடுத்தவரைப் போல் வாழ
நீ இந்த உலகில் பிறக்கவில்லை !

அடுத்தவரின் வாழ்க்கை
உனக்கு நன்மையைச் செய்யாது !

உன் வாழ்வை கவனி . . .
தினமும் கவனி . . .
இப்பொழுதே கவனி . . .


Read more...

Saturday, September 24, 2011

வாருங்கள் . . .

ராதேக்ருஷ்ணா


தடைகளே வாருங்கள் . . .
எத்தனை தடைகள்
வந்தாலும் நான் ஓயமாட்டேன் . . .


பிரச்சனைகளே வாருங்கள் . . .
எவ்வளவு பிரச்சனைகள்
வந்தாலும் நான் ஓடமாட்டேன் . . .


தொல்லைகளே வாருங்கள் . . .
எத்தனை தொல்லைகள்
தந்தாலும் என் முயற்சி நிற்காது . . .


குழப்பங்களே வாருங்கள் . . .
கோடி குழப்பங்கள் வந்தாலும்
என்னை ஒன்றும் செய்யமுடியாது . . .


கர்மவினைகளே வாருங்கள் . . .
என் க்ருஷ்ணன் என்னிடம்
இருப்பதால் எனக்கு பயமில்லை . . .


தோல்விகளே வாருங்கள் . . .
எத்தனை தோல்விகள் வந்தாலும்
நான் ஒன்றும் அசந்துபோகமாட்டேன் . . .


நான் தோற்றுப்போக மாட்டேன் !

நான் ஓய்ந்துபோக மாட்டேன் !

நான் ஓடிப்போக மாட்டேன் !

நான் அழுது மூலையில் உட்காரமாட்டேன் !

நான் மற்றவரிடம் புலம்பமாட்டேன் !

போராடி ஜெயித்தே தீருவேன் !

இதை யாரும் தடுக்க முடியாது !

என் க்ருஷ்ணன் என் பலம் ! ! !

உலகின் ஆதி சக்தி
எனக்கு பலமாயிருக்கும்போது
நான் ஜெயித்தேதீருவேன் . . .

நான் ஜெயிப்பது நிச்சயம் . . .

நான் ஜெயிப்பது நிச்சயம் . . .

நான் ஜெயிப்பது நிச்சயம் . . .

சத்தியம் . . .சத்தியம் . . .சத்தியம் ! ! !

Read more...

இனியெல்லாம் சுகமே . . .

ராதேக்ருஷ்ணா
 
 
உனக்கு நன்மையே !
எல்லாம் உனக்கு நன்மையே !
 
இதுவரை நடந்தது நன்மையே !
 
இப்பொழுது நடப்பதெல்லாம் நன்மைக்கே !
 இனி நடக்கவிருப்பதும் நன்மையே !
 
இதை உன் மனதில் அழுத்தமாய் எழுதி வை !
 
 
"நல்லது மட்டுமே எனக்கு நடக்கிறது . . .
நல்லது மட்டுமே எனக்கு நடந்தது . . .

நல்லது மட்டுமே எனக்கு நடக்கும் . . ."

நன்றாய் யோசித்தால் உனக்கிது புரியும் . . .

நான் உன் மனதை தைரியப்படுத்த
இதைச் சொல்லவில்லை . . .

நான் உனக்கு நம்பிக்கை தருவதற்காக
இதைச் சொல்லவில்லை . . .

நான் உன்னை சமாதானப்படுத்த
இதைச் சொல்லவில்லை . . .
 
இதுதான் சத்தியம் . . .
எல்லோர் வாழ்விலும் இது சத்தியம் . . .


நீ தோற்றதும் நல்லதே . . .

நீ நஷ்டப்பட்டதும் நல்லதே . . .

நீ அவமானப்பட்டதும் நல்லதே . . .

நீ நோய்வாய்ப்பட்டதும் நல்லதே . . .
 
நீ இழந்ததும் நல்லதே . . .
நீ கஷ்டப்பட்டதும் நல்லதே . . .
 
நீ ஏமாந்ததும் நல்லதே . . .

இவையெல்லாம் உன்னை
பக்குவப்படுத்திருக்கிறது . . .

கடந்த காலம் உனக்குப்
பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறது !

நிகழ்காலத்தில் அதையெல்லாம்
புரிந்து ஜெயிக்கக்கற்றுக்கொள் !

எதிர்காலம் உன்னைக்
கொண்டாடக் காத்திருக்கிறது !
எதுவும் நன்மைக்கே . . .

நல்லது மட்டுமே . . .

ரொம்பவும் நல்லது . . .

உன் வாழ்வில் எது நடந்தாலும்
அவையெல்லாம் நன்மைக்கே . . .

இதை மறவாதே . . .

ஒரு பொழுதும் இதை மறுக்காதே . . .

இதுதான் பக்தியின் ரஹஸ்யம் . . .

எல்லாம் நன்மைக்கே
என்ற மனம் ஒரு நாளில் வந்துவிடாது !
 
முதலில் நீ நம்பவேண்டும் . . .
பிறகு கொஞ்சம் புரியும் . . .
 
அதை அப்படியே நீ
இறுக்கிப் பிடித்துக்கொள் . . .

பிறகு நன்றாகப் புரியும் . . .
 
உலகம் பொல்லாதது  . . .
உன்னை இப்படி
எல்லாம் நன்மைக்கே
என்ற மனோநிலையில் இருக்கவிடாது !

நீ அதைத் தாண்டி இதை
உன் மனதில் நிரந்தரமாய்
பதியவைக்கவேண்டும் . . .
 
எல்லாம் நல்லதே . . .

பதியத் தொடங்கிவிட்டாயா ! ! !

சபாஷ் ! இனியெல்லாம் சுகமே . . .


Read more...

Thursday, September 22, 2011

நீ பாபியல்ல ! ! !

ராதேக்ருஷ்ணா

நீ பாபியல்ல . . .

தவறு செய்வது மனித இயல்பு . . .
 அதனால் நீ பாபியல்ல !

ஆசைப்படுவது மனித இயல்பு . . .
 அதனால் நீ பாபியல்ல !

கஷ்டம் வருவது வாழ்வில் சகஜம் . . .
 அதனால் நீ பாபியல்ல !

நோய் வருவது உடலின் தன்மை . . .
அதனால் நீ பாபியல்ல !

தோல்வியடைவது மிக இயல்பானது . . .
 அதனால் நீ பாபியல்ல !

அங்கஹீனம் ஒரு குறையல்ல . . .
 அதனால் நீ பாபியல்ல !

நஷ்டம் என்பது நன்மைக்கே . . .
அதனால் நீ பாபியல்ல !
 
ஜனனம் என்பது ரஹஸ்யம் . . .
அதனால் நீ பாபியல்ல !

ஏழ்மை என்றும் நிலையில்லை . . .
அதனால் நீ பாபியல்ல !

அவமானம் நிரந்தரமல்ல . . .
அதனால் நீ பாபியல்ல !

உன்னை நீ சரிசெய்துகொள்ள
வந்திருக்கிறாய் . . .
அதனால் நீ பாபியல்ல !

உடனேயே நீ சரியாகிவிடமாட்டாய் . . .
அதனால் நீ பாபியல்ல !

காலம் உன்னைப் பக்குவப்படுத்துகிறது . . .
அதனால் நீ பாபியல்ல !

நீ கடவுளின் குழந்தை . . .
அதனால் நீ பாபியல்ல . . .
நீ பாபியல்ல . . . நீ பாபியல்ல . . .

பாவத்தின் சம்பளம் மரணமல்ல . . .
அதனால் நீ பாபியல்ல !
சத்தியமாய் நீ பாபியல்ல . . .
நிச்சயமாய் நீ பாபியல்ல . . .
 

Read more...

நிம்மதியாய் தூங்கு !

ராதேக்ருஷ்ணா

 தூக்கம் . . .
ஒரு சுகமான அனுபவம் . . .
நியாயமான தூக்கம் நல்லதே . . .
மிதமான தூக்கம் அவசியமே . . .


தூக்கம் உனக்குப் பலம் தருகிறது !
தூக்கம் உனக்குத் தைரியம் தருகிறது !
தூக்கம் உனக்கு நம்பிக்கைத் தருகிறது !
தூக்கம் உனக்குப் புத்துணர்ச்சி தருகிறது !
தூக்கம் உன்னை தெய்வத்திடம் சேர்க்கிறது !

இரவு நிம்மதியாய் தூங்கு . . .
பரபரப்பில்லாமல் தூங்கு . . .
ஆசையில்லாமல் தூங்கு . . .
பொறாமையில்லாமல் தூங்கு . . .
அஹம்பாவமில்லாமல் தூங்கு . . .
வெறுப்பில்லாமல் தூங்கு . . .
அழுகையில்லாமல் தூங்கு . . .
பயமில்லாமல் தூங்கு . . .
சந்தோஷமாய் தூங்கு . . .
சிரிப்போடு தூங்கு . . .


உன் வாழ்க்கை
நன்றாய் செல்கிறது . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்க்கை
நன்றாகவே செல்லும் . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்க்கை
சிறப்பாக இருக்கும் . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்க்கையில்
இதுவரை நல்லதே நடந்தது . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் மனது
அமைதியாகிறது . . .
நிம்மதியாய் தூங்கு !

உனக்கு யாரும்
விரோதிகளில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் சொத்தை யாரும்
கொள்ளையடிக்கப் போவதில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்வை
யாரும் கெடுக்கமுடியாது !
நிம்மதியாய் தூங்கு !

உனக்கு யாரும்
பிரச்சனைகள் தரமாட்டார்கள் !
நிம்மதியாய் தூங்கு !

உன் வியாதிகள்
உன்னை விட்டு விலகுகிறது !
நிம்மதியாய் தூங்கு !

உன் பிரச்சனைகளுக்கு
நிரந்தர தீர்வு இருக்கிறது . . .
நிம்மதியாய் தூங்கு !

நீ உயர்ந்த இடத்தை
நிச்சயம் அடைவாய் . . .
நிம்மதியாய் தூங்கு !

 உனது பொறுப்புகளை
மறந்து குழந்தையாய் படு . . .
நிம்மதியாய் தூங்கு !

கடந்த கால அவமானங்களையும்,
தோல்விகளையும்,வலிகளையும் தூர எறி . . .
நிம்மதியாய் தூங்கு !

எதிர்கால கவலைகளையும்,
கனவுகளையும் மறந்துவிடு . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் நம்பிக்கைகள்
எதுவும் வீணாகாது . . .
நிம்மதியாய் தூங்கு !

நீ எதையும் இழக்கவில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !
நீ தோற்கப்போவதில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !
நீ ஒரு தவறும் செய்யவில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !

ராதா அம்மாவின் மடியில்
சுகமாய் படுத்துக்கொள் . . .
நிம்மதியாய் தூங்கு !

க்ருஷ்ண அப்பாவின் கையை
உரிமையோடு பிடித்துக்கொள் . . .
நிம்மதியாய் தூங்கு !

இன்று முதல் இரவு
ஆனந்தமான தெய்வீகமான
தூக்கத்தை அனுபவிப்பாயாக . . .

எங்கு துக்கமில்லையோ
கண்ணே அங்கே நீ கண்ணுறங்கு !

எங்கு பயம் உன்னை நெருங்காதோ
கண்மணியே அங்கே நீ கண்ணுறங்கு !

எங்கு உலகின் பயங்கரங்களில்லையோ
செல்லமே அங்கே நீ கண்ணுறங்கு !

எங்கு உனக்கு பலம் அதிகமாகுமோ
அழகே அங்கே நீ கண்ணுறங்கு !

தாலேலோ . . .தாலேலோ . . .
தைரியமாய் கண்ணுறங்கு !

ஆரிராரிரோ . . .ஆரிராரிரோ . . .
குழந்தையே கண்ணுறங்கு !
ஆரிராரிரோ . . . ஆரிராரிரோ . . .
அழகே கண்ணுறங்கு !

நாளை உனக்காக விடியும் !
நாளை உனக்காகக் காத்திருக்கிறது !
நாளை உன்னுடைய நாள் !

Read more...

Wednesday, September 21, 2011

உன்னுள்ளே ! உன்னுள்ளே !

ராதேக்ருஷ்ணா


உன்னுள்ளே சக்தி . . .

உன்னுள்ளே பலம் . . .

உன்னுள்ளே தீர்வு . . .

உன்னுள்ளே ஆரோக்கியம் . . .

உன்னுள்ளே வெற்றி . . .

உன்னுள்ளே ஆனந்தம் . . .

உன்னுள்ளே நல்லவை . . .

உன்னுள்ளே ஞானம் . . .

உன்னுள்ளே தெளிவு . . .

உன்னுள்ளே ஒளி . . .

உன்னுள்ளே சாந்தி . . .

உன்னுள்ளே நிம்மதி . . .

உன்னுள்ளே உலகம் . . .

உன்னுள்ளே நிதானம் . . .

உன்னுள்ளே செல்வம் . . .

உன்னுள்ளே நம்பிக்கை . . .

உன்னுள்ளே கடவுள் . . .

உன்னுள்ளே வாழ்க்கை . . .

உன்னுள்ளே . . . உன்னுள்ளே . . .
எல்லாம் உன்னுள்ளே . . .

எதுவும் வெளியில் இல்லை . . .

உன்னுள்ளே . . .உன்னுள்ளே . . .

உன் உள்ளே என்னவெல்லாம்
தேவையற்றதோ அதையெல்லாம்
வெளியில் எடுத்து எறி . . .

பிறகு உன்னுள்ளே உன்னுள்ளே
நிதானமாய் கவனி . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
பொக்கிஷம் தெரியும் . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
பரமானந்தம் தெரியும் . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
அழகான அன்பு தெரியும் . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
அத்தனையும் தெரியும் . . .


Read more...

உனக்குள்ளே . . .

ராதேக்ருஷ்ணா


நீ பயப்படுகிறாயா ?
என் பயம் என்னை விட்டுப் போகிறது...
என்று சொல் !
ஒரு நாள் பயம் போனதை உணர்வாய் . . .

நீ கவலைப்படுகிறாயா ?
என் கவலைகள் தீர்ந்துவிட்டது...
என்று சொல் !
ஒரு நாள் கவலை போய்விட்டதை அறிவாய் . . .

நீ குண்டாக இருக்கிறாயா ?
நான் இளைத்து விட்டேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் நீ இளைத்ததை உணர்வாய் . . .

நீ பலவீனமாக இருக்கிறாயா ?
நான் பலமாக இருக்கிறேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் பலத்தை அறிவாய் . . .

நீ முட்டாளாக இருக்கிறாயா ?
நான் முட்டாள் இல்லை . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் அறிவை உலகம் சொல்லும் . . .

நீ தோற்றுக்கொண்டே இருக்கிறாயா ?
நான் வெற்றி அடைகிறேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் வெற்றியை உலகம் பேசும் . . .

நீ நோய்வாய்ப்பட்டிருக்கிறாயா ?
நான் ஆரோக்கியமாயிருக்கிறேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் உடலின் சக்தியை உணர்வாய் . . .

உன்னால் முடியவில்லையா ?
என்னால் எல்லாம் முடியும் . . .
என்று சொல் !
ஒரு நாள் நீ செய்து முடிப்பாய் . . .

உன் வாழ்க்கையில் பிரச்சனைகளா ?
ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் வாழ்வின் சுகம் புரியும் . . .

ஏமாந்துகொண்டேயிருக்கிறாயா ?
நான் ஏமாறமாட்டேன் . . .என்று சொல் !
ஒரு நாள் யாரும் உன்னை ஏமாற்றமுடியாத
நிலை சத்தியமாய் வரும் . . .

சொல் . . .
உன் மனதிடம் சொல் . . .
யாருமில்லாதபோதும் சொல் . . .

யாரிருந்தாலும் ரகசியமாய்
உன் மனதிடம் சொல் . . .
சொல்லிக்கொண்டேயிரு . . .

உன் மனதிடம் நீ பேசு . . .
உன்னை நீ கவனி . . .
உனக்கு நீயே உதவி செய் . . .

உனக்கு நீயே சேவகன் / சேவகி !
உனக்கு நீயே தலைவன் / தலைவி !
உனக்கு நீயே தோழன் / தோழி !

உன் தேவைகள் உனக்குள்ளே . . .
உன் ஆனந்தங்கள் உனக்குள்ளே . . .
உன் வெற்றிகள் உனக்குள்ளே . . .
உனக்கான தீர்வுகள் உனக்குள்ளே . . .
உனக்கு பதில்கள் உனக்குள்ளே . . .
உன் வழி உனக்குள்ளே . . .
உன் பலம் உனக்குள்ளே . . .
உனக்கான உதவிகள் உனக்குள்ளே . . .
உன் ஆரோக்கியம் உனக்குள்ளே . . .
உன் தைரியம் உனக்குள்ளே . . .
உன் திட்டங்கள் உனக்குள்ளே . . .
உன்னுடைய பதவிகள் உனக்குள்ளே . . .
உனது மதிப்பு உனக்குள்ளே . . .
உன் முயற்சிகள் உனக்குள்ளே . . .
உன் சாதனைகள் உனக்குள்ளே . . .
உன் வாழ்க்கை உனக்குள்ளே . . .

எல்லாம் உனக்குள்ளே . . .
உன் க்ருஷ்ணனும் உனக்குள்ளே . . .

வெளியை மறந்து உன்னுள் நுழை ! ! !
உலகை ஒதுக்கி உனக்குள் தேடு ! ! !


Read more...

பத்மநாபா . . . தா . . .

ராதேக்ருஷ்ணா


பத்மநாபா . . . பக்தி தா !

பத்மநாபா . . . வினயம் தா !

பத்மநாபா . . . நம்பிக்கைத் தா !

பத்மநாபா . . . சிரத்தை தா !

பத்மநாபா . . . நாமஜபம் தா !

பத்மநாபா . . . நல்ல மனதைத் தா !

பத்மநாபா . . . குரு பக்தி தா !

பத்மநாபா . . . நிறைய சத்சங்கம் தா !

பத்மநாபா . . . பக்தர்களின் தரிசனம் தா !

பத்மநாபா . . . உன்னிஷ்டப்படி தா !

பத்மநாபா . . . உன்னையே தா !

பத்மநாபா . . . உன் மனதில் ஒரு இடம் தா !

பத்மநாபா . . . கோயிலில் கைங்கர்யம் தா !

பத்மநாபா . . . அனந்தபுரியில் ஒரு இடம் தா !

பத்மநாபா . . . உன் மடியில் மரணம் தா . . .

பத்மநாபா . . . உன் திருவடியில் பிறவி தா !

பத்மநாபா . . . உன் மனதில் ஒரு இடம் தா !

பத்மநாபா . . . உனக்கு அருகில் இடம் தா !

பத்மநாபா . . . எனக்கு ஒரு முத்தம் தா !

பத்மநாபா . . . உன் தாமரையைத் தா !

பத்மநாபா . . . உன் படுக்கையைத் தா !

பத்மநாபா . . . உன் நாபியில் இடம் தா !

பத்மநாபா . . . பத்மநாபா . . .
என் செல்லமே . . .
என் குஞ்சலமே . . .
என் தங்கமே . . .
என் பட்டுக்குட்டியே . . .

தா . . . தா . . . தா . . . தா . . .

பத்மநாபா . . . தா . . .


Read more...

Monday, September 19, 2011

மனதார நன்றி . . .

ராதேக்ருஷ்ணா


எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான 
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !

என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !

என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

பக்தி என்பது வெளிவேஷமல்ல
என்பதை எனக்குப் பயங்கரமாய்
புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு
எப்பொழுதும் மனதார நன்றி !

நாமஜபத்தின் அற்புத மஹிமையை
எனக்குச் சரியாகப் புரியவைத்த
என்னுடைய பாபங்களுக்கு
என்றுமே மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் க்ருஷ்ணனுக்கு மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !

எனக்கு என்னை ஆத்மா என்று
உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு
என்றென்றும் மனதார நன்றி . . .


நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன் ! ! !

மனதார நன்றிகள் . . .


Read more...

Saturday, September 17, 2011

க்ருஷ்ணனின் ஆசீர்வாதம் . . .

ராதேக்ருஷ்ணா


எல்லாம் ஒழுங்காக
நடக்க,நீ நம்பிக்கையோடு
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும்போதும்,நீ
தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
 
உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உன்னைக்
கொண்டாட,நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
 
 உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய,அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க,நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக்கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றி
கவலையில்லாமலிருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில்,நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உனக்கு நம்பிக்கையிருக்கிறதா ? ! ?
நம்பிக்கையிருந்தால் நல்லது . . .

நம்பிக்கைதான் க்ருஷ்ணனின் ஆசீர்வாதம் . . .

அது புரியாமல் அலையும் கூட்டம் . . .


Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP