ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, September 14, 2011

திருமணம் . . .

ராதேக்ருஷ்ணா


இரு மனம் ஒரு சிந்தனை
செய்யத் திருமணம் . . .

இரு உடல் ஒரு சுகம்
அனுபவிக்கத் திருமணம் . . .

இரு உயிர் ஒரு பக்தியில்
திளைக்கத் திருமணம் . . .

இருவர் ஒரு வழியில்
செல்லத் திருமணம் . . .

இரு குடும்பம் ஒரு குடும்பமாக
மாற திருமணம் . . .

இரு ஜீவன் ஒரு பரமாத்விடம்
சரணாகதி செய்ய திருமணம் . . .

இரு தேடல்கள் ஒரு முடிவில்
நிற்கத் திருமணம் . . .

இருவர் மூவராய் நால்வராய் பலராய்
வளரத் திருமணம் . . .

இருவரும் மற்றவருக்காக
விட்டுக்கொடுக்கத் திருமணம் . . .

இருவர் சேர்ந்து ஒரு திட்டம்
தீட்டத் திருமணம் . . .

இருவர் தீர்மானித்து ஒரு செலவு
செய்யத் திருமணம் . . .

இருவர் ஒரு குறிக்கோளாய்
கொள்ளத் திருமணம் . . .  

ஒருவரின் ஆசையை இருவர்
புரிந்து கொள்ளத் திருமணம் . . .

ஒருவரின் தேவையை இருவர்
பூர்த்தி செய்யத் திருமணம் . . .

இருவரின் குறைகளை இருவர்
சரி செய்யத் திருமணம் . . .

இருவரின் நிறைகளை இருவர்
கொண்டாடத் திருமணம் . . .

இருவரின் ஆரோக்கியத்தை இருவர்
அக்கறை செலுத்தத் திருமணம் . . .

இருவரின் அழகை இருவரும்
ரசிக்கத் திருமணம் . . .

இரு குடும்பத்தையும் இருவர்
கவனிக்கத் திருமணம் . . .

இருவர் ஒரு ஆகாரம்
சாப்பிடத் திருமணம் . . .

இருவர் ஒரு நிழலில்
ஒதுங்கத் திருமணம் . . .

இருவர் ஒரு மழையில்
நனையத் திருமணம் . . .

இருவர் ஒரு நிலவை
ரசிக்கத் திருமணம் . . .

இருவர் ஒரு அணையில்
கண் வளர திருமணம் . . .

இருவர் ஒரு ஆசிர்வாதம்
பெற திருமணம் . . .

இருவர் ஒருவரை
அலங்கரிக்கத் திருமணம் . . .

இருவர் ஒரு சேமிப்பாய்
சேமிக்கத் திருமணம் . . .  

இருவர் இருவரின் மரியாதையைக்
காப்பாற்றத் திருமணம் . . .

இருவர் ஒரு திருப்பத்தில்
வாழ்வில் சேரத் திருமணம் . . . 

இருவரின் கஷ்டங்களை ஒருவர்
  ஆனந்தமாய் சுமக்கத் திருமணம் . . .

இருவர் ஒரு எதிர்காலத்திற்கு
பயணிக்கத் திருமணம் . . .

ஒரு ஆணும்,ஒரு பெண்ணும்
ஒரு வாழ்க்கை வாழத் திருமணம் . . .

யார் முதலில் செல்வார்
என்றறியாமல் எல்லையில்லா
அன்பைப் பரிமாறத் திருமணம் . . .

இருவரும் ஒன்றாய் மேலூர்
செல்லத் திருமணம் . . . 

யாரோ ஒருவர் சென்றாலும்
நினைவே சுகமாய் ஒருவர்
வாழத் திருமணம் . . .

திருமணம் ஒரு வரம் . . .
திருமணம் ஒரு சுகம் . . .
திருமணம் ஒரு தவம் . . .
திருமணம் ஒரு சங்கீதம் . . .
திருமணம் ஒரு ஆகாரம் . . .
திருமணம் ஒரு தியாகம் . . .
திருமணம் ஒரு பலம் . . .
திருமணம் ஒரு யோகம் . . .
 திருமணம் ஒரு ப்ரசாதம் . . .
திருமணம் ஒரு திருப்பம் . . .
திருமணம் ஒரு தெய்வீகம் . . .
 திருமணம் ஒரு சந்தோஷம் . . .

திருமணத்தை க்ருஷ்ணனின்
அருளாக நினைத்தால் . . .
 நிச்சயம் திருமணம் அழகான
மணம் வீசும் மலரே . . . 

உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா ? ! ?


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP