ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, September 15, 2011

எனக்கில்லை . . .

ராதேக்ருஷ்ணா

இந்த உடல் க்ருஷ்ணனின்
சொத்து . . .

இந்த மனம் க்ருஷ்ணனின்
சொத்து . . .

இந்த உயிர் க்ருஷ்ணனின்
சொத்து . . .

இந்த வாழ்க்கை க்ருஷ்ணனின்
சொத்து . . .

அதனால் என்னையும்,
என் சம்மந்தப்பட்ட அனைத்தையும்
காக்கும் பொறுப்பு க்ருஷ்ணனுக்கே . . .

எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை . . .

எனக்கு விதிக்கப்பட்டக்
கடமைகளை ஒழுங்காகச்
செய்வதற்கு மட்டுமே எனக்கு
அதிகாரம் உண்டு . . .

காக்கும் பொறுப்பு எனக்கில்லை . . .

காக்கும் பயனும் எனக்கில்லை . . .

காக்கும் பயமும் எனக்கில்லை . . .

காக்கும் கவலையும் எனக்கில்லை . . .

காக்கும் அதிகாரமும் எனக்கில்லை . . .

காக்கும் பலமும் எனக்கில்லை . . .

காக்கும் தைரியமும் எனக்கில்லை . . .

காக்கும் கடமையும் எனக்கில்லை . . .

எல்லாம் க்ருஷ்ணனிஷ்டம் . . .

அவனுக்கு எல்லாம் தெரியும் . . .
அவனால் எல்லாம் முடியும் . . .
அவன் தான் எல்லாம் செய்பவன் . . .

நான் அவன் குழந்தை . . .

என் வாழ்வை இதுவரை
நடத்திவிட்டான் . . .
இப்போதும் நடத்திக்கொண்டிருக்கிறான் . . .
இனிமேலும் நடத்துவான் . . .

நான் வந்தது வாழ்வதற்க்காக மட்டுமே . . .

அவன் தருவதை அனுபவித்துக்கொண்டு,
அவனை நினைத்துக்கொண்டு,
அவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு,
ஆனந்தமாக வாழ்வதே என் கடமை . . .

அதை மட்டுமே நான் செய்வேன் . . .

என் வாழ்க்கை சுலபமாக சுகமாக
சென்றுகொண்டிருக்கிறது . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP