ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, September 22, 2011

நிம்மதியாய் தூங்கு !

ராதேக்ருஷ்ணா

 தூக்கம் . . .
ஒரு சுகமான அனுபவம் . . .
நியாயமான தூக்கம் நல்லதே . . .
மிதமான தூக்கம் அவசியமே . . .


தூக்கம் உனக்குப் பலம் தருகிறது !
தூக்கம் உனக்குத் தைரியம் தருகிறது !
தூக்கம் உனக்கு நம்பிக்கைத் தருகிறது !
தூக்கம் உனக்குப் புத்துணர்ச்சி தருகிறது !
தூக்கம் உன்னை தெய்வத்திடம் சேர்க்கிறது !

இரவு நிம்மதியாய் தூங்கு . . .
பரபரப்பில்லாமல் தூங்கு . . .
ஆசையில்லாமல் தூங்கு . . .
பொறாமையில்லாமல் தூங்கு . . .
அஹம்பாவமில்லாமல் தூங்கு . . .
வெறுப்பில்லாமல் தூங்கு . . .
அழுகையில்லாமல் தூங்கு . . .
பயமில்லாமல் தூங்கு . . .
சந்தோஷமாய் தூங்கு . . .
சிரிப்போடு தூங்கு . . .


உன் வாழ்க்கை
நன்றாய் செல்கிறது . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்க்கை
நன்றாகவே செல்லும் . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்க்கை
சிறப்பாக இருக்கும் . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்க்கையில்
இதுவரை நல்லதே நடந்தது . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் மனது
அமைதியாகிறது . . .
நிம்மதியாய் தூங்கு !

உனக்கு யாரும்
விரோதிகளில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் சொத்தை யாரும்
கொள்ளையடிக்கப் போவதில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் வாழ்வை
யாரும் கெடுக்கமுடியாது !
நிம்மதியாய் தூங்கு !

உனக்கு யாரும்
பிரச்சனைகள் தரமாட்டார்கள் !
நிம்மதியாய் தூங்கு !

உன் வியாதிகள்
உன்னை விட்டு விலகுகிறது !
நிம்மதியாய் தூங்கு !

உன் பிரச்சனைகளுக்கு
நிரந்தர தீர்வு இருக்கிறது . . .
நிம்மதியாய் தூங்கு !

நீ உயர்ந்த இடத்தை
நிச்சயம் அடைவாய் . . .
நிம்மதியாய் தூங்கு !

 உனது பொறுப்புகளை
மறந்து குழந்தையாய் படு . . .
நிம்மதியாய் தூங்கு !

கடந்த கால அவமானங்களையும்,
தோல்விகளையும்,வலிகளையும் தூர எறி . . .
நிம்மதியாய் தூங்கு !

எதிர்கால கவலைகளையும்,
கனவுகளையும் மறந்துவிடு . . .
நிம்மதியாய் தூங்கு !

உன் நம்பிக்கைகள்
எதுவும் வீணாகாது . . .
நிம்மதியாய் தூங்கு !

நீ எதையும் இழக்கவில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !
நீ தோற்கப்போவதில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !
நீ ஒரு தவறும் செய்யவில்லை . . .
நிம்மதியாய் தூங்கு !

ராதா அம்மாவின் மடியில்
சுகமாய் படுத்துக்கொள் . . .
நிம்மதியாய் தூங்கு !

க்ருஷ்ண அப்பாவின் கையை
உரிமையோடு பிடித்துக்கொள் . . .
நிம்மதியாய் தூங்கு !

இன்று முதல் இரவு
ஆனந்தமான தெய்வீகமான
தூக்கத்தை அனுபவிப்பாயாக . . .

எங்கு துக்கமில்லையோ
கண்ணே அங்கே நீ கண்ணுறங்கு !

எங்கு பயம் உன்னை நெருங்காதோ
கண்மணியே அங்கே நீ கண்ணுறங்கு !

எங்கு உலகின் பயங்கரங்களில்லையோ
செல்லமே அங்கே நீ கண்ணுறங்கு !

எங்கு உனக்கு பலம் அதிகமாகுமோ
அழகே அங்கே நீ கண்ணுறங்கு !

தாலேலோ . . .தாலேலோ . . .
தைரியமாய் கண்ணுறங்கு !

ஆரிராரிரோ . . .ஆரிராரிரோ . . .
குழந்தையே கண்ணுறங்கு !
ஆரிராரிரோ . . . ஆரிராரிரோ . . .
அழகே கண்ணுறங்கு !

நாளை உனக்காக விடியும் !
நாளை உனக்காகக் காத்திருக்கிறது !
நாளை உன்னுடைய நாள் !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP