ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, September 24, 2011

இனியெல்லாம் சுகமே . . .

ராதேக்ருஷ்ணா
 
 
உனக்கு நன்மையே !
எல்லாம் உனக்கு நன்மையே !
 
இதுவரை நடந்தது நன்மையே !
 
இப்பொழுது நடப்பதெல்லாம் நன்மைக்கே !
 இனி நடக்கவிருப்பதும் நன்மையே !
 
இதை உன் மனதில் அழுத்தமாய் எழுதி வை !
 
 
"நல்லது மட்டுமே எனக்கு நடக்கிறது . . .
நல்லது மட்டுமே எனக்கு நடந்தது . . .

நல்லது மட்டுமே எனக்கு நடக்கும் . . ."

நன்றாய் யோசித்தால் உனக்கிது புரியும் . . .

நான் உன் மனதை தைரியப்படுத்த
இதைச் சொல்லவில்லை . . .

நான் உனக்கு நம்பிக்கை தருவதற்காக
இதைச் சொல்லவில்லை . . .

நான் உன்னை சமாதானப்படுத்த
இதைச் சொல்லவில்லை . . .
 
இதுதான் சத்தியம் . . .
எல்லோர் வாழ்விலும் இது சத்தியம் . . .


நீ தோற்றதும் நல்லதே . . .

நீ நஷ்டப்பட்டதும் நல்லதே . . .

நீ அவமானப்பட்டதும் நல்லதே . . .

நீ நோய்வாய்ப்பட்டதும் நல்லதே . . .
 
நீ இழந்ததும் நல்லதே . . .
நீ கஷ்டப்பட்டதும் நல்லதே . . .
 
நீ ஏமாந்ததும் நல்லதே . . .

இவையெல்லாம் உன்னை
பக்குவப்படுத்திருக்கிறது . . .

கடந்த காலம் உனக்குப்
பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறது !

நிகழ்காலத்தில் அதையெல்லாம்
புரிந்து ஜெயிக்கக்கற்றுக்கொள் !

எதிர்காலம் உன்னைக்
கொண்டாடக் காத்திருக்கிறது !
எதுவும் நன்மைக்கே . . .

நல்லது மட்டுமே . . .

ரொம்பவும் நல்லது . . .

உன் வாழ்வில் எது நடந்தாலும்
அவையெல்லாம் நன்மைக்கே . . .

இதை மறவாதே . . .

ஒரு பொழுதும் இதை மறுக்காதே . . .

இதுதான் பக்தியின் ரஹஸ்யம் . . .

எல்லாம் நன்மைக்கே
என்ற மனம் ஒரு நாளில் வந்துவிடாது !
 
முதலில் நீ நம்பவேண்டும் . . .
பிறகு கொஞ்சம் புரியும் . . .
 
அதை அப்படியே நீ
இறுக்கிப் பிடித்துக்கொள் . . .

பிறகு நன்றாகப் புரியும் . . .
 
உலகம் பொல்லாதது  . . .
உன்னை இப்படி
எல்லாம் நன்மைக்கே
என்ற மனோநிலையில் இருக்கவிடாது !

நீ அதைத் தாண்டி இதை
உன் மனதில் நிரந்தரமாய்
பதியவைக்கவேண்டும் . . .
 
எல்லாம் நல்லதே . . .

பதியத் தொடங்கிவிட்டாயா ! ! !

சபாஷ் ! இனியெல்லாம் சுகமே . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP