ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, September 17, 2011

க்ருஷ்ணனின் ஆசீர்வாதம் . . .

ராதேக்ருஷ்ணா


எல்லாம் ஒழுங்காக
நடக்க,நீ நம்பிக்கையோடு
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும்போதும்,நீ
தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
 
உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உன்னைக்
கொண்டாட,நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
 
 உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய,அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க,நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக்கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றி
கவலையில்லாமலிருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில்,நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உனக்கு நம்பிக்கையிருக்கிறதா ? ! ?
நம்பிக்கையிருந்தால் நல்லது . . .

நம்பிக்கைதான் க்ருஷ்ணனின் ஆசீர்வாதம் . . .

அது புரியாமல் அலையும் கூட்டம் . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP