ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, October 1, 2011

தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ராதேக்ருஷ்ணா


குழந்தையின் சிரிப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தாயின் அரவணைப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தந்தையின் வழிகாட்டுதலில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மனைவியின் அக்கறையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

கணவனின் பொறுப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சகோதரனின் உதவியில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சகோதரியின் உரிமையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !


நண்பரின் உயர் நட்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

வயதானவரின் அறிவுரையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

இளைஞர்களின் பலத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தொழிலாளர்களின் உழைப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சூரியனின் ஒளியில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

சந்திரனின் ஈர்ப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

காற்றின் ஸ்பரிசத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தாகம் தீர்க்கும் தண்ணீரில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

பூமியின் பொறுமையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ஆகாசத்தின் பரப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மேகங்களின் மழையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

பசியைப் போக்கும் உணவில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

நல்லவரின் காரியங்களில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

எழுத்தறிவிக்கும் ஆசானிடத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உயர்ந்தோரின் குணங்களில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தோற்றவர்களின் விடாமுயற்சியில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மிருகங்களின் வாழ்வில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தாவரங்களின் உபயோகத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மலர்களின் வாசத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மானத்தைக் காக்கும் ஆடைகளில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

அவமானத்தில் துவளாத உத்தமரிடம்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தற்கொலை செய்யா ஏழையிடம்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

இயற்கையின் வனப்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

இளமையின் உணர்வில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

முதுமையின் பக்குவத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ஆண்களின் காம்பீர்யத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

பெண்களின் மென்மையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

மொழியின் சப்தத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

நாஸ்தீகரின் தேடலில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

ஆஸ்தீகரின் நம்பிக்கையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உலகிற்க்கான ப்ரார்த்தனையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

தியாகிகளின் தியாகத்தில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உத்தமமான அன்பில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

குருவின் கருணையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

உன்னுள்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

என்னுள்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !

நம் ஒற்றுமையில்
தெய்வத்தைப் பார்க்கிறேன் !


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP