ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, November 30, 2011

என்னை மறப்பாயா ? ? ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
தூங்கும் போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?

க்ருஷ்ணா . . .
மகிழ்ச்சியில் நான்
திளைத்திருக்கும்போது உன்னை
நினைப்பதேயில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?  

க்ருஷ்ணா . . .
காமத்தில் மயங்கிக்கிடக்கையில்
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
கோபத்தில் புத்தியிழக்கும் போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
உலகம் என்னைப் புகழும்போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
நான் அஹம்பாவத்தில் இருக்கும்போது
உன்னை துளி கூட நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
நான் ஆசையில் உழலும்போதும்
உன்னை மறந்தும் நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ? 

க்ருஷ்ணா . . .
என் பிரச்சனைகள் தீர்ந்தபின்
உன்னை நான் நினைப்பதேயில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?

எனக்குத் தெரியாது க்ருஷ்ணா . . .

நான் உன்னை ஒழுங்காக
நினைக்கிறேனா இல்லையா
என்று எனக்குப் புரியவில்லை . . .

ஆனால் நீ சொல் . . .
என்னை மறப்பாயா ? ? ?

இல்லை . . . இல்லை . . .
நீ என்னை மறப்பதேயில்லை . . .

நானே உன்னை மறந்தாலும்
நீ என்னை மறக்கவேமாட்டாய் . . .

அதனால் தானே நான்
இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .


Read more...

Tuesday, November 29, 2011

மதிப்பதிகம் . . .

ராதேக்ருஷ்ணா


ரோஜாச்செடியில்
மலர்கள் கொஞ்சம் தான் . . .
முட்கள்தான் அதிகம் ! ! !

அதனால் தான் ரோஜாப்பூவிற்கு
மதிப்பதிகம் . . .


பாலைவனத்தில்
தண்ணீர் கொஞ்சம் தான் . . .
மணல் தான் அதிகம் ! ! !

அதனால் தான் அங்கே தண்ணீருக்கு
மதிப்பதிகம் . . .


நல்லவர்கள்
இந்த உலகில் கொஞ்சம் தான் . . .
கெட்டவர்களே அதிகம் ! ! !

அதனால் தான் இங்கே
நல்லவர்களுக்கு மதிப்பதிகம் . . .


வாழ்க்கையில்
வெற்றிகள் குறைவு தான் . . .
போராட்டங்கள் அதிகம்தான் . . .

அதனால் தான் வாழ்வில்
வெற்றிக்கு மதிப்பதிகம் ! ! !


நீ வெற்றி பெறுவாய் . . .
நீ நிம்மதி அடைவாய் . . .
நீ கோடியில் ஒரு அற்புத ஜீவன் . . .

அதனால் க்ருஷ்ணனுக்கு
உன் மேல் என்றுமே
மதிப்பதிகம் . . .


Read more...

Sunday, November 27, 2011

ஏமாறுவாயா ? ? ?.

ராதேக்ருஷ்ணா

ஏமாறாதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
விட்டுக்கொடுக்காதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
பயப்படாதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
பணிந்துபோகாதே . . .ஏமாற்றுக்காரர்களிடம்
தோற்றுப்போகாதே . . .
ஏமாற்றுக்காரர்களை
அடையாளம் கண்டு கொள் . . .
ஏமாற்றுக்காரர்களுக்கு
உதவாதே . . .
ஏமாற்றுக்காரர்களை
நம்பாதே . . .
ஏமாற்றுக்காரர்களை
வென்று காட்டு . . .
நீ ஏமாறாதே . . .
ஒரு நாளும் ஏமாறாதே . . .
ஒருவரிடமும் ஏமாறாதே . . .
நீ ஏமாறக்கூடாது . . .


இனி நீ ஏமாறாமாட்டாய் . . .


யோசி . . .
தெளிவாக யோசி . . .


உன் வாழ்வைத்
தெளிவாக யோசி . . .


எல்லாவற்றையும்
ஜெயிக்க யோசி . . .Read more...

Tuesday, November 22, 2011

எழுதியே தீருவேன் . . .

ராதேக்ருஷ்ணா
இத்தனை நாள்
ஏன் ஆனந்தவேதம்
எழுதவில்லை . . .

பெருமைக்காக
எழுதவில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .எழுதித்தான் ஆகவேண்டுமென்ற
கட்டாயமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .என் எழுத்தினால் யாரையும்
வசப்படுத்தவேண்டிய அவசியமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .சில நாள் தினமும்
எழுதினேன் . . .
என் கண்ணன் சொன்னான் . . .
எழுதினேன் . . .பல நாள் எழுதவில்லை . . .
என் கண்ணன் எனக்காக மட்டுமே
சொன்னான் . . .
அதனால் எழுதவில்லை . . .இன்று எழுதச் சொல்கிறான் . . .
எழுதுகிறேன் . . .பக்தி என்பதும்,பகவான் என்பதும்
உலகில் நம்மை நிரூபிக்க இல்லை . . .என் பக்தி எனக்காக . . .
என் கண்ணன் எனக்காக . . .உலகில் நான் பக்தன்
என்று என்னை நிரூபிக்க
எனக்கு அவசியமில்லை . . .ஏன் ! உனக்கும் கூடத்தான் . . .

நான் என் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .

நீ உன் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .நாம் உலகிற்க்காக
இதைச் செய்தால்
பக்தி வியபசாரம் ஆகிவிடும் . . .யாரையும் திருப்திபடுத்த
நாம் பக்தி செய்யவேண்டாம் . . .நாம் நம்மை புரிந்துகொள்ளவும்,
கண்ணனை அனுபவிக்கவுமே
பக்தி . . .பக்தி நிர்பந்தமல்ல . . .
பக்தி வெளிவேஷமல்ல . . .
பக்தி கட்டாயமல்ல . . .மீரா தனக்குத் தோன்றும்போதே
பாடல்கள் பாடினாள் . . .தியாகராஜர் தான் ராமனை
அனுபவிக்கும்போதே
பாடல்கள் எழுதினார் . . .அதுபோல் என் மனதில்
கண்ணன் தூண்டும்போதே
நானும் ஆனந்தவேதம்
எழுதுகிறேன் . . .


நீ என்ன பெரிய மீராவா ?
நீ என்ன உயர்ந்த தியாகராஜரா ?
என்று நீ நினைக்கலாம் . . .


அதுபற்றி எனக்குத் தெரியாது . . .
தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் ?


எனக்குத் தெரிந்தது ஒன்றுதான் . . .


நான் க்ருஷ்ணனின் குழந்தை . . .
இந்த நினைவு எனக்குப் போதும் . . .இது அஹம்பாவமல்ல . . .
சத்தியம் . . .

கண்ணன் எழுதச் சொல்லும் வரை
எழுதியே தீருவேன் . . .


Read more...

Wednesday, November 2, 2011

வேட்டையாடத் தயார் . . .

ராதேக்ருஷ்ணா
வேட்டைக்கு தயார் . . .

என் பத்மநாபன்
வேட்டைக்குத் தயாராகிவிட்டான் !

கெட்டவர்களின் பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பக்தர்களின் கஷ்டங்களை
வேட்டையாடத் தயார் . . .
ஏழைகளின் தரித்திரத்தை
வேட்டையாடத் தயார் . . .

பணக்காரர்களின் அஹம்பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பதவியிலிருப்பவரின் சுயநலத்தை
வேட்டையாடத் தயார் . . .

தற்பெருமையாளர்களின் பெருமையை
வேட்டையாடத் தயார் . . .

கயவர்களின் கயமையை
வேட்டையாடத் தயார் . . .

தேசத்துரோகிகளின் துரோகத்தை
வேட்டையாடத் தயார் . . .

பயந்தாங்கொள்ளிகளின் பயத்தை
வேட்டையாடத் தயார் . . .
அறிவிலிகளின் அஞ்ஞானத்தை
வேட்டையாடத் தயார் . . .
வேட்டையாடப் போகிறான் . . .
விளையாடப் போகிறான் . . .

இதோ கிளம்பிவிட்டான் . . .

என் அனந்தபத்மநாபன் . . .

திருவனந்தபுரத்தில் . . .


உலகைக் காக்க ஒரு வேட்டை . . .

உன்னதமான ஒரு வேட்டை . . .

உத்தமனின் வேட்டை . . .

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP