ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, December 24, 2011

கரையேற்றுவீராக . . .

ராதேக்ருஷ்ணா
 
தவறி விழுந்தால் . . .
வாழ்க்கையில்
நல்ல பாதையிலிருந்து
தவறி விழுந்துவிட்டால் . . .
 
மீண்டும் அந்தப் பாதையை
அடைய முடியுமா ?
 
அதற்குத் தானே பக்தி . . .
 
பக்தி செய்பவர் வாழ்வில்
தவறு செய்து விட்டால் . . .
அவர்கள் மீண்டும்
வாழ்வில் ஜெயிக்க முடியுமா ?
அதற்குத் தானே பகவான் . . .
 
பெண்ணாசையில் வீணாய்
போய்விட்டால் ?

அவர்களால் மீண்டும்
உலகில் தலை நிமிரமுடியுமா ?

சத்தியமாய் முடியும் . . .

யாரேனும் அப்படி உண்டா . . .

ஆமாம் . . .

நம்முடைய
தொண்டரடிப்பொடி ஆழ்வார் உண்டு . . .

வாழ்வில் பெண்ணாசையினால்
வீணாகித் தவறி விழுந்து
ரங்கனின் கருணையினால்
அவனை அடைந்த
நம் தொண்டரடிப்பொடி உண்டு . . .

மார்கழி கேட்டையான இன்று
அவதரித்த தொண்டரடிப்பொடியே,
என்னையும் வாழ்வில்
தலை நிமிர வைப்பீராக . . .

திருமாலை அடைய திருமாலை
சொன்னவரே . . .
எனக்காக ரங்கனிடம் சிபாரிசு செய்வீரா ? ! ?

திருப்பள்ளியெழுச்சியால் ரங்கனை
பள்ளியுணர்த்தினவரே . . .
எனக்காக ரங்கனிடம் கொஞ்சம் பேசுவீரோ ? ! ?

இந்த வாழ்வில் விழுந்தவனை
தயவு செய்து காப்பாற்றும் . . .
ஊரிலேன் காணியில்லை . . .
உறவும் யாருமில்லை . . .
கண்ணனின் திருவடியும் அருகிலில்லை . . .
பக்தியோ துளியுமில்லை . . .
வைராக்யம் இல்லவேயில்லை . . .

அதனால் விப்ரநாராயணா . . .
தொண்டர் அடிப் பொடியே . . .

உனக்குப் புரியும் என் நிலைமை . . .

கரையேற்றுவீராக . . .
சம்சார சாகரத்திலிருந்து
கரையேற்றுவீராக . . .Read more...

Sunday, December 18, 2011

காதலைக் கொண்டாடு . . .


ராதேக்ருஷ்ணா

மார்கழி. . .

கோபிகைகள்
காத்யாயனி விரதம் இருந்தார்கள் !
ஆண்டாள்
திருப்பாவை விரதம் இருந்தாள் !

மார்கழி க்ருஷ்ணனின் ரூபம் . . .

கோபிகைகள்
யமுனையில் நீராடினர் !
ஆண்டாள்
திருமுக்குளத்தில் நீராடினாள் !

மார்கழி காதல் மாதம் . . .

கோபிகைகள்
ப்ருந்தாவனத்தில் விரதம் இருந்தனர் !
ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விரதம் இருந்தாள் !

மார்கழி கருணையின் மாதம் . . .

கோபிகைகள்
க்ருஷ்ண லீலைகளைப் பாடினர் !
ஆண்டாள்
திருப்பாவை பாடினாள் !

மார்கழி நலம் தரும் மாதம் . . .

கோபிகைகள்
அடைந்தது ராசலீலா !
ஆண்டாள்
அனுபவித்தது ரங்கலீலா !

மார்கழி பெருமையுடைய மாதம் . . .

வீணாக்கிவிடாதே . . .
திருப்பாவை பாடு . . .
கண்ணனைத் தேடு . . .
காதலைக் கொண்டாடு . . .

க்ருஷ்ணனின் காதலைக் கொண்டாடு ! ! !

Read more...

Monday, December 5, 2011

ஏறுவாயா ? ! ? பார்ப்பாயா . . .


ராதேக்ருஷ்ணா

தென்னை மரத்தில் ஏறுவியா . . .
தேங்காயைப் பறிப்பாயா ?


மாமரத்தில் ஏறுவியா . . .
மாங்காயைப் பறிப்பாயா ?


கொய்யாமரத்தில் ஏறுவியா . . .
கொய்யாக்காய் பறிப்பாயா ?


ஆத்துல விழறியா . . .
சேத்துல விழறியா . . .
குளத்துல விழறியா . . .

இது உனக்கும் தெரியும் !
எனக்கும் தெரியும் !

சிறிய வயதில்
நம் தாய்/தந்தை காலில்
ஏறிக்கொண்டு
அவர்கள் பாட
நாம் அனுபவித்தது . . .கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன் !
இந்த வார்த்தைகளில்
என்ன பிரயோஜனம் ? ? ?

என் பிள்ளைக்கு
இதைச் சொல்லிக்கொடுக்க
நான் தயாராகயில்லை . . .


க்ருஷ்ணனிடம் கேட்டேன் !
அவன் புதியதாக ஒன்றைச்
சொல்லிக்கொடுத்தான் . . .

அதை நான் உனக்கும்
சொல்கிறேன் . . .
நீயும் அனுபவி ! ! !


திருப்பதி ஏறுவாயா ? ! ?
ஸ்ரீநிவாசனைப் பார்ப்பாயா . . .

பத்ரிகாஸ்ரமம் ஏறுவாயா ? ! ?
நாராயாணனைப் பார்ப்பாயா . . .

அத்திகிரி ஏறுவாயா ? ! ?
வரதராஜனைப் பார்ப்பாயா . . .

கோவர்தனகிரி ஏறுவாயா ? ! ?
கோவிந்தனைப் பார்ப்பாயா . . .

பத்ராசலம் ஏறுவாயா ? ! ?
ராமனைப் பார்ப்பாயா . . .

பர்சானா ஏறுவாயா ? ! ?
ராதிகாவைப் பார்ப்பாயா . . .

கோகுலம் போறாயா . . .
 ப்ருந்தாவனம் போறாயா . . .
வைகுந்தம் போறாயா . . .

எத்தனை சுகமல்லவா இது . . .

பாடு . . .பாடு . . .பாடு

எதிர்கால சந்ததிக்கு
இதையே பாடுவோம் . . .


Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP