ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Sunday, December 18, 2011

காதலைக் கொண்டாடு . . .


ராதேக்ருஷ்ணா

மார்கழி. . .

கோபிகைகள்
காத்யாயனி விரதம் இருந்தார்கள் !
ஆண்டாள்
திருப்பாவை விரதம் இருந்தாள் !

மார்கழி க்ருஷ்ணனின் ரூபம் . . .

கோபிகைகள்
யமுனையில் நீராடினர் !
ஆண்டாள்
திருமுக்குளத்தில் நீராடினாள் !

மார்கழி காதல் மாதம் . . .

கோபிகைகள்
ப்ருந்தாவனத்தில் விரதம் இருந்தனர் !
ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விரதம் இருந்தாள் !

மார்கழி கருணையின் மாதம் . . .

கோபிகைகள்
க்ருஷ்ண லீலைகளைப் பாடினர் !
ஆண்டாள்
திருப்பாவை பாடினாள் !

மார்கழி நலம் தரும் மாதம் . . .

கோபிகைகள்
அடைந்தது ராசலீலா !
ஆண்டாள்
அனுபவித்தது ரங்கலீலா !

மார்கழி பெருமையுடைய மாதம் . . .

வீணாக்கிவிடாதே . . .
திருப்பாவை பாடு . . .
கண்ணனைத் தேடு . . .
காதலைக் கொண்டாடு . . .

க்ருஷ்ணனின் காதலைக் கொண்டாடு ! ! !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP