ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, January 23, 2012

அவன் க்ருபை போதும் . . .

ராதேக்ருஷ்ணா

நான் ஒன்றும் பெரிய
பக்தனில்லை . . .

நான் ஒன்றும் உத்தம
சன்னியாசியில்லை . . .

நான் எல்லாவற்றையும்
வெறுத்த தியாகியுமில்லை . . .

நான் எதையும் விடத்தயாராயிருக்கும்
வைராக்கியசாலியில்லை !

நான் எதையும் தாங்கும்
இதயம் படைத்தவனில்லை !

நான் எப்போதும் பொறுமையைக்
கடைபிடிக்கும் உத்தமனில்லை !நான் விடாது நாமஜபம்
செய்யும் ஆசையுடையவனில்லை !நான் எல்லாவற்றையும்
உணர்ந்த ஞானியுமில்லை !இது தான் என் உண்மை நிலவரம் !

இதையும் தாண்டி
க்ருஷ்ணனை நான் நேசிக்கிறேன்
என்றால் அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
அவன் நாமம் என் வாயில்
வருகிறதென்றால்
அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
உலகம் என்னை க்ருஷ்ண பக்தன்
என்று ஏற்றுக்கொண்டிருக்கிறதென்றால்
அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
நான் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேனென்றால்
அது அவன் க்ருபை . . .

இதையும் தாண்டி
நான் ஆனந்தமாயிருக்கிறேன்
என்றால் அது அவன் க்ருபை. . .

இதையும் தாண்டி
நான் தைரியமாய் இந்த உலகில்
வாழ்கின்றேனென்றால்
அது அவன் க்ருபை . . .

எனக்கு இது போதும் . . .
ஆம் . . .
அவன் க்ருபை போதும் . . .

க்ருஷ்ண க்ருபை போதும் . . .

என்றும் இது போதும் . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP