ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, February 3, 2012

உன் அருளுக்காக ஏங்கும் . . .


ராதேக்ருஷ்ணா


ராமானுஜா . . .

நாளை உன்னைப் பார்க்க
வருகிறேன் . . .

உன் தாசானுதாசன்
வருகிறேன் . . .

உன் திருவடியே
கதி என்றிருக்கும்
உன் அடிமை வருகிறேன் . . .

உன் சரணாகதி தத்துவத்தால்
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும்
உன் அன்பன் வருகிறேன் . . .

உன்னால் இன்று உலகில்
குருவாய் வாழ்ந்துகொண்டிருக்கும்
உன் குழந்தை வருகிறேன் . . .

உலகில் பலரும் அவமதித்தபின்னும்
உன் பலத்தால் உற்சாகமாய்
பக்தி செய்துகொண்டிருக்கும்
உன் பிள்ளை வருகிறேன் . . .

உன்னைத் தவிர வேறு
யாராலும் அடக்கமுடியாத
யாருக்கும் தலை வணங்காத
இந்த கோபாலன் வருகிறேன் . . .

உன் கருணையை நம்பி
வருகிறேன் . . .

உன் பலத்தை நம்பி
வருகிறேன் . . .

உன் தத்துவத்தை நம்பி
வருகிறேன் . . .

உன் அன்பை நம்பி
வருகிறேன் . . .

உன்னையே நம்பி வருகிறேன் . . .

உன்னை மட்டுமே
நம்பி வருகிறேன் . . .

என் ராமானுஜா . . .
எனக்கு மோக்ஷம் தா . . .

எனக்கு கட்டளை இடு . . .

என்னை எடுத்துக்கொள் . . .

உன்னைத் தா . . .

ராமானுஜா . . . உன்னைத் தா . . .

நாளை நீ எனக்கு என்ன
தரப்போகிறாய் ?

நாளை நீ எனக்கு எப்படி
காட்சித் தரப்போகிறாய் ?

உன் அருளுக்காக ஏங்கும் . . .

உன் அடியவரின் பாத தூளி . . .


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP