ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

வைத்தியரே . . .


ராதேக்ருஷ்ணா

வைத்தியரே . . .
என் வியாதிகளைச்
சொல்கிறேன் . . .

பிறகு என்ன மருந்தோ
கொடுங்கள் . . .

என்னை அஹம்பாவ
வ்யாதி படுத்தி எடுக்கிறது !

எனக்கு தற்பெருமை
மிகவும் அதிகமாக இருக்கிறது !



எனக்கு எல்லையில்லாத
காமம் பாடாய் படுத்துகிறது !

இரவு பகல் என்றில்லாமல்
கோபம் என்னை ஆட்டிவைக்கிறது !

நாள் கிழமை என்று பாராமல்
பொறாமை என்னை ஆள்கிறது !

இடம் பொருள் பாராமல்
வெறுப்பு என்னை வாட்டி வதைக்கிறது !

உடல் ஒரு காரியத்தில்
ஈடுபடும்போது மனம் வேறோரிடத்தில்
அலை பாய்கிறது !

ஆசைக்கு எல்லையில்லாமல்
அது இஷ்டப்படி செல்கிறது !

இந்த வியாதிகளினால்
நான் படும் பாட்டை என்னால்
உள்ளபடி சொல்லமுடியவில்லை !

இந்த வியாதிகளை நான் சொன்னால்
மற்றவர்கள் கேலியாய் சிரிக்கின்றனர் !

பல வைத்தியரைப் பார்த்தேன் . . .

எல்லோரும் என் உடலுக்கு
மருத்துவம் செய்கிறார்கள் . . .

ஆனால் நீர் ஒருவரே
உடல்,உள்ளம்,ஆத்மா
என்ற மூன்றிர்க்கும் வைத்தியம்
செய்வதாய் கேள்விப்பட்டேன் . . .

அதனால் உம்மைக் கண்டு
என் வியாதிகளைச் சொல்லி
மருந்து வாங்க வந்தேன் . . .

வைத்தியரே . . .
வயதான வைத்தியரே . . .
வீரராகவ வைத்தியரே . . .

என் வியாதிகளுக்கு
ஒரே மருந்து தாரும் . . .
சுலபமான மருந்தாயிருக்கட்டும் . . .
செலவில்லாத மருந்தாயிருக்கட்டும் . . .

நான் பரம ஏழை . . .
என்னிடத்தில் நிறைய தனமில்லை . . .

வைத்தியர் வீரராகவர் சொன்னார் . . .

"உன் வியாதிகளுக்கு ஒரே மருந்து . . .
என்னிடம் சரணடை "

அடியேன் சொன்னேன் . . .
"ஆஹா . . .அற்புதமான மருந்து"
இவ்வளவு நாள் இது தெரியவில்லையே . . .

சரி பரவாயில்லை . . .

இதோ சாப்பிட்டுவிட்டேன் என் மருந்தை . . .

வீரராகவா . . .
உன்னிடம் சரணடைந்தேன் . . .

என் வியாதிகள் தீர்ந்தது . . .

இப்போது நான் சுகமாயிருக்கிறேன் . . .

நன்றி . . .வைத்திய வீரராகவா . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP