ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 பிப்ரவரி, 2012

உன்னை தண்டிக்கும் !

ராதேக்ருஷ்ணா

வயதானால்
வாயை மூடிக்கொண்டுதான்
இருக்கவேண்டுமா ?

வயதானால்
எல்லோருடைய செய்கையையும்
பொறுத்துக்கொள்ளத்தான்
வேண்டுமா ?

வயதானால்
சிறியவர்களின் எல்லா
நடத்தைகளையும்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா ?

வயதானால்
நோய் வந்துவிட்டால்
உடனே செத்துத்தான்
ஆகவேண்டுமா ?

வயதானால்
வாழ்வில் நடைப்பிணமாய்
வாழ்ந்தாகவேண்டுமா ?



வயதானால் என்ன ?
உடல் பலம் போனால் என்ன ?



வயதானால் புலம்பக்கூடாதா ?
வயதானால் அழக்கூடாதா ?
வயதானால் ஒதுங்கவேண்டுமா ?



வயதானால் வைத்தியம்
செய்துகொள்ளக்கூடாதா ?



வயதானவர்கள் பாரம் அல்ல . . .



நம் கையில் இருக்கும் பொக்கிஷம் !

பொன் முட்டையிடும் வாத்து . . .

உனக்கு க்ருஷ்ண ஆசிர்வாதம்
என்னும் பொன் முட்டை தரும் வாத்து !

உனக்கு பக்குவம் என்னும்
பொன் முட்டை தரும் வாத்து !

உனக்கு தைரியம் என்னும்
பொன் முட்டை தரும் வாத்து !

முதுமையை நீ
அடையும் முன்பு
உனக்கு அதை
புரியவைக்கும் பொக்கிஷம் !

முதுமை உனக்கும் உண்டு !
முதுமை எனக்கும் உண்டு !

நாளை நமக்கும் உடல் பலகீனம் உண்டு !

நாளை நமக்கும் வியாதி உண்டு !

நாளை நமக்கும் தளர்ச்சி உண்டு !

நாளை நமக்கும் மரணப் படுக்கை உண்டு !

நாளை நமக்கும் முடியாத்தனம் உண்டு !

இளைஞர்களே ஜாக்கிரதை . . .

முதியவரை நீ அவமதித்தால்
உன்னை முதுமை தண்டிக்கும் !
உன் முதுமை உன்னை தண்டிக்கும் !
தண்டித்தே தீரும் . . .

விடாது உன் முதுமை . . .

ஜாக்கிரதை . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP