ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, February 22, 2012

எல்லாம் சரியாகும் . . .

ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றையும் மற . . .


அடுத்தவரின் குற்றங்களை மற !


உன் காயங்களை மற !


உன் அவமானங்களை மற !


உன் பந்தங்களின்
பைத்தியக்காரத்தனங்களை மற !


உனது தோல்விகளை மற !


உன் வெற்றிகளை மற !


உன் கவலைகளை மற !


எல்லாவற்றையும் க்ருஷ்ணன்
கவனித்துக்கொண்டிருக்கிறான் !


உன்னால் எதையும் மாற்றமுடியாது !

நீ உன்னை மாற்றிக்கொள் !


நீ மாறினால் உன்னால்
க்ருஷ்ணனின் லீலைகளை
சரியாகப் புரிந்துகொள்ளமுடியும் !

எல்லாம் சரியாகும் . . .
 நிச்சயம் சரியாகும் . . .
சத்தியமாக சரியாகும் . . .


நீ க்ருஷ்ணனை அனுபவித்துக்கொண்டிரு !
அவனை மட்டும் நினைத்துக்கொண்டிரு !
மற்றதை எல்லாம் மற . . .


மறந்து போ . . .
உனது மனதை வாட்டும்
எல்லாம் உனக்கு மறந்துபோகட்டும் !


நிம்மதியாய் இரு கண்ணே . . .

உன் மனது லேசாகிறது . . .

உன் மனது சிரிக்கிறது . . .

உன் மனது நம்பிக்கை அடைகிறது . . .

உன் மனது சந்தோஷத்தைத்
தவிர எல்லாவற்றையும் மறக்கட்டும் . . .


எல்லாவற்றையும் மறந்து
சிரி பார்க்கலாம் . . .


என் சமத்துகுட்டி . . .
இப்படித்தான் எப்பவும்
சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் !


சிரி . . .
நிம்மதியாய் சிரி . . .
சந்தோஷமாய் சிரி . . .


 
க்ருஷ்ணன் இருக்கான் . . .
எல்லாம் சரியாகும் . . .

மனதை அலட்டிக்கொள்ளாதே . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP