ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, March 29, 2012

ஞாபகம் . . .

ராதேக்ருஷ்ணா
ஞாபகம் வருமா ?
ஞாபகம் இருக்குமா ?
சிறிய வயதில் பொம்மைகளின்
ஞாபகம் இருந்தது . . .
அவை எதுவுமே இன்று ஞாபகமில்லை !
பள்ளிக்கூட வயதில் பாடங்கள்,
விளையாட்டுக்கள் ஞாபகம் இருந்தது . . .
அதில் பல இன்று ஞாபகமில்லை !
கல்லூரி வயதில் நிறைய
நண்பர்களின் ஞாபகம் இருந்தது . . .
அவர்களில் பலரை இன்று ஞாபகமில்லை !
சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு
பல செலவுகள் ஞாபகமிருந்தது . . .
ஆனால் இன்று எதற்கு எத்தனை செலவு
செய்தோம் என்று ஞாபகமில்லை !
இன்று காலை என்ன சாப்பிட்டோம்
என்று அப்பொழுது ஞாபகமிருந்தது . . .
இப்பொழுது அது பெரியதாக ஞாபகமில்லை !
இப்படி பல விஷயங்களை
வாழ்வில் நாம் மறந்துவிட்டோம் . . .
சில விஷயங்கள்
மட்டுமே இன்று ஞாபமிருக்கிறது !
அதனால் நாம் ஞாபக மறதிகள்
என்பது தெளிவாகத் தெரிகிறது !
தெரியாது . . .
இரவில் தூக்கத்தில் நம்மை மறக்கிறோம் !
அது போலே மரண சமயத்தில்
க்ருஷ்ணனை மறப்போம் . . .
இது நிச்சயம் . . .


ஆனால் க்ருஷ்ணன் மறக்கப்போவதில்லை !
இது சத்தியம் . . .
போன ஜன்மம் மறந்துபோனது . . .
அடுத்த ஜன்மம் தெரியாது . . .


இந்த ஜன்மாவில் இன்னும் எத்தனை நாள் ?
தெரியவில்லை . . .
இப்பொழுது ஞாபகமிருக்கிறது . . .
சொல்லிவைக்கிறேன் . . .
க்ருஷ்ணா. . . க்ருஷ்ணா. . . க்ருஷ்ணா
 சத்தியமாய் இந்த நாமம் என்னை மறக்காது . . .
நிச்சயமாய் இந்த நாமம் என்னை கைவிடாது . . .
உறுதியாய் இந்த நாமம் என்னைவிட்டு விலகாது . . .


என் அந்திம காலத்தில் ஒரு வேளை
நான் க்ருஷ்ணா என்று சொன்னால்,
சத்தியமாய் அது என் பலமில்லை . . .


க்ருஷ்ணா என்னும் நாம ஜபத்தின்
பலத்தினால் மட்டுமே நான்
அந்திம காலத்தில் க்ருஷ்ணா என்று சொல்லுவேன் . . .


Read more...

Tuesday, March 27, 2012

நிர்ணயம் செய்வாய் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
இழப்புகள் . . .
 
 
எத்தனையோ இழப்புகளைத்
தாண்டி வாழ்க்கை உள்ளது . . .
 
 
வாழ்க்கையை இழப்புகளால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
வாழ்க்கையை அன்பினால்
நிர்ணயம் செய் . . .
 
 
சந்தோஷத்தை இருப்புகளால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
சந்தோஷத்தை திருப்தியால்
நிர்ணயம் செய்து கொள் . . .
 
 
 பலத்தை பணத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
பலத்தை தைரியத்தால்
நிர்ணயம் செய்து பார் . . .
 
 
வீரத்தை கோபத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
வீரத்தை விவேகத்தால்
நிர்ணயம் செய்து நிரூபி . . .
 
 
மனிதர்களை வார்த்தைகளை
கொண்டு நிர்ணயம் செய்யாதே . . .
 
 
மனிதர்களை மனதைப்
பார்த்து நிர்ணயம் செய். . .
 
 
அன்பை பொருட்களால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
அன்பை அன்பினால்
நிர்ணயம் செய்து கொள் . . .
 
 
பக்தியை பகட்டுத்தனத்தால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
பக்தியை ஆத்மார்த்தமாக
நிர்ணயம் செய்யப் பழகு . . .
 
 
க்ருஷ்ணனை ஆசைகளைக்
கொண்டு நிர்ணயம் செய்யாதே . . .
 
 
க்ருஷ்ணனை ஆசிர்வாதத்தை
கொண்டு நிர்ணயம் செய்துவிடு . . .
 
 
குருவை காரியங்களால்
நிர்ணயம் செய்யாதே . . .
 
 
குருவை கருணையால்
நிர்ணயம் செய்து கொள் . . .
 
 
 

Read more...

Sunday, March 25, 2012

ஜய் ஸ்ரீ திருமலா வராஹா . . .

ராதேக்ருஷ்ணா
 
 
லக்ஷ்மி வராஹா . . .
திருமலையின் சொந்தக்காரரே !
 
எத்தனை எளிமை . . .
 
எத்தனை அருமை . . .
 
எத்தனை அருகில் . . .
 
எத்தனை நிதானம் . . .
 
எத்தனை கருணை . . .
 
எத்தனை சுலபம் . . .
 
வராஹா...நீ மட்டும்
திருமலையில் இடம் தராவிட்டால்
ஸ்ரீநிவாசனை யாருக்குத் தெரியும் ? ! ?
 
 
வராஹா...நீ மட்டும்
பூமியை பிரளயத்திலிருந்து மீட்காவிட்டால்
நாங்கள் எங்கே இருப்போம் ? ! ?
 
 
வராஹா . . .நீ மட்டும்
அந்திம காலத்தில் ஸ்மரிக்காவிட்டால்
நாங்கள் என்ன ஆவோம் ? ! ?
 
 
வராஹா . . . நீ தானே உத்தமன் . . .
வராஹா. . . நீ தானே காப்பவன் . . .
வராஹா . . . நீ தானே சுலபன் . . .
வராஹா . . . நீ தானே சுமப்பவன் . . .
 
 
வராஹா . . . வராஹா . . . வராஹா . . .
 
எத்தனை அழகான திருநாமம் . . .
எத்தனை வித்தியாசமான ரூபம் . . .
எத்தனை அற்புதமான காருண்யம் . . .
 
 
ஜய் ஸ்ரீ லக்ஷ்மி வராஹா . . .
ஜய் ஸ்ரீ பூவராஹா . . .
ஜய் ஸ்ரீ திருமலா வராஹா . . .
 
 

Read more...

Thursday, March 22, 2012

திருமலா ரஹஸ்யம் !

ராதேக்ருஷ்ணா
 
 
அலர்மேல்மங்கா அம்மா . . .
 
 
திருப்பதியின் கருணை
ரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
திருப்பதியின் எல்லையில்லாத
ஆனந்தரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
திருமலையின் கட்டுக்கடங்காத
கூட்டத்தின் ரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
திருமலையின் சுவையான
ப்ரசாத ரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
ஸ்ரீநிவாசனின் உண்மையான
பக்த ரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
அலர்மேல்மங்கா . . .
ஸ்ரீநிவாசனின் தன ரஹஸ்யம்
எங்கள் அலர்மேல் மங்கா . . .
 
 
திருமலையின் நித்திய
சாந்நித்திய ரஹஸ்யம்
அலர்மேல்மங்கா . . .
 
நினைத்தாலே கிடைக்கும்
திருமலையின் மோக்ஷ ரஹஸ்யம்
அலர்மேல் மங்கா . . .
 
 
திருமலையேறும் பக்தர்களின்
பல ரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
ஆழ்வார்களின் அற்புத
ப்ரபந்த ரஹஸ்யம் அலர்மேல் மங்கா . . .
 
 
என் ஆனந்தத்தின்
ஆனந்தவேத ரஹஸ்யம்
என் தாயார் அலர்மேல்மங்கா . . .
 
 
 
 

Read more...

திருமலையில் சிறை !

ராதேக்ருஷ்ணா


ஸ்ரீநிவாசா . . .
இந்த முறை உன்னை
நன்றாகத் தரிசித்தேன் . . .

உனக்காகக் காத்திருப்பதே
எல்லையில்லா சுகம் . . .

உனக்காகக் காத்திருக்க
எத்தனை கோடி பக்தர்கள் . . .

உன்னைப் பார்க்க
ஒவ்வொருவருக்கும் எத்தனை அவசரம் !

உன்னை நெருங்கும்போது
ஒவ்வொருவருக்கும் எத்தனை ஆனந்தம் !

உன்னைத் தரிசிக்க
ஒவ்வொருவரும் எத்தனை தடவை
கோவிந்தா கோவிந்தா என்று
வாயார மனதார ஜபிக்கிறார்கள் !

உன்னைப் பார்ப்பது
ஒரு நிமிடம் என்றாலும்
அதில் நாங்கள் அடையும்
பலமும் ஆனந்தமும்
சொல்ல வார்த்தையில்லையே !

நீயும் எத்தனை நிதானமாய்
ஒவ்வொருவரையும் விசேஷமாகக்
கடாக்ஷித்து சமாதானம் தருகிறாய் !

எல்லோருக்கும் ப்ரசாதம்
தரும் உன் கருணைக்கு
ஒரு நாளும் முடிவில்லை !

உன்னை நினைத்தபோதெல்லாம்
பார்க்க ஒரு வரம் தா
எனதருமை ஸ்ரீநிவாசா . . .

எப்பொழுதும் உன் பக்தர்களின்
கூட்டத்தில் பலமணி நேரம்
காத்திருந்து உன்னைத் தரிசிக்க
ஒரு வரம் தா ஸ்ரீநிவாசா . . .

 உன்னிடம் வந்துவிட்டாலே
கலியுகத்தில் நாமஜபம்
மட்டுமே சத்தியம் என்பது
புரிகிறதே ஸ்ரீநிவாசா  . . .

உன் ஏழுமலையில் இருக்கும்
ஒவ்வொரு நிமிஷமும்
பக்தி உலகத்தில் மூழ்கியிருக்கும்
பொன்னான நேரமல்லவா
என் சமத்து ஸ்ரீநிவாசா . . .

மலையிலிருந்து என் உடல்
இறங்கி வீட்டிற்கு வந்துவிட்டது . . .

ஆனால் என் மனமோ
திருமலையில் சிறைபட்டுவிட்டது . . .

யார் திருமலைக்குச் செல்கிறீர்களோ,
அங்கே என் மனதைக் கண்டால்
உடனே என்னிடம் வரச்சொல்லுங்கள் !

இல்லையேல் மலையப்பனிடம்
என்னை அங்கே அழைத்துப்
போகச்சொல்லுங்கள் . . .


Read more...

Tuesday, March 20, 2012

திருமழிசை . . .

ராதேக்ருஷ்ணா
 
 
திருமழிசை ஆழ்வாரே . . .
நீர் வாழ்க . . .
 
 
திருமலைக்குச் செல்லும்
வழியில் திடீரென்று திருமழிசையில்
நுழைந்தோம் . . .
ஜகந்நாதன் இழுத்தான் . . .
 
 
எத்தனை நாளாக
செல்லவேண்டும் என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன் . . .
 
 
எத்தனை நாளாக
ஒரு சிஷ்யன் அழைத்துக்
கொண்டேயிருந்தான் . . .
 
 
எத்தனை முறை திருப்பதிக்கு
அந்த வழியாக
சென்றிருக்கிறேன் . . .
 
 
ஆனால் ஒரு நாள் கூட
போக முடியவில்லை . . .
 
 
ஆனால் இந்தமுறை
திருமழிசை ஆழ்வாரும்,
ஜகந்நாதனும் என்னை
இழுத்துவிட்டார்களே . . .
 
 
திருமழிசை ஆழ்வார்
பிறந்த ஸ்தலத்திற்குச்
சென்றதே பரம சுகம் . . .
 
 
பார்கவ முனிவரும்,
கனகாங்கி தேவியரும்
பெற்ற பிண்டாகாரமான
பிள்ளை பிறந்த ஊர் . . .
 
 
பிரம்புத்தூற்றில்
பிண்டத்தை போட்டுவிட
ஜகந்நாதன் உடலும்,
உயிரும் தந்த ஊர் . . .
 
 
தன் தரிசனம் தந்து,
ஜகந்நாதன் அழகாய் மறைய
குழந்தை அழ திருவாளன்
அதைக் கேட்ட ஊர் . . .
 
 
திருவாளனும்,அவர் மனைவியும்
தன் பிள்ளையாய் திருமழிசை ஆழ்வாரை
வளர்த்த ஊர் . . .
 
 
வயோதிக தம்பதிகள்
தந்த பாலை மட்டும் அருந்தி
தன் பலத்தை குழந்தை
நிரூபித்த ஊர் . . .
 
 
7 வயதில் ஜகத்காரண
வஸ்துவைத் தேடி
வேதத்தில் கண்டுபிடித்து
அதை ஆழ்வார் தியானித்த ஊர் . . .
 
 
 சிவபெருமானும் திருமழிசை
ஆழ்வாரை பக்திசாரர்
என்று கொண்டாடின ஊர் . . .


வீற்றிருக்கும் ஜகந்நாதன்
தன்னை விட திருமழிசை ஆழ்வார்
உயர்ந்தவர் என்று சொல்லும் ஊர் . . .


திருமழிசை ஆழ்வாரின்
வலது பெருவிரலில் கண்ணைக்
காட்டும் அழகான ஊர் . . .
 
 
அமைதியான திருமழிசையின்
அழகிலும்,ஜகந்நாதனின் சொரூபத்திலும்,
ஆழ்வாரின் ஆசீர்வாதத்திலும்
நான் என்னையே மறந்தேன் . . .
 
 
திரும்பவும் திருமழிசை
செல்ல ஆசையோடு காத்திருக்கிறேன் !
 
 

Read more...

Sunday, March 18, 2012

அனுபவிப்போம் வா . . .

ராதேக்ருஷ்ணா


ஸ்ரீநிவாசா . . . கோவிந்தா !


இப்பொழுது திருமலைக்குச்
செல்லப்போகிறேன் . . .


நேற்று என் தாயார்
அலர்மேல்மங்காவை
சுகமாய் தரிசித்தேன் !


நிஜமாகவே என் தாயாரைப்
பார்த்தபிறகு என் மனம்
நிறைவாய் உள்ளது . . .


இதன் பிறகு ஸ்ரீநிவாசனைப்
பார்க்க அவசியமே இல்லை . . .


ஆயினும் எங்கள் குலசேகர
ஆழ்வார் ஏதேனும்
ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட
திருமலையில் சிறிது நேரம்
நிற்க எனக்கு ஆசை . . .


படியாய் கிடந்து உன் பவளவாய்
காண்பேன் என்று குலசேகரர் புலம்பிய
திருமலையப்பனை
பார்த்தால் சுகம்தானே . . .


எங்கள் திருமலை அனந்தாழ்வானிடம்
தாடையில் கடப்பாறையால்
அடிவாங்கினவனைப் பார்த்தால்
பரமசுகம்தானே . . .


வகுளமாலிகாவின் ஸ்வீகார
புத்திரனை, திருமலையில் வாடகைக்கு
சுகமாய் நிற்பவனைப் பார்த்தால்
எல்லையில்லா சுகம்தானே . . .


எங்கள் இராமானுஜர் சங்கும்,சக்கரமும்
தர அதை சுகமாய் சுமப்பவனை
பார்த்தால் சொல்லமுடியாத
தொல்லை இன்பம் தானே . . .


திருமலை நம்பிகளின்
தீர்த்த பாத்திரத்தில் துளையிட்டு
தாகம் தீர நீரருந்தி,அவரை
அப்பா என்றழைத்தவனை
பார்த்தால் மோக்ஷம் தானே . . .


ஹாத்தி ராம் பாவாஜீயோடு
நித்தியம் சொக்கட்டான்
ஆடி பொழுது போக்குகின்றவனைப்
பார்த்தால் படு குஷி தானே . . .


என் அலர்மேல்மங்கையின்
கணவனைப் பார்க்கவே
திருமலைக்குப் போகிறேன் . . .


திருமலைக்குச் சொந்தக்காரரான
லக்ஷ்மி வராஹரைத் தரிசிக்கவே
திருமலைக்குப் போகிறேன் . . .


வா . . .போய் அனுபவிப்போம் வா . . .

Read more...

Saturday, March 17, 2012

லட்டு வேண்டுமா ! ! !

ராதேக்ருஷ்ணாதிருமலைக்குச் செல்கிறேன் !

உனக்கு என்ன வேண்டும் ?
யாரிடம் என்ன சொல்லவேண்டும் ?


அலர்மேல்மங்கை அன்னையிடம்
உன் அன்பைச் சொல்லவா ! ! !


திருமலை ஆழ்வாரிடம்
உன் நமஸ்காரத்தைச் சொல்லவா ! ! !


லக்ஷ்மி வராஹ ஸ்வாமியிடம்
உன் தேடலைச் சொல்லவா ! ! !


ஸ்ரீ உறையும் மார்பன் ஸ்ரீநிவாசனிடம்
உன் சரணாகதியைச் சொல்லவா ! ! !


ஸ்வாமி புஷ்கரணியிடம்
உன் தாபத்தைத் தணிக்கச் சொல்லவா ! ! !


மண் பூவை இட்ட குரவநம்பியிடம்
உன் நம்பிக்கையைச் சொல்லவா ! ! !


பிணமெழுப்பின தொண்டைமானிடம்
உன் தீர்மானத்தைச் சொல்லவா ! ! !


குலசேகர ஆழ்வாரிடம் நீ திருமலையில்
படியாய் கிடக்க அனுமதியைக் கேட்கவா ! ! !


திருமலை நம்பிகளிடம்
உன் தாகத்தைச் சொல்லவா ! ! !


முழங்காலிட்டு ஏறின பாஷ்யகாரரிடம்
உன் தேவையைச் சொல்லவா ! ! !


திருமலை அனந்தாழ்வானிடம்
அவரின் கடப்பாறையை தரச்சொல்லவா ! ! !


ஹாத்திராம் பாவாஜீயிடம்
உன் விளையாட்டைச் சொல்லவா ! ! !


என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ,
அத்தனையும் நீ மனதிற்குள் சொல் . . .


அதை நீ சொன்னதாக
நான் உன் மலையப்பனிடம்
சொல்லிவிடுகிறேன் . . .

லட்டு வாங்கி வரட்டுமா ?
ஸ்ரீநிவாசன் சுவைத்த லட்டு வேண்டுமா ! ! !


விடாமல் ஸ்ரீநிவாசா . . .கோவிந்தா
என்று ஜபித்துக்கொண்டேயிரு . . .


லட்டும் கிடைக்கும் . . .
மோக்ஷமும் கிடைக்கும் . . .
அலர்மேல்மங்காவும் கிடைப்பாள் !
ஸ்ரீ ஸ்ரீநிவாசனும் கிடைப்பான் !
 

 

Read more...

Thursday, March 15, 2012

நாத்திகவாதி . . .

ராதேக்ருஷ்ணா

நாத்திகம் . . .

யார் நாத்திகவாதி ?


கடவுள் இல்லையென்று
வெளியில் சொல்பவன்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளைக் கிண்டல்
செய்துகொண்டிருப்பவன்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளை நம்புபவர்களை
பரிகசித்து சிரிப்பவர்கள்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளைப் பற்றி
சந்தேகமாக கேள்வி கேட்பவர்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளின் மேல்
சந்தேகம் உள்ளவர்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளை அடையும்
வழிகளை விமர்சிப்பவர்
நாத்திகவாதியல்ல . . .


கடவுளின் பெயர்களை
பரிகாசமாய் சொல்லுபவர்கள்
நாத்திகவாதியல்ல . . .
கடவுள் இருப்பதை
ஏற்கமுடியாதவர்கள்
நாத்திகவாதியல்ல . . .
பக்தர்களை பரிகசித்து
அவர்களை கேள்வி கேட்பவர்
நாத்திகவாதியல்ல . . .கடவுளை நிந்தித்து
அதனால் சந்தோஷமடைபவன்
நாத்திகவாதியல்ல . . .


பிறகு யார் தான்
நாத்திகவாதி ? ? ?


கடவுளைப் பற்றி
யோசிக்காதவனே
நாத்திகவாதி . . .


இதுவே என் தீர்மானம் . . .


அதன்படி பார்த்தால்
உலகில் எவருமே
நாத்திகவாதியல்ல . . .

Read more...

Wednesday, March 14, 2012

உத்திரமேரூர் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
இன்று நான் அடைந்தது
அற்புத ஆனந்தம் . . .
 
 
யுதிஷ்டிரர் பூஜித்த
சுந்தர வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
அர்ஜுனன் பூஜித்த
அச்யுத வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
நகுலன் பூஜித்த
அனிருத்த வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
சகதேவன் பூஜித்த
கல்யாண வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
பீமன் பூஜித்த
வைகுண்ட வரதனை
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
அர்ஜுனனுக்கு உபதேசித்த
க்ருஷ்ணனை அவனோடு
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
ப்ரஹ்லாத வரதனான
யோக நரசிம்மனை
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
அழகாய் உபதேசிக்கும்
லக்ஷ்மி வராஹ ஸ்வாமியை
முதல்மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
தலைக்கும் கைக்கும்
தலையணையை வைத்துப்
படுத்திருக்கும் அரங்கநாதனை
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
முதல்முதலாக
திருமண் சகிதமான சிவபெருமானை
அரங்கனின் அருகில்
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
கங்கையும் யமுனையும்
வாயில் காப்பவர்களாக இருக்க
மார்கண்டேயரின் தலையில் கைவைத்து
அன்பாய் ஆசிர்வதிக்கும் அரங்கனை
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
1000 பிராம்மணர்கள் வேதம் ஓதிய
உத்திரமேரூரில் ஆனந்தமாய்
வீற்றிருக்கும் ஆனந்தவல்லித் தாயாரை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
 
 
நவமூர்த்திகளை நன்றாகத்
தரிசித்த சந்தோஷத்தில்
நிம்மதியாய் வந்தேன் . . .
 
 

Read more...

Monday, March 12, 2012

ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .

ராதேக்ருஷ்ணா

ஆராவமுதா . . .
ஏனடா இப்படிப் படுத்திருக்கிறாய் !

சார்ங்கபாணி . . .
எத்தனை அழகாகப் படுத்திருக்கிறாய் !

குடந்தை அழகா . . .
குழந்தை போலே படுத்திருக்கிறாய் !

கோமளவல்லி நாதா . . .
தலை தூக்கி சுகமாய் படுத்திருக்கிறாய் !

திவ்யப்ரபந்தம் தந்த நாயகா . . .
என்னைப் படுத்தவே படுத்திருக்கிறாய் !

நாதமுனி ப்ரியா . . .
ஆதிசேஷனின் மேல் படுத்திருக்கிறாய் !

செந்தாமரைப் பாதனே . . .
  நீ வாழ்க . . .

கிடந்தவாறு பேசும் அற்புதமே . . .
நீ வாழ்க . . .


கும்பகோணத்தின் ராஜனே . . .
நீ வாழ்க . . .


நான் உன்னைப் பார்க்காமல்
போனாலும்,நீயே என்னை
உன் பக்கம் இழுத்தாயடா . . .


என் செல்லமே . . .
சத்தியமாய் நீ பக்தரை
பரவசப்படுத்தும் பெருமாள் தான் . . .திருமழிசை ஆழ்வாரை
புலம்ப வைத்த சமத்தே . . .


ஸ்வாமி நம்மாழ்வாரை
ஆராவமுதே என பரவசப்படவைத்த
கருமாணிக்கமே . . .


என்னையும் உன் கோஷ்டியில்
வைத்துக்கொண்டாயே . . .
எத்தனை கருணை உனக்கு . . .

ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .


நீயும் அழகு . . .
உன் கோயிலும் அழகு . . .
உன் ஊரும் அழகு . . .
உன் காவிரியும் அழகு . . .
உன் ப்ரபந்தங்களும் அழகு . . .
உன் பக்தர்களும் அழகு . . .
உன் தேவியும் அழகு . . .
உன் யானையும் அழகு . . .
உன் கோபுரமும் அழகு . . .
உன் வீதியும் அழகு . . .


உன்னோடு சேர்ந்த எல்லாமே அழகுதான் . . .
நான் உட்பட . . .


உன்னைப் பார்த்தவுடன்
எழுத ஆரம்பித்த இதை
ஒன்பது நாள் கழித்து
முடிக்க வைத்து,
உன்னை மறவாமல்
நினைக்க வைக்கச் செய்த
உன் லீலையோ அழகோ அழகு ! ! !

Read more...

Sunday, March 4, 2012

எங்கே . . .எங்கே !

ராதேக்ருஷ்ணா
 
 
ஸ்ரீரங்கம் . . .
 
பூலோக வைகுண்டம்  . . .
 
 
ராமானுஜரின்
தானான திருமேனி எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
ஸ்ரீரங்கநாயகி
கருணை கண்ணழகு எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
ஆண்டாளின் கண்ணாடி
சேவை எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
இரண்டாற்றங்கரை
அழகு எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
மோக்ஷம் தரும் பெருமாள்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
முத்தங்கி சேவை அழகு
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
நம்பெருமாளின் நடையழகு
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
ஒய்யாரக் கிளி மண்டபம்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
திருப்பாணாழ்வார் திவ்ய
தரிசனம் எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
விபீஷணனின் பெரிய பெருமாள்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
தயிர்காரிக்கு மோக்ஷம்
கிடைத்தது எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
பாவமெல்லாம் அழியும் இடம்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
தொண்டரடி நந்தவனம்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
பரவாசுதேவ தரிசனம்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
சைதன்யர் மகிழ்ந்த இடம்
எங்கே எங்கே ?
 
ஸ்ரீரங்கம் வந்து பார் . . . இங்கே இங்கே !
 
 
எங்கும் சுத்தி ரங்கம் வா  . . .
உடனே . . . உடனே . . .
 
உன் மனக்கவலை தீரும் இங்கே
உடனே . . . உடனே . . .
 
               

Read more...

Thursday, March 1, 2012

வசந்தம் வரும் . . .

ராதேக்ருஷ்ணா


எது சரி . . . எது தவறு . . .


எது நல்லது . . . எது கெட்டது . . .


 எது தேவை . . . எது தேவையில்லை . . .


எது உயர்ந்தது . . . எது தாழ்ந்தது . . .


எது நடக்கும் . . . எது நடக்காது . . .


ஒன்றும் புரியவில்லை . . .


ஆனாலும் வாழ்கிறோம் . . .

ஏன் ?
நிச்சயம் ஒரு நாள்
வாழ்வில் விடியல் வரும்
என்ற ஒரு நம்பிக்கைதான் . . .


இந்த நம்பிக்கையே
உனக்கு எல்லாம் தரும் . . .


நம்பு . . .
க்ருஷ்ணன் உண்டு . . .

உன் வாழ்வில் வசந்தம்
கட்டாயம் வரும் . . .


க்ருஷ்ணனை நம்பி காத்திரு . . .

நம்பினார் கெடுவதில்லை . . .

நிச்சயம் வாழ்வில் வசந்தம்
வந்து கொண்டிருக்கிறது . . .


வசந்தத்தை வரவேற்கவும்,
அனுபவிக்கவும் உன்னை
தயார்படுத்திக்கொள் . . .


 

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP