ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 மார்ச், 2012

ஞாபகம் . . .

ராதேக்ருஷ்ணா




ஞாபகம் வருமா ?
ஞாபகம் இருக்குமா ?




சிறிய வயதில் பொம்மைகளின்
ஞாபகம் இருந்தது . . .
அவை எதுவுமே இன்று ஞாபகமில்லை !




பள்ளிக்கூட வயதில் பாடங்கள்,
விளையாட்டுக்கள் ஞாபகம் இருந்தது . . .
அதில் பல இன்று ஞாபகமில்லை !




கல்லூரி வயதில் நிறைய
நண்பர்களின் ஞாபகம் இருந்தது . . .
அவர்களில் பலரை இன்று ஞாபகமில்லை !




சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு
பல செலவுகள் ஞாபகமிருந்தது . . .
ஆனால் இன்று எதற்கு எத்தனை செலவு
செய்தோம் என்று ஞாபகமில்லை !




இன்று காலை என்ன சாப்பிட்டோம்
என்று அப்பொழுது ஞாபகமிருந்தது . . .
இப்பொழுது அது பெரியதாக ஞாபகமில்லை !




இப்படி பல விஷயங்களை
வாழ்வில் நாம் மறந்துவிட்டோம் . . .
சில விஷயங்கள்
மட்டுமே இன்று ஞாபமிருக்கிறது !




அதனால் நாம் ஞாபக மறதிகள்
என்பது தெளிவாகத் தெரிகிறது !




தெரியாது . . .
இரவில் தூக்கத்தில் நம்மை மறக்கிறோம் !




அது போலே மரண சமயத்தில்
க்ருஷ்ணனை மறப்போம் . . .
இது நிச்சயம் . . .


ஆனால் க்ருஷ்ணன் மறக்கப்போவதில்லை !
இது சத்தியம் . . .




போன ஜன்மம் மறந்துபோனது . . .
அடுத்த ஜன்மம் தெரியாது . . .


இந்த ஜன்மாவில் இன்னும் எத்தனை நாள் ?
தெரியவில்லை . . .




இப்பொழுது ஞாபகமிருக்கிறது . . .
சொல்லிவைக்கிறேன் . . .
க்ருஷ்ணா. . . க்ருஷ்ணா. . . க்ருஷ்ணா
 சத்தியமாய் இந்த நாமம் என்னை மறக்காது . . .
நிச்சயமாய் இந்த நாமம் என்னை கைவிடாது . . .
உறுதியாய் இந்த நாமம் என்னைவிட்டு விலகாது . . .


என் அந்திம காலத்தில் ஒரு வேளை
நான் க்ருஷ்ணா என்று சொன்னால்,
சத்தியமாய் அது என் பலமில்லை . . .


க்ருஷ்ணா என்னும் நாம ஜபத்தின்
பலத்தினால் மட்டுமே நான்
அந்திம காலத்தில் க்ருஷ்ணா என்று சொல்லுவேன் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP