ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, April 9, 2012

நடக்கின்றேன் . . .

ராதேக்ருஷ்ணா


நடப்பது நன்மைக்கே . . .

என் பத்மநாபனோடு நடந்தேன் . . .

நடக்கும்போது
என் மனதில் சிந்தனைகளின் ஓட்டம் !

நான் ஏன் இவனோடு நடக்கவேண்டும் ?
 என்ன அவசியம் ?
இவனோடு நடப்பதால் என்ன ப்ரயோஜனம் ?


எனக்குப் பதில் கிடைத்தது . . .

என்னால் மனதை அடக்கி
வாழ்க்கையை நடத்தமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் இந்திரியங்களை
நல்வழியில் ஈடுபடுத்தமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் கர்மங்களை
சிரத்தையோடு செய்யமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் என் பலத்தினால்
காமத்தை ஜெயிக்கமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் என் கோபத்தை
கட்டுப்படுத்த முடியவில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என் புத்தி சாதுர்யத்தினால்
நான் என் ப்ராரப்த கர்மாவை
தொலைக்கமுடியாது . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் நல்ல பக்தனில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் உத்தம ஞானியில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் எல்லாவற்றையும் துறந்த
சன்னியாசியில்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் சம்சார சாகரத்தில்
உழண்டுகொண்டிருக்கும் ஒரு
அதம ஜீவன் . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

நான் கையாலாகதவன் . . .

என் பத்மநாபனைத் தவிர
எனக்கு வேறு ரக்ஷகன் இல்லை . . .
அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

என்னால் அவனோடு
ஆறு மாதத்திற்கு ஒரு முறை
சங்குமுக கடற்கரைக்கு
நடக்க மட்டுமே முடியும் . . .

அதனால் என் அனந்தபத்மநாபனோடு
நடக்கின்றேன் . . .

இதை மட்டுமே நான் செய்வேன் . . .
மற்றவை அவனிஷ்டம் . . .

அனுபவத்தில் நான் கண்டது . . .

நடப்பது நன்மைக்கே . . .
பத்மநாபனோடு நடப்பது நன்மைக்கே . . .
 என் பத்மநாபனோடு நடப்பது நன்மைக்கே . . .

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP