ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, July 31, 2012

ஆதிகேசவனை அடை . . .

ராதேக்ருஷ்ணாதிருவட்டாறு ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

கேசனை வதம் செய்து, கேசியின்
மேல் துயில் பயிலும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

என் பத்மநாபனின் அண்ணன் ஆதிகேசவன்
 அடி இணை அடை மட நெஞ்சே . . .

சேர நாட்டு ஸ்ரீரங்கனான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


22 அடி உயரமான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

16008 சாளக்ராம மூர்த்தியான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


கங்கையும் தாமிரபரணியும் தொழும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

திருவடி அருகில் சிவனுக்கு
இடம் தந்த அழகன் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


மது கைடபரையும் தன் திருவடியில்
பத்திரமாய் வைத்திருக்கும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


பஞ்சாயுதங்களையும் ஜாக்கிரதையாய்
தன் கண்பார்வையில் கொண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . . 

வசீகர முகம், ஈர்க்கும் கண்கள்,
காக்கும் கைகள் கொண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . . 

ஹாதலேய முனிவரின் தகப்பன் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆதி அனந்தபுரத்து ஆதி கேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


வசிஷ்டரும் தவமிருந்து கண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

பரசுராமரின் பூஜையில் திளைத்த ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


நம்மாழ்வார் மயங்கின ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

சூரியனும் தன் கதிர் கரங்களால்
புரட்டாசி, பங்குனியில் பூஜை செய்யும்
ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யருக்கு
ப்ரும்ம சம்ஹிதை தந்த ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆற்காட் நவாபையும் தனக்கு
மண்டபமும்,தொப்பியும் தர வைத்த
ஆதிகேசவன் அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆர்ப்பாட்டம் இல்லாத பக்தர்களின்
பக்தவத்சலனான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

 வட்டமாய் பரளி ஆறு சூழ்ந்திருக்க,
பூமி தேவி தந்த சிறிய மேட்டில்,
நிம்மதியாய் சயனிக்கும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


பத்மநாப தாசனான கோபாலவல்லியையும்,
தன் கருணையால் ஆண்ட
அண்ணன் ஆதி கேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

  

Read more...

Monday, July 30, 2012

நீயே ஜெயிப்பாய் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
 விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு !
 
 
தோற்றால் புலம்பாதே . . .
போராடு !
 
 
கிண்டலடித்தால் கலங்காதே . . .
 மன்னித்துவிடு !
 
 
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !


நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !


ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !


நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !
 
 
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !


உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !
 
 
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !


மொத்தத்தில் நீ பலமாவாய் . . .
சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .
 
 
உன்னால் முடியும் . . .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
 
 
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
 உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .


 நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .


நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .


நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .


நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய் . . .

Read more...

Saturday, July 28, 2012

திருமகளே . . .

ராதேக்ருஷ்ணா


திருமகள் பிறந்ததால்
திருப்பாற்கடலும் மஹிமை பெற்றது !
திருமகளைப் பெற்றதால்
சமுத்திரராஜனும் மேன்மையடைந்தான் !
திருமகளோடு பிறந்ததால்
சந்திரனும் அம்புலி மாமாவானான் !திருமகளைத் திருமணம் செய்ததால்
திருமாலும் தேவாதி தேவனானான் !
திருமகளோடு சம்மந்தம் ஏற்பட்டதால்
தாமரைக்கும் தெய்வீகம் வந்தது !திருமகளின் திருவடியில் இருப்பதால்
சலங்கையிலும் நாதம் பிறந்தது !
திருமகள் பிடித்து சேவை செய்வதால்
திருமாலின் செவ்வடியும் திருவடியாயிற்று !

திருமகளுக்கு தன் மார்பில் இடம் தந்ததால்
பெருமாளும் திருமால் ஆனார் !
திருமகளின் கருணையால் தான்
சம்சாரிக்கும் சரணாகதி கிடைத்தது !
திருமகளே வர மகளாய் வந்ததால்
விதேஹனும் விண்ணை அடைந்தான் !
திருமகளே மருமகளாய் வந்ததால்
தயரதனும் துயரம் தீர்ந்தான் !
திருமகளின் திருவடியை அடைந்ததால்
சிறியவனும் மன்னவனின் தகப்பனானான் !
திருமகளுக்காகத் தீரமாய் போரிட்டதால்
ஜடாயுவும் திருலோகம் அடைந்தார் !
திருமகளின் திருவாபரணத்தால்
சுக்ரீவனும் திருமாலின் தோழனானான் !
திருமகளிடம் தூது சென்றதால்
ஆஞ்சனேயனும் சிறிய திருவடியானான் !
திருமகளுக்காகப் பேசினதால்
விபீஷணனும் திருப்பாதம் அடைந்தான் !
திருமகள் வந்ததாலேயே வால்மீகியும்
திருத்தமாக ராமாயணம் சொன்னான் !
திருமகளைத் தந்தும் ஏற்றும்
பூமியும் திருந்திய செல்வமடைந்தாள் !
திருமகளே ஒரு மகளாய் கிடைத்ததால்
பீஷ்மகனும் கண்ணனின் மாமனாரானான் !
திருமகளுக்காகத் தூது போனதால்
பெரிய திருவடியும் தாபம் தீர்ந்தான் !திருமகள் திருநாரணனைத் தடுத்ததாலேயே குசேலனும் குறைவிலா திருமகனானான் !
திருமகள் தைரியமாய் துளசியைத் தந்ததால்
சத்தியபாமாவும் சமத்தானாள் !
திருமகள் வயிற்றில் சுமந்ததால்
காமனும் கண்ணனின் மகனானான் !
திருமகளால் தேவதேவியின் காதலனும்
தொண்டரின் அடிப் பொடியானான் !
திருமகளின் தாகம் தணிக்கத் தானே
ராமானுஜனும் தீர்த்தம் சுமந்தான் !
திருமகளின் கருணைக் கண் பார்வைக்கு
பராசர பட்டரும் ரங்கனின் வாயடைத்தான் !
திருமகளே . . . நீயே எங்களுக்கு
திருமாலின் திருவடியைத் தருவாய் !
திருமகளே . . .கருவிலே
திருவிலாததால் இருளிலே இருக்கின்றேன் . . .
திருமகளே . . . உன் கருவிலே
ஒரு நாள் வாழ  விரைந்து அருள் தா . . .
திருமகளே . . . உன் நிழலிலே
மழலையாய் உழல அனுமதி தா . . .
திருமகளே . . .
உன் மடியிலே மரணம் அடைய
நின் மகனுக்கு வரம் தா . . .
திருமகளே . . .
அடியேன் மறப்பேன் . . .
நீ மறவாய் . . .
சிறியேன் உன் தாசன் ! ! !
திருமகளே . . .திரு வாய், , , திறவாய் . . .
திருமகளே . . .வருவாய் , , ,தருவாய் . . .
Read more...

Thursday, July 26, 2012

அதுவே திருவனந்தபுரம் . . .

ராதேக்ருஷ்ணா
மூன்று துன்பங்கள் . . .
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் !
ஒரு தீர்வு !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று உலகங்கள் . . .
பூலோகம், புவர் லோகம் , ஸ்வர் லோகம் !
ஒரு ராஜாதிராஜன் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று நிலைகள் . . .
விழிப்பு, கனவு, உறக்கம் !
ஒரு காப்பு !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று குணங்கள் . . .
சாத்வீகம், ராஜஸம், தாமஸம் !
ஒரு சமாதானம் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தொழில்கள் . . .
படைத்தல், காத்தல், அழித்தல் !
ஒரு தலைவன் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தெய்வங்கள் . . .
ப்ரும்மா, விஷ்ணு, சிவன் !
ஒரு ப்ரும்மம் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று வியாதிகள் . . .
பிறப்பு, இருப்பு, இறப்பு !
ஒரு மருந்து !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று மனித சரீரங்கள் . . .
ஆண், பெண், அலி !
ஒரு காவலன் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று புதிர்கள் . . .
அஞ்ஞானம், விஞ்ஞானம், மெய்ஞானம் !
ஒரு விடை !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று மதங்கள் . . .
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் !
ஒரு வழி !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தீர்த்தங்கள் . . .
பத்ம தீர்த்தம், வராஹ தீர்த்தம், சங்குமுகம் !
ஒரு புண்ணியம் !
அதுவே திருவனந்தபுரம் . . .


மூன்று தேவிமார்கள் . . .
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி !
ஒரு நாயகன் !
அதுவே திருவனந்தபுரம் . . .மூன்று வாசல் . . .
திருவடி வாசல்,திருநாபி வாசல்,திருமுக வாசல் !
ஒரு தெய்வம்  !
அதுவே திருவனந்தபுரம் . . .

Read more...

Wednesday, July 25, 2012

சுதாமா . . .

ராதேக்ருஷ்ணாசுதாமா . . .
ஸ்ரீ க்ருஷ்ணனின் சகா !


சுதாமா . . .
தரித்ரத்தை ரசித்த வைராக்யசாலி !


சுதாமா . . .
பகவானிடம் எதையும் கேட்காதவன் !


சுதாமா . . .
பகவானை தன்னிடம் கேட்க வைத்தவன் !


சுதாமா . . .
சாந்தீபனி ரிஷியின் உன்னத சிஷ்யன் !


சுதாமா . . .
ஸ்ரீ க்ருஷ்ணனின் பால்ய சினேகிதன் !


சுதாமா . . .
வேதத்தை உள்ளபடி அறிந்தவன் !


சுதாமா . . .
ப்ரும்மத்தை அறிந்த சரியான ப்ராம்மணன் !


சுதாமா . . .
பக்திக்காக பக்தி செய்த பக்தன் !சுதாமா . . .
க்ருஷ்ணனை ஆனந்தத்தில் அழ வைத்தவன் !சுதாமா . . .
ருக்மிணியை சாமரம் வீச வைத்த ஞானி !சுதாமா . . . 
அவலையும் பக்தியோடு தந்தவன் !சுதாமா . . .
க்ருஷ்ணனோடு 64 நாள் பயின்றவன் !சுதாமா . . .
க்ருஷ்ணனை பாத பூஜை செய்யவைத்தவன் !சுதாமா . . .
என்னை தெளிய வைத்தவன் . . .சுதாமா . . .
எனக்கு ஞானம் தந்தவன் . . .சுதாமா . . .
எனக்கு வைராக்யம் அருளினவன் . . .சுதாமா . . .
சுதாமா. . . சுதாமா. . .
க்ருஷ்ணனே ஜபித்த இந்தத் திருநாமம்
எனக்குப் போதும் . . .


சத்தியமாய் க்ருஷ்ணன்
என்னிடம் ஏதாவது கேட்பான் . . .

Read more...

Tuesday, July 24, 2012

இன்றோ திருவாடிப்பூரம் !

ராதேக்ருஷ்ணா 

இன்றோ திருவாடிப்பூரம் !இன்றோ நம் கோதை பிறந்தாள் !இன்றோ பெரியாழ்வார் பெற்றார் !
இன்றோ வடபத்ரசாய் மகிழ்ந்தான் !இன்றோ துளசி நெகிழ்ந்தது !இன்றோ விண்ணவர் மகிழ்ந்தனர் !இன்றோ மண்ணவர் திருந்தினர் !இன்றோ நாம ஜபம் ஜெயித்தது !இன்றோ க்ருஷ்ண ப்ரேமை சித்தித்தது  !
இன்றோ கலி கெட்டது !
இன்றோ பூமி சிலிர்த்தது !
இன்றோ பாபங்கள் அழிந்தது !இன்றோ க்ருஷ்ணன் திளைத்தான் !
இன்றோ ரங்கன் மயங்கினான் !இன்றோ ஸ்ரீநிவாசன் புலம்பினான் !இன்றோ ஞானம் பிறந்தது !இன்றோ வைராக்கியம் வந்தது !இன்றோ ஸ்ரீவில்லிபுத்தூர் ப்ருந்தாவனமானது !இன்றோ இடைச்சிகள் காதலடைந்தது !இன்றோ பிராமணர்கள் அடங்கியது !இன்றோ நமக்கு பக்தி வந்தது !இன்றோ கோபாலவல்லி
ஆண்டாள் கைக் கிளியானது !இன்றே தான் . . .Read more...

Monday, July 23, 2012

நான் அறியேன் . . .

ராதேக்ருஷ்ணாதிருவனந்தபுரத்தில்
இருக்கிறேன் . . .எல்லா இடர்களையும்
கெடுக்கும் பத்மநாபனின்
அந்தப்புரத்தில் இருக்கிறேன் !இன்று போய் புகுவாய்
என்று நம்மாழ்வார் சொன்ன
அனந்தபுரியில் இருக்கிறேன் !பாகவத ப்ரியனான
பத்மநாபன் படுத்திருக்கும்
ஸ்யானந்தூரத்தில் இருக்கிறேன் !விண்ணோர் அகப்பணி செய்து
அனந்தனின் அருளுக்காக ஏங்கும்
அனந்தபுரத்தில் இருக்கிறேன் !ஆராட்டு நாயகனின், வேட்டைக்காரனின்
விந்தையான திருவனந்தபுரத்தில்
சுகமாய் இருக்கிறேன் !


ராமானுஜரை இரவோடு இரவாக
திருக்குறுங்குடியில் கொண்டு விட்ட
திருடனின் புரத்தில் இருக்கிறேன் !


ஒன்றரை லக்ஷம் கோடி கொண்ட,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனின் அருகில் இருக்கின்றேன் !


த்வாரகையிலிருந்து ஓடி வந்து,
அனந்தன் காட்டில் ஒளிந்திருக்கும்
மாயனின் ஊரில் இருக்கிறேன் !


பதினெட்டு மைல் த்ரிவிக்ரமன்,
பதினெட்டு அடியாய் சுருங்கி வாமனான
உத்தமனின் புரியில் இருக்கிறேன் !


கண்ணும்,கையும்,காலும் தாமரையான,
கையில் தாமரையோடு சயனிக்கும்
தாமரையாள் கேள்வனோடு இருக்கிறேன் !இன்னும் எத்தனை நாள்
பத்மநாபன் என்னை இங்கே
வைத்திருப்பானோ ?
அவனே அறிவான் . . .
நான் அறியேன் . . .


திரு அனந்த புரம் . . .
திருவுக்கும் அந்தப்புரம் . . .
அனந்தனுக்கும் அந்தப்புரம் . . .
பத்மத்திற்கும் அந்தப்புரம் . . .
பத்மநாபனுக்கும் அந்தப்புரம் . . .இந்த கோபாலவல்லிக்கு ஆனந்தபுரம் . . .

Read more...

Saturday, July 21, 2012

வில்லிபுத்தூர் . . .

ராதேக்ருஷ்ணா

 கோதை பிறந்த ஊர் !
பேதைமையை நீக்கும் ஊர் . . .கோவிந்தன் வாழும் ஊர் !
கோமாதாவை ரக்ஷிக்கும் ஊர் . . .சோதி மணிமாடங்கள் தோன்றும் ஊர் !
நித்தியமாய் பக்தி செய்யும் ஊர் . . .நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் !
நீங்காத செல்வம் நிறைந்த ஊர் . . .நான் மறைகள் ஓதும் ஊர் !
நாலாயிரமும் ஜெபிக்கும் ஊர் . . .வில்லிபுத்தூர் வேதக் கோன் ஊர் !
விதியை மாற்றி வாழவைக்கும் ஊர் . . .பாதகங்கள் தீர்க்கும் ஊர் !
பாவியரை பக்தராக்கும் ஊர் . . .பரமனடி காட்டும் ஊர் !
பரமனை மாப்பிள்ளையாய் அடைந்த ஊர் . . .வேதம் அனைத்திற்கும் வித்தான ஊர் !
வேதநாதன் சயனிக்கும் ஊர் . . .கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் பாடும் ஊர் !
அறியாத மானிடரை திருத்தும் ஊர் . . .கருடனையும் கர்ப்பக்ருஹத்துள்
மரியாதையாய் தொழும் ஊர் !
காரேய் கருணை ராமானுசனை
மாமனாய் அடைந்த ஊர் . . .
திருவாடிப்பூரத்தை ரசிக்கும் ஊர் !
திருந்தண்கால் அப்பனும் வரும் ஊர் . . .யமுனையும் திருமுக்குளமான ஊர் !
எமனையும் விரட்டியடிக்கும் ஊர் . . .நாழிக்கிணற்றில் கண்ணன் வரும் ஊர் !
நாழிகையில் கண்ணனைக் காட்டும் ஊர் . . .கிளியும் நாமம் சொல்லும் ஊர் !
கலியும் கெடும் என்று உணர்த்தும் ஊர் . . .சூடிக் களைந்தாளின் சுடர் மிகு ஊர் !
பல்லாண்டு பாடுபவரின் பக்தி ஊர் . . .ஐந்து கருட சேவை ஊர் !
ஐயமெல்லாம் தீர்க்கும் ஊர் . . .கோபாலவல்லியின் காதல் ஊர் !
கோபாலவில்லியாக்கிய விந்தை ஊர் . . .வினைகள் எல்லாம் நீங்கும் ஊர் !
வில்லிபுத்தூர் என்னும் ப்ரேமை ஊர் . . .Read more...

Wednesday, July 18, 2012

சோறு வேண்டுமா ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
ஆகாரம் . . .
உலகின் ஆதாரம் . . .
 
 
 
சிறு பூச்சிக்கும் ஆகாரம் தேவை !
பெரிய யானைக்கும் ஆகாரம் தேவை !
நல்ல மனிதருக்கும் ஆகாரம் தேவை !
மஹா பாபிக்கும் ஆகாரம் தேவை !
உத்தம பக்தருக்கும் ஆகாரம் தேவை !
நாஸ்தீகவாதிக்கும் ஆகாரம் தேவை !
 
 
பணக்காரருக்கும் ஆகாரம் தேவை !
பிச்சைக்காரனுக்கும் ஆகாரம் தேவை !
அழகிக்கும் ஆகாரம் தேவை !
குரூபிக்கும் ஆகாரம் தேவை !
சிறுவருக்கும் ஆகாரம் தேவை !
பெரியவருக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
ஞானிக்கும் ஆகாரம் தேவை !
அஞ்ஞானிக்கும் ஆகாரம் தேவை !
யோகிக்கும் ஆகாரம் தேவை !
போகிக்கும் ஆகாரம் தேவை !
ஆரோக்கியவானுக்கும் ஆகாரம் தேவை !
நோயாளிக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
ப்ரும்மசாரிக்கும் ஆகாரம் தேவை !
க்ருஹஸ்தருக்கும் ஆகாரம் தேவை !
பற்றில்லாதவருக்கும் ஆகாரம் தேவை !
சன்னியாசிக்கும் ஆகாரம் தேவை !
தொழிலாளிக்கும் ஆகாரம் தேவை !
முதலாளிக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
 ஆகாரம் தேவையில்லை என்று
ஒருவரும் சொல்லமுடியாது !


தெய்வத்திற்கும் ஆகாரம் தேவை . . .
ஆனால் நமக்காக தெய்வத்திற்கு
ஆகாரம் தேவை . . .தெய்வம் உண்ட ஆகாரம்
நமக்கு என்றும் நன்மை பயக்கும் !அதுவே நிவேதனம் . . .தெய்வத்திற்கு ஆகாரம் தரும்
உன்னத வழக்கம் நம்முடைய
சனாதன ஹிந்து தர்மத்திலேதான் உண்டு !
 
 
 
நாம் சாப்பிடுவதை, நம் தெய்வங்கள்
ஏற்பதுதானே அற்புதம் . . .
 
 
 
தெய்வம் சாப்பிடுவதை நாம் ஏற்பதுதானே
தெய்வத்திற்கு நாம் தரும் மரியாதை . . .
 
 
 
இதுவே நிவேதனத்தின் ரஹஸ்யம் . . .
 
 
 
நிவேதனம் என்றால் அர்பித்தல்
என்று அர்த்தம் . . .
 
 
 
 பகவானுக்கு அர்பிக்கத் தானே
வாழ்க்கை . . .
பகவான் தருவதை அனுபவிக்கவே
வாழ்க்கை . . .
 
 
பகவான் அனுபவித்த
ஆகாரத்தைச் சாப்பிட்டால்
சுகமாய் வாழலாம் . . .
 
 
 
தினமும் ஹிந்துக்கள் வீட்டில்
பகவானுக்கு நிவேதனம் உண்டு !
தினமும் நம் கோயில்களில்
பகவானுக்கு நிவேதனம் உண்டு !
 
 
பகவானுக்காக சமைப்பதே சுகம் !
 
 
 
அதுபோல் ஒரு கைங்கர்யம்
கிடைத்தால் . . .
சொல்ல வார்த்தைகளில்லை . . .
 
 
 
அதுவும் பூரி ஜகந்நாதனின்
திருமடைப்பள்ளியில் (சமையலறை)
கைங்கர்யம் கிடைத்தால் . . .
ஆஹா . . . ஆஹா . . . ஆஹா . . .
 
 
 
உலகின் மிகப்பெரிய சமையலறை !
கண்டு அசந்து போனேன் . . .
மயக்கம் தான் வரவில்லை . . .
 
 
 
எத்தனை பேர் சுழன்று சுழன்று
வேலை செய்கிறார்கள் . . .
அம்மம்மா . . .எத்தனை சக்தி !
 
 
 
 எல்லாமே பெரியது இங்கே...
ஜகந்நாதனைப் போல் !


தினம் தினம்
பக்தருக்காக சமையல் . . .


அடுப்பு : 752
சமையல்காரர்கள் : 500
உதவியாளர்கள் : 300
ஆகார வகைகள் : 56

என்ன தலை சுற்றுகிறதா . . .பகவானின் சமையலுக்காக
கங்கையும், யமுனையும்
இங்கே கிணற்றில் சுறக்கிறார்கள் !
 
 

தண்ணீரை இறைக்கவே
ஒரு கூட்டம் . . .தண்ணீரை கொண்டுசெல்ல
ஒரு கூட்டம் . . .காய்கறி நறுக்க ஒரு கூட்டம் . . .தேங்காய் துறுவ ஒரு கூட்டம் . . .மண்பானைகளை கொண்டுவர
ஒரு கூட்டம் . . .அரிசியை இடிக்க ஒரு கூட்டம் . . .துவையல் அறைக்க ஒரு கூட்டம் . . .காய்கறி அலம்ப ஒரு கூட்டம் . . .சமைத்ததை எடுத்து வைக்க ஒரு கூட்டம் . . .சாமான் எடுத்துக் கொடுக்க ஒரு கூட்டம் . . .விறகு கொண்டு வர ஒரு கூட்டம் . . .
 
 
 
கோயிலில் பக்தர்களின்
கூட்டத்தை விட,இந்த
சமையலறைக் கூட்டம்தான் பெரியது !வெய்யிலோ,மழையோ,பனியோ
ஒரு நாளும் இது மாறுவதில்லை . . .ஜகந்நாதனுக்கு தன் பக்தருக்கு
வயிறார ஆகாரம் கொடுப்பதே தவம் . . .


கோபால குழந்தைகளின்
பசியைப் போக்க ப்ராம்மணர்களிடம்
கையேந்தி கெஞ்சினவனாயிற்றே !


ப்ராம்மண பத்னிகளின் பக்தியோடு
கூடிய ஆகாரத்தைத் தானும்
அனுபவித்து பக்தருக்கும் தந்தவனாயிற்றே !ப்ராம்மணர்கள் ஆகாரம் தரவில்லை !
அதனால் அவர்களையே சமைக்கும்படி
ஒரு உத்தரவு இட்டுவிட்டான் போலும் !அதிலும் சமையலறையில் வேலை
செய்பவர் தன் வீட்டில் வயிறார
உண்டு விட்டுதான் தினமும்
இவனுக்கு சமைக்க வரவேண்டும் !ஜகந்நாதனுக்கு தேங்காய், பரங்கிக்காய்,
வாழைக்காய், இவையெல்லாம்
ரொம்பப் பிடிக்கிறது !
 
 


எத்தனை சுவை . . .
ஜகந்நாதனின் ப்ரசாதம் சாப்பிட
சத்தியமாய் உனக்கு பத்து வயிறாவது
நிச்சயம் வேண்டும் . . .
ஒரு வயிறு போதவே போதாது . . .ஜகந்நாதனின் மனது போலவே
கொடுப்பவரின் மனதும் . . .
அள்ளி அள்ளித் தருகிறார்கள்
ஜகந்நாதனின் ப்ரசாதத்தை . . .இன்றும் என் நாவிலும்,
மனதிலும், ஆத்மாவிலும்,
கலந்து விட்ட சுவை . . .ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரும்
தன்னை மறந்து அனுபவித்த ப்ரசாதம் !ஜகந்நாதனே ப்ரசாத ரூபம் . . .


நாமோ நாவிற்கு வசப்பட்டவர் . . .
நாம ஜபத்தில் ருசி இல்லை . . .
ஆனால் சாப்பாடு ருசியோ
ஆசையோ துளியும் குறைவதில்லை . . .அதனால் ஜகந்நாதன் தானே
பக்தருக்கு ஆகாரமாய் வருகிறான்  . . .
விறகு அடுப்பில், மண் பானையில்
சமைத்த சோறு வேண்டுமா ?
சுடச்சுட வேண்டுமா ?
சுவை மிகுந்ததாய் வேண்டுமா  ?உடனே ஜகந்நாதனின் புரீக்குக் கிளம்பு !Read more...

Tuesday, July 17, 2012

வாழ்க்கை உயரும் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
மனிதர்கள் மாறுவார் . . .
க்ருஷ்ணன் மாறுவதில்லை !
 
 
 
மனிதர்கள் மறப்பார் . . .
க்ருஷ்ணன் மறப்பதில்லை !
 
 
 
மனிதர்கள் ஏமாற்றுவார் . . .
க்ருஷ்ணன் ஏமாற்றுவதில்லை !
 
 
 
மனிதர்கள் துரோகம் செய்வார் . . .
க்ருஷ்ணன் துரோகம் செய்வதில்லை !
 
 
 
மனிதர்கள் தப்பாய் பேசுவார் . . .
க்ருஷ்ணன் தப்பாய் பேசுவதில்லை !
 
 
 
மனிதர்கள் புரிந்துகொள்ளார் . . .
க்ருஷ்ணன் புரிந்துகொள்கிறான் !
 
 
 
மனிதர்கள் பொய்யாய் சிரிப்பர் . . .
க்ருஷ்ணன் உண்மையாய் இருக்கிறான் !
 
 
 
மனிதர்கள் ஒதுங்குவார் . . .
க்ருஷ்ணன் ஒதுங்குவதில்லை !
 
 
 
மனிதர்கள் ஒதுக்குவார் . . .
க்ருஷ்ணன் ஒதுக்குவதில்லை !
 
 
 
மனிதர்கள் அவமானப்படுத்துவர் . . .
க்ருஷ்ணன் அவமானப்படுத்துவதில்லை !
 
 
 
மனிதர்கள் சிறியவர் . . .
க்ருஷ்ணன் பெரியவன் . . .
 
 
 
அல்ப மனிதரை மற . . .
அழகு க்ருஷ்ணனை நினை . . .
 
 
 
மனிதரோடு இரு . . .
க்ருஷ்ணனோடு வாழ் . . .
 
 
 
மனிதருக்கு மனதைத் தறாதே . . .
க்ருஷ்ணனிடம் மனதைத் தந்துவிடு !
 
 
 
வாழ்க்கை உயரும் . . .
 
 
 

Read more...

Monday, July 16, 2012

நெருக்கடி . . .

ராதேக்ருஷ்ணா


 சின்னதாய் ஒரு
இடைக்கழி . . .அதிலே
ஒருவர் படுக்கலாம் . . .
இருவர் இருக்கலாம் . . .
மூவர் நிற்கலாம் . . .நாலாவதாய் இன்னொருவர்
வந்தால் ? ? ?
அதனால் என்னவாகும் ? ? ?
 நெருக்கடி அதிகமாகும் . . .இட நெருக்கடி . . .
யாருக்கும் பிடிக்காது . . .
மிகவும் சிரமம் . . .யாரால் நெருக்கடி வருகிறதோ,
அவர் மீது கோபம் வரும் . . .ஒரு சமயம் ஒரு நெருக்கடி !
ஒரு மழைக்காலத்தில் ஒரு நெருக்கடி !
ஒரு ரிஷியின் வீட்டில் நெருக்கடி !
ஒரு இரவில் ஒரு நெருக்கடி !
ஒரு இடைக்கழியில் ஒரு நெருக்கடி !
மூன்று பக்தர்கள் . . .
பொய்கையாழ்வார் . . .
பூதத்தாழ்வார் . . .
பேயாழ்வார் . . .
வந்தனர் திருக்கோவலூருக்கு . . .
ஆயனைக் காண்பதற்கு . . .
உலகளந்த ஆயனைக் காண்பதற்கு . . .
உலகளந்தவன் மூவரையும்
அனுபவிக்க ஆசைகொண்டான் . . .
மழையால் மூவரையும் இணைத்தான் . . .
ஓர் இரவில்,ஓர் இடைக்கழியில்,
மூவரையும் இணைத்தான் . . .
தானும் வந்தான் . . .
திருமகளோடு வந்தான் . . .
நெருக்கடி கொடுத்தான் . . .
இட நெருக்கடி கொடுத்தான் . . .
மனதிலும் நெருக்கடி கொடுத்தான் . . .
உடனே மூவரும் விளக்கேற்றி
கண்டனர் ஆயனை . . .
திவ்யப்ரபந்தம் விளைந்த
இடமாயிற்றே திருக்கோவலூர் . . .
நானும் போனேன் . . .
நெருக்கடி ஊருக்கு . . .
உடலை நெருக்கி,
ஆத்மாவுக்கு ஒளி தரும் ஊருக்கு . . .
ஊருக்குள்ளே நுழையும்போதே
நெருக்கடி தான் . . .
 கோவிலுக்கு வெளியேயும்
நெருக்கடி தான் . . .

  


என்னை யாராவது நெருக்க
மாட்டார்களா என்று ஆசையோடு
நுழைந்தேன் . . .
 என் காமம் தான் என்னை நெருக்கியது !
என் கோபம் தான் என்னை நெருக்கியது !
என் திமிருதான் என்னை நெருக்கியது !
என் அஞ்ஞானம் தான் என்னை நெருக்கியது !
என் சந்தேகம் தான் என்னை நெருக்கியது !
என் ஆசைகள் தான் என்னை நெருக்கியது !
என் பயம் தான் என்னை நெருக்கியது !சன்னிதி அருகில் நின்றோம் . . .
உள்ளே சிலர் நெருங்கி நின்று
உலகளந்தவனைத் தரிசித்தனர் !
ஆழ்வார்களையே நெருக்கி
தன்னைக் காட்டினவனாயிற்றே . . .ஆழ்வார்களையே நிறுத்தினவன் . . .
எங்களையும் நிறுத்தினான் . . .


எனக்கு சந்தோஷமாய் இருந்தது !
இனம் புரியாத சந்தோஷம் !அதற்குள் சில பக்தர்களும் வந்தனர் !
அதில் ஒரு வயதான பெண்மணியும்
கூட்டத்தில் வந்தாள் . . .
எல்லோரையும் இடித்தாள் . . .
சிலர் சப்தம் போட்டனர் . . ."ஏனம்மா இப்படி இடிக்கிறாய்" என்று
எல்லோரும் சப்தம் போட்டனர் . . .எனக்குத் தூக்கி வாரிப்போட்டது . . .
ஆனந்தமாய் சிரித்தேன் . . .சன்னிதி வரைக்கும் சாந்நித்தியம் . . .
ஆழ்வார்களின் சாந்நித்தியம் . . .
இடிக்கும் சாந்நித்தியம் . . .சன்னிதிக்குள்ளும் ஆயன்
ப்ரும்மா,மஹாபலி,நமுசி,
முதலாழ்வார்கள்,ம்ருகண்டு மஹரிஷி,
அவரின் தர்மபத்தினி என்று
ஒண்டிக்குடித்தனம்
நடத்திக்கொண்டிருக்கிறான் . . .இந்த ஆயனுக்கு
இடித்துக்கொண்டிருப்பதுதான்
மிகவும் பிடித்த விஷயம் . . .நான் கேட்டேன் . . .
ஏன் இப்படி இடித்துக்கொண்டு
நீ சிரமப்படுகிறாய் . . .
உலகளந்தவன் சொன்னான் . . .தாய்க்கு சேய் இடிப்பது கடினமோ ?
காதலனுக்கு காதலி இடிப்பது கசக்குமோ ?
மரத்திற்கு கொடி இடிப்பது வலிக்குமோ ?
நண்பனுக்கு நண்பன் இடிப்பது  சிரமமோ ?
கண்ணுக்கு இமை இடிப்பது தொந்தரவோ ?
மேகத்துக்கு காற்று இடிப்பது இம்சையோ ?
 எனக்கு என் பக்தர் இடிப்பது சுகமல்லவா ! ! !என் கண்ணோரம் கண்ணீர் இடித்தது . . .
என் மனதோரம் ஆனந்தம் இடித்தது . . .
என் ஆத்மாவை பரமாத்மா இடித்தான் . . .
என் உடலை பக்தர்கள் இடித்தனர் . . .இப்பொழுது புரிந்தது . . .
ஏன் ஆழ்வார்களை ஆயன் இடித்தான் ! ! !
ஏன் ஆழ்வார்கள் அதை அனுபவித்தனர் ! ! !நெருக்கடி சுகம் . . .
இட நெருக்கடி சுகம் . . .


வாழ்வில் நெருக்கடி பலம் . . .சத்தியம் . . .
திருக்கோவலூர் சொன்ன பாடம் . . .
உலகளந்தவன் சொன்ன பாடம் . . .
மூன்று அடிக்கு ஒரு அடி குறைய,
அந்த நெருக்கடியில் மஹாபலிக்குக்
கிடைத்தது ஆயனின் திருவடி !
மூவர் படுக்க இடமில்லாமல்,
இடைக்கழியில் நெருக்கடி வர,
ஆழ்வார்களுக்குக் கிடைத்தது ஆயன் அன்பு !
ஆகமொத்தத்தில் நெருக்கடியில்
ஆயன் வருகிறான் . . .வருகிறான் . . .இதுவே நான் உணர்ந்தது . . .
இல்லை... நெருக்கடி ஊர் உணர்த்தியது !


நெருக்கடியே நீ வாழ்க . . .
இட நெருக்கடியே நீ வாழ்க . . .Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP