ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 ஜூலை, 2012

ஹரிதாஸ விட்டலன் ! ! !

ராதேக்ருஷ்ணா

விட்டலன் . . .
ஹரி தாஸரின் விட்டலன் . . .

ஆஷாட சுக்ல ஏகாதசி
பாண்டுரங்கனுக்கு ரொம்ப விசேஷம் !

பல லக்ஷங்கள் பக்தஜனங்கள்
பண்டரீபுரத்திற்கு செல்வார்கள் !

பல்லாயிரக்கணக்கான மஹாத்மாக்களை
சுகமாய் அங்கு சேவிக்கலாம் !

அடியேனுக்கும் பாண்டுரங்கனை
ஆஷாட சுக்ல ஏகாதசிக்கு
சேவிக்க ரொம்பவே ஆசை !

ஆனால் இன்னும் முடியவில்லை . . .
இந்த முறை ஏகாதசிக்கும்
அடியேனுக்கு மனது
அடித்துக்கொண்டிருந்தது !

 விட்டலா . . .உன்னை என்று
ஆஷாட சுக்ல ஏகாதசியில்
பண்டரீபுரத்தில் தரிசிப்பேன்
என்று மனதாரக் கேட்டுக்கொண்டிருந்தேன் !

இன்று தசமி . . .
நாளை ஏகாதசி என்று
விட்டலனிடம் புலம்பிக்கொண்டிருந்தேன் !

காஞ்சீபுரத்தில் வரதனின் கருடசேவை
சேவித்த த்ருப்தியுடன் திருவண்ணாமலைக்கு
சென்றுகொண்டிருந்தேன் !

பண்டரீபுரத்தை மனதால்
தரிசித்துக்கொண்டிருந்தேன் !

எத்தனை பாக்கியவான்கள்
இப்பொழுது விட்டலனைத்
தரிசித்துக்கொண்டிருப்பார்கள்
என்று யோசித்துக்கொண்டிருந்தேன் !

விட்டலா...விட்டலா...விட்டலா...
இன்று தசமி இரவு . . .
யாருக்கெல்லாம் உன் தரிசனம் ?
என்று விட்டலனோடு
பேசிக்கொண்டிருந்தேன் ! ! !

திடீரென எங்கள் வண்டியின்
சாரதி மூலமாக பார்த்தசாரதியான
பாண்டுரங்கன் தானே சொன்னான்:
"ஐயா ! வலது கை பக்கம்
தெரிகிறதே அதுதான் தென்னாங்கூர்
பாண்டுரங்கன் கோயில்"


உடனே அடியேன் சொன்னேன்:
"கட்டாயம் உள்ளே செல்வோம்"


உள்ளமும்,உடலும் துள்ள
தென்னாங்கூர் கோயிலுக்குச்
சென்றோம் . . .

உள்ளே செல்லும் எல்லா வழிகளும்
மூடி இருந்தது . . .
சம்சாரிகளின் மனது போலே !

ஒரு வழி மட்டும் திறந்திருந்தது . . .
குருவின் கருணை போலே !

ஆனாலும் தடுத்தார் வாயில் காப்பான் !
ப்ராரப்த கர்மாவைப் போலே !

வண்டியில் இருந்து இறங்கினேன் . . .
விட்டலனைப் பார்க்க ஆவலோடும்,
அவசரத்தோடும், அழுகையோடும் !

நடை அடைத்தாயிற்று என்றார்
வாயில் காப்பவர் . . .
ஐயோ . . . விட்டலா என்றேன்
மனதிற்குள் !

என் குரல் அவன் காதில் விழுந்தது !
இல்லை . . . இல்லை . . .
ஹரிதாஸ் கிரியின் காதில் விழந்தது !

உள்ளிருந்து ஒரு வைஷ்ணவர் வந்தார் !
உடனே வாயில் காப்பவன் அவரிடம் கேட்டார்
"இவர்களை உள்ளே விடலாமா "?


அவர் என்னைப் பார்த்தார் . . .
என் நெற்றியைப் பார்த்தார் . . .
பகவானின் திருவடி அடையாளமான
திருமண்ணைப் பார்த்தார் !


உடனே உள்ளே விடு என்றார் . . .


அன்றே எனக்கு திருமண்ணின்
பூரண மஹிமை உள்ளபடி புரிந்து !


உள்ளே ஓடினோம் . . .
அவர் "பகவானுக்கு
படி களைந்தாயிற்று" என்றார் !
அதாவது அவன் அன்று
அவனுடைய அலங்காரத்தை எல்லாம்
மாற்றிக்கொண்டு காலை
ஏகாதசிக்குத் தயாராகின்றான் என்றார் !


இருந்தாலும் சற்று பொறுங்கள் என்றார் !
காத்திருந்தோம் . . .
பாண்டுரங்கன் பஜனை செய் என்றான் . . .


பஜே பாண்டுரங்கா . . . பஜே பாண்டுரங்கா !
என்று பஜிக்க ஆரம்பித்தேன் . . .
அவனை தரிசிக்க வேண்டுமே
என்று மனம் ஏங்கிக்கொண்டிருக்க,
உதடு அவன் நாமத்தை ஜபித்தது !


நேரம் சென்று கொண்டிருந்தது !
விட்டலனை பஜித்துக்கொண்டிருந்தோம் !


உள்ளே வாருங்கள் என்றார் வைஷ்ணவர் !


உள்ளே சென்றோம் . . .
அவன் அவனாக . . .
ஒரு பஜ்சகச்சத்தைக் கட்டிக்கொண்டு
ஒய்யாரமாய் நின்றிருந்தான் . . .
அவன் அருகில் ஒரு மாலையைக்
கையில் ஏந்தி தன் மணாளனுக்காக
ருக்மிணியும் ப்ரேமையோடு
நின்றிருந்தாள் . . .


எத்தனை சுகம் . . .
ஏகாந்தமாய் அவனை தரிசித்தோம் !
எங்களுக்காகவே தரிசனம் தந்தான் !
எங்கள் பக்தியினால் இல்லை . . .
அவன் கருணையினால் தரிசனம் !


விட்டலன் ரொம்பவே நல்லவன் !
ரொம்வே எளிமையானவன் !
நிச்சயம் பக்தவத்சலன் !
சத்தியமாய் கலியுக வரதன் !


விட்டலனை தரிசித்துவிட்டேன் !
பண்டரீநாதனை தென்னாங்கூரில்
சுலபமாய் சேவித்துவிட்டேன் !


ஹரிதாசர்களின் விட்டலனை
ஹரிதாஸ் கிரியின் விட்டலனாக,
பண்டரீநாதனை தென்னாங்கூர் நாதனாக,
புண்டலீக வரதனை குருஜீ வரதனாக,
ஆஷாட தசமி இரவில்
ஏகாந்தமாக ஏகாதசிக்கு முன்பே
பார்த்துவிட்டேன் . . .




நெஞ்சம் நிறைந்தது !
வாயில் வெண்ணையின் ஈரத்தோடு,
என்னை மகிழ்வித்த திருப்தியான
புன்னகையோடு,ருக்மிணி சமேதனாக
உன்னத நாதனை
அடியேன் கண்டுவிட்டேன் . . .


என்னைப் போல் பண்டரீபுரம்
போக இயலாதவருக்காகத்தான்
ஹரிதாஸ் குருஜீ தென்னாங்கூரில்
பாண்டுரங்கனை நிறுத்தி வைத்திருக்கிறார்
என்பதை புரிந்துகொண்டேன் !


நிம்மதியாய் வெளியில் வந்தோம் !
வாசலில் பஜனை சப்தம் !
அதிசயமாய் பார்த்தோம் !
அபங்கத்தோடு ஆடிக்கொண்டு
வந்தான் உற்சவ பாண்டுரங்கன் !
மேனி சிலிர்த்தது !
நா தழுதழுத்தது !
உள்ளம் குதூகலித்தது !


ஆஹா . . . என்ன கருணை !
விட்டலா . . . ஹரிதாஸ விட்டலா !



உள்ளே விட்ட வைஷ்ணவருக்கு வந்தனம் !
அனுமதி கேட்ட வாயில் காப்பவருக்கு வந்தனம் !
தென்னாங்கூர் என்று சொன்ன
எங்கள் சாரதிக்கு வந்தனம் !




ஹரிதாஸ் கிரி குருஜீக்கு வந்தனம் !
தென்னாங்கூருக்கு வந்தனம் !
பாண்டுரங்கனுக்கு வந்தனம் !
ஆஷாட ஏகாதசிக்கு வந்தனம் !


வந்தனம் . . . வந்தனம் . . . வந்தனம் . . .








0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP