ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, August 10, 2012

என்ன சொல்வது க்ருஷ்ணா !

ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனை பூமிக்கு வரப்
ப்ரார்தித்த பூதேவிக்கு நன்றி !


க்ருஷ்ணன் பூமிக்கு வருகிறான்
என்ற ப்ரும்மதேவருக்கு நன்றி !


க்ருஷ்ணனைத் தர முதலில்
தன்னைத் தந்த கீர்த்திமானுக்கு நன்றி !


க்ருஷ்ணனுக்காக தங்கள் இன்னுயிரைத்
தந்த ஐந்து அண்ணன்களுக்கும் நன்றி !


க்ருஷ்ணனை அனுபவிக்க எல்லாவற்றையும்
தந்த வசுதேவருக்கு நன்றி !


க்ருஷ்ணனுக்காக எல்லா வலிகளையும்
சுமந்த தேவகி மாதாவுக்கு நன்றி !


க்ருஷ்ணனுக்காக கைங்கர்யம் செய்ய
முதலில் வந்த பலராமருக்கு நன்றி !


க்ருஷ்ணனைத் தந்த இந்த
ராத்திரிக்கு கோடானுகோடி நன்றி !


க்ருஷ்ணனைக் கொடுத்த ரோஹினிக்கும்,
ஆவணிக்கும்,அஷ்டமிக்கும் நன்றி !


க்ருஷ்ணா . . . உன்னை எங்களுக்கும்
தந்த உனக்கு செல்லமான நன்றிகள் !


ராதிகா. . . க்ருஷ்ணனை அனுபவிக்க
எங்களுக்கும் தகுதி தந்த உனக்கு நன்றி !


க்ருஷ்ணனை சுகமாய் பெற்ற
வடமதுரைக்கு ஆயிரம் நன்றிகள் !


க்ருஷ்ணனுக்காகக் காத்திருந்து
வழி விட்ட யமுனா தேவிக்கு நன்றிகள் !


க்ருஷ்ணன் மீது மழை பெய்யாமல் காத்த ஆதிசேஷனுக்கு நன்றி சொல்ல வாயில்லை !


க்ருஷ்ணனுக்காக வழி மேல் விழி வைத்து
ஏங்கியிருந்து வரவேற்ற மாயைக்கு நன்றி !


க்ருஷ்ணனை உள்ளபடி காட்டிக்கொடுத்த
கோகுலத்திற்கு கோடானு கோடி நன்றிகள் !


க்ருஷ்ணனை மாட்டுக் காரனாய்
வளர்த்த யசோதைக்கு நன்றி !


க்ருஷ்ணனை பத்திரமாய் காப்பாற்றிய
நந்தகோபருக்கு நன்றி !


க்ருஷ்ணனுக்கு க்ருஷ்ணா என்று
பெயரிட்ட கர்க மஹரிஷிக்கு நன்றி !


க்ருஷ்ணனோடு வெண்ணை திருடி
அவனை திருடனாக்கிய கோபருக்கு நன்றி !


க்ருஷ்ணனை ராசம் ஆட வைத்த
எங்கள் கோபிகைகளுக்கு நன்றி !க்ருஷ்ணனை பக்தருக்கு எளியவன்
எனக்காட்டின உரலுக்கும்,கயிறுக்கும்
உத்தமமான நன்றிகள் !

 


இப்படிப்பட்ட க்ருஷ்ண பொக்கிஷத்தை
எனக்குக் காட்டிக் கொடுத்த
என் குருஜீஅம்மாவுக்கு
ஆத்மா உள்ளவரை நன்றிகள் !

என்ன சொல்வது க்ருஷ்ணா. . . .


நான் க்ருஷ்ண சம்மந்தம் உடையவருக்கு
என்றும் நன்றிக்கடன் பட்டவன் . . .இந்த கோகுலாஷ்டமியில்
க்ருஷ்ணனின் சம்மந்தப்பட்ட அனைவருக்கும்,
அனைத்து வஸ்துவுக்கும்,
அடியேன் கோடி நமஸ்காரங்கள் . . . .நானும் உங்களைப் போல்
க்ருஷ்ணனை அனுபவிக்கவேண்டும் !

நானும் உங்களைப் போல்
க்ருஷ்ணனின் சொத்தாக வேண்டும் !

நானும் உங்களைப் போல்
க்ருஷ்ணனின் இஷ்டமாய் இருக்கவேண்டும் !எல்லோரும் எனக்காக
என் க்ருஷ்ணனிடம் ஒரு வார்த்தைச்
சொல்லுங்கள் . . .


கோபாலவல்லி என்னும் பைத்தியம்
அவனுக்காக இங்கே இன்னமும்
அலைந்துகொண்டிருக்கிறது . . .


வருவான் என தனிமையில் நிற்கிறாள் !
வருவான் என அவமானத்திலும் வாழ்கிறாள் !
வருவான் என அழுது புலம்புகிறாள் !
வருவான் என உயிர் தரிக்கிறாள் !


வருவான் . . . வருவான் . . . வருவான் . . .
இது சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP