ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, September 30, 2012

தனிமை இனிமை !

ராதேக்ருஷ்ணா
தனிமை . . .

அமைதி . . .

நிம்மதி . . .


 தனிமை ஒரு வரம் !

தனிமை ஒரு சுகம் !

தனிமை ஒரு பலம் !

தனிமை ஒரு தவம் !

தனிமை ஒரு யாகம் !

தனிமை கிடைப்பது அரிது !
தனிமை கிடைப்பது அவசியம் !
தனிமை கிடைப்பது அனுக்ரஹம் !


தனிமை நிறைய வேண்டும் !
தனிமை நிறைய தரும் !
தனிமை நிறைய சொல்லும் !
தனிமை நிறைய பக்குவப்படுத்தும் !
தனிமை நிறைய யோசிக்கவைக்கும் !
தனிமை நிறைய கேள்விகள் கேட்கும் !


தனிமை நம்மை நம்மோடு சேர்க்கும் !
தனிமை நம்மை நம்மிடம் தரும் !
தனிமை நம்மை ஆராயச் செய்யும் !
தனிமை நம்மை உறுதியாக்கும் !
தனிமை நம்மை க்ருஷ்ணனிடம் கொடுக்கும் !


தனிமை மனதில் ஒரு மாறுதல் தரும் !
தனிமை நம் பேச்சில் நிதானம் தரும் !
தனிமை நம் மூளையைச் சலவை செய்யும் !
தனிமை நமக்கு ஒரு தைரியம் தரும் !


தனிமை ஒரு மௌனக் கவிதை !
தனிமை ஒரு அழகான தென்றல் !
தனிமை ஒரு மெல்லிய பூவின் வாசம் !


தனிமை குளிர் தரும் மேகம் !
தனிமை சுகமான மார்கழியின் பனி !
தனிமை இதமான கோடை மழை !


தனிமையில் இயற்கை நிறைய சொல்லும் !
தனிமையில் சிறு பொருளும் தத்துவம் பகரும் !
தனிமையில் தாய் மொழியின் அழகு தெரியும் !


தனிமை நம் ரஹஸ்ய தோழன் / தோழி !
தனிமை நம்முடைய அற்புத ஆசான் !


தனிமையில் இருளும் பகலாகும் !
தனிமையில் பகலும் இரவாகும் !
தனிமையில் மற்றவரின் அருமை புரியும் !
தனிமையில் நம் குற்றங்கள் தெரியும் !தனிமை க்ருஷ்ணனின் தேவையைச் சொல்லும் !
தனிமை க்ருஷ்ணனின் பலத்தைக் காட்டும் !
தனிமை க்ருஷ்ணனை வரவழைக்கும் !


தனிமை கண்டு கலங்காதே !


தாயின் கருவறையில் தனிமையில்
தானே நாம் இருந்தோம் !

குளியலறையில் தனிமையில்
தானே நாம் இருக்கோம் !

இது போல் பல தனிமை !


சில நேரங்களில் நாமே
தனிமையைத் தேடுகிறோம் !

சில சமயங்களில் தனிமையே
நம்மை நாடி வருகிறது !


எது எப்படியோ தனிமை நல்லதே !


ஆனால் சிலர் தனிமையைக்
கண்டு அஞ்சுகின்றனர் !

சிலர் தனிமையில்
பலவீனமாகுகின்றனர் !

சிலர் தனிமையில் புலம்புகின்றார் !

சிலர் தனிமையில் அழுகின்றார் !

சிலர் தனிமையில் குழம்புகின்றார் !


க்ருஷ்ணா என்று சொல்லிப்பார் !


அப்பொழுது நீயே தனிமை
எப்போது கிடைக்கும் என்று ஏங்குவாய் !


தனிமை உலகிடமிருந்து தான் !
தனிமை ஜனங்களிடமிருந்து தான் !
தனிமை ஓட்டத்திடமிருந்து தான் !


தனிமை நம்மை நாம ஜபத்திடமிருந்து
தனிமைப்படுத்தாது !

தனிமை நம்மை பக்தியிடமிருந்து
தனிமைப்படுத்தாது !

தனிமை நம்மை பக்தரிடமிருந்து
தனிமைப்படுத்தாது !

தனிமை நம்மை க்ருஷ்ணனிடமிருந்து
தனிமைப்படுத்தாது !


உனக்கு ஒரு நாள் புரியும் !


தனிமை விலை கொடுத்து
வாங்க முடியாத ஒரு பொக்கிஷம் !

தனிமை தானாய் கிடைக்கும்
ஒரு அரிய வாய்ப்பு !


நான் தேடின ஒரு தனிமை !
நான் ஏங்கின ஒரு தனிமை !
நான் காத்திருந்த ஒரு தனிமை !
இப்பொழுது க்ருஷ்ணன் தந்திருக்கிறான் !


நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் !
தனிமையின் இனிமையை ரசிக்கிறேன் !


தனிமை என்னை மாற்றுகிறது !
தனிமை என்னை 
மாற்றிக் கொண்டிருக்கிறது !
தனிமை என்னை மாற்றும் !


ஒரு புதியவனாய் நான் மாறுகிறேன் !
ஒரு புதியவனாய் புதியதாய் பிறக்கிறேன் !
ஒரு புதியவனாய் புதியதாய்
உலகைப் பார்க்கிறேன் !


தனிமை என்னை வார்த்தெடுக்கிறது !
தனிமை என்னை செதுக்கிறது !
தனிமை என்னை உற்சாகப்படுத்துகிறது !


தனிமை இனிமை !


இந்த தனிமைக்கு நன்றி !
தனிமை தந்த க்ருஷ்ணனுக்கு நன்றி !

என் தனிமையை மதிக்கும்
அனைவருக்கும் நன்றி !

என் தனிமையை கெடுக்காத
எல்லோருக்கும் மிக்க நன்றி !

எனது தனமையே நீ வாழ்க !
எனது தனிமையே நீ வளர்க !

எனது தனிமையே என்றும்
என்னை விட்டு விடாதே !


தனிமையே நீயும் நானும்
உயிர் தோழர்கள் அல்லவா !

பல வருடம் கழித்து நீயும்
நானும் சேர்ந்திருக்கிறோம் !

 பல வருஷ விஷயங்களைப்
பகிர்ந்துகொண்டேன் உன்னுடன் !

 என்னை விட நீ தான்
மிகவும் சந்தோஷமாயிருப்பாய் !

என்னை நீ மட்டும்
அனுபவிக்க காத்திருந்தாயே !

வா . . . நிம்மதியாய் இருப்போம் !
சுகமாய் பொழுதைக் கழிப்போம் !

க்ருஷ்ணனை ரசிப்போம் !
உலகை ரசிப்போம் !
நம்மை ரசிப்போம் !


Read more...

Saturday, September 29, 2012

காலை வணக்கம் !

ராதேக்ருஷ்ணா
 விடியல் !


இளம் காலை நேரம் !
இன்றைய காலை வணக்கம் !


கிளிகள் பாடும் பூபாளம் !
" கண்ணன் வருவான்...தன்னைத் தருவான் "


காகங்கள் சொல்லும் அறிவுரை !
" ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் "


புறாக்கள் சொல்லும் ஜோசியம் !
" இந்த நாளே சிறந்த நாள் "


சிட்டுக்குருவிகளின் பிறந்த நாள் வாழ்த்து !
" ஆஹா ! விடியலே நீ வாழ்க "


மைனாக்கள் சொல்லும் ராசிபலன் !
" உன்னோட ராசி நல்ல ராசி "


கருடன் சொல்லும் ஆனந்த ரஹஸ்யம் !
" க்ருஷ்ணனைச் சுமந்து கொண்டிரு "


ஆகாயம் செய்யும் ஆசிர்வாதம் !
" நிச்சயம் விடியல் என்றுமுண்டு "


பூமித்தாய் தரும் தாய் பால் !
" விழித்திடு, எழுந்திடு, உயர்ந்திடு, வாழ்ந்திடு "


காற்று சொல்லும் மந்திரம் !
" பாரபட்சமில்லாமல் பழகு "


சூரியன் சொல்லும் தினப் பலன் !
 " இரை தேடுவதோடு இறையும் தேடு "


மலர்கள் சொல்லும் அழகுக் குறிப்பு !
" எல்லோரையும் நேசி "


மரங்கள் சொல்லும் ஆரோக்கிய வாழ்வு !
" இருக்குமிடத்தில் வாழக் கற்பாய் "


மிருகங்கள் சொல்லும் பிறந்த நாள் பலன் !
"முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் "


குழந்தைகள் சொல்லும் வெற்றிப் பாதை !
" புன்னகையால் பூமியை வசப்படுத்து "


நாட்காட்டி சொல்லும் சிறப்பு விருந்தினர் !
" இன்று வந்தார், இவரே சிறந்தவர் "


நேரம் சொல்லும் எண் கணிதம் !
" ஒவ்வொரு நொடியையும் முயற்சியால் கூட்டு "


குரு சொல்லும் பெயர் பலன் !
" க்ருஷ்ணா என்றால் நன்மை வரும் "


இதுவே இன்றைய காலை வணக்கம் !
மீண்டும் நாளை உங்களை சந்திப்போம் !


அதுவரை உங்களிடமிருந்து
பிரியா விடை பெறுவது . . .
" உங்கள் க்ருஷ்ணனும், க்ருஷ்ண தாசனும் !


இந்த நாள் சிறக்க வாழ்த்துக்கள் . . .


Read more...

Friday, September 28, 2012

போதுமடா சாமி !

ராதேக்ருஷ்ணா


வியாதிகள் !

உலகில் அதிசயமான ஒன்று !


உலகிலிருந்து பூரணமாக அழிக்கவே
முடியாத மாயா ரஹஸ்யம் !
 
 
 
வியாதிகள் பலவிதம் !
 
 
சில வியாதிகளுக்கு பூர்வ ஜன்ம
கர்ம வினை காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு நம்முடைய
அசிரத்தையே காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு நாம் வாழும்
சூழ்நிலை காரணம் !


சில வியாதிகளுக்கு நம்முடைய
பழக்கவழக்கங்கள் காரணம் !


சில வியாதிகளுக்கு நம்முடைய
அஜாக்கிரதையே காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு நம்மை
சுற்றி இருப்பவர்கள் காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு விபரீத
ஆசைகள் காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு நம்
ஆகாரமே காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு நம்
பரம்பரை காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு
பயமே காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு
மனமே காரணம் !
 
 
சில வியாதிகளுக்கு
காலம் காரணம் !
 
 
ஆனால் இதில் சில
வியாதிகளுக்கு வைத்தியம் உண்டு !
 
 
சில வியாதிகளுக்கு
வைத்தியம் செய்து பலனில்லை !


சில வியாதிகள் தானாகவே
வந்தது போல் போய் விடும் !
 
 
இந்த வியாதிகளை
ஆராய்ந்து நீ தெளிவாகு !
 
 
உன் வியாதிக்கு தகுந்தார் போல்
 வைத்தியமும், மருந்தும் !


இருக்கும் வரை ஆரோக்கியம்
மிக மிக அவசியமாயிற்றே !


என்றும் ஆரோக்கியமாயிரு !


ஆனால் நம்முடைய
சனாதனமான இந்து தர்மம்
சொல்கிறது !

ஜனனம், மரணம், மூப்பு
கொண்ட இந்த சம்சாரமே வியாதி !


ஒரு வியாதியும் உனக்கு
வரக்கூடாதென்றால்,
நீ இங்கே பிறக்கவே கூடாது !

பிறவி இருக்கும் வரை வியாதி உண்டு !


அதனால் எடுத்த பிறவிகள்
போதுமென்று தெளிவாக
முடிவெடுத்து இனி
சம்சார வியாதி வரமாலிருக்க
க்ருஷ்ண நாமத்தை ஜபி !


போதுமடா சாமி . . . வியாதிகள் !

போதுமடா சாமி . . . வைத்தியம் !

போதுமடா சாமி . . . வைத்தியர்கள் !

போதுமடா சாமி . . . வைத்தியசாலைகள் !


எல்லோரும் நன்றாயிருங்கள் !
எல்லோரும் ஆரோக்கியமாயிருங்கள் !
எல்லோரும் சுகமாயிருங்கள் !


உங்கள் வியாதிகள் சரியாகட்டும் !
உங்கள் ஆரோக்கியம் கூடட்டும் !
உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும் !
உங்கள் குடும்பம் நிம்மதியாயிருக்கட்டும் !


நீ ஆரோக்கியமாய் இருப்பதை
நான் விரும்புகிறேன் !

நீ ஆரோக்கியமாய் இருப்பதையே
க்ருஷ்ணன் விரும்புகிறான் !

நீ ஆரோக்கியமாய் இருப்பதையே
உன் நலம் விரும்பிகள் விரும்புகின்றனர் !

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
 
 
எல்லோருக்கும் இந்த குறைவற்ற
செல்வம் கிடைக்க க்ருஷ்ணா அருள் செய் !
 
 

Read more...

Wednesday, September 26, 2012

தூப்புள் பிள்ளை !

ராதேக்ருஷ்ணா

இன்று நம் தேசிகரின்
பிறந்த நாள் !

நிகமாந்த மஹாதேசிகரின்
பிறந்த நாள் !

வேதாந்த தேசிகரின் பிறந்த நாள் !

புரட்டாசி மாதமே நீ செய்த
தவம் என்னவோ ?

திருவோண நக்ஷத்திரமே
நீ செய்த புண்ணியம் என்னவோ ?

எங்கள் சர்வ தந்த்ர ஸ்வதந்திரரைப்
பெற்ற தூப்புல் கிராமமே, நீ தான்
108 திவ்ய தேசங்களின் அஸ்திவாரமோ ?

ஸ்ரீ அனந்தசூரி, ஸ்ரீமதி தோதாரம்மா
இவர்கள் தான் ஸ்ரீ வைஷ்ணவம் செய்த
பெரும் புண்ணியமோ ?

திருமலை நாதனின் நாதமான
திருமணியே அடைந்ததோ
கலியுகத்தில் விசேஷ அவதாரம் ?

ஹயக்ரீவர் தவம் பண்ணி
ஆசை ஆசையாய் பெற்ற
தவப் பிள்ளையோ எங்கள் தூப்புல் பிள்ளை ?

நடாதூர் அம்மாள் தேடிக்
கண்டெடுத்த வைஷ்ணவ ரத்தினமோ
எங்கள் ராமானுஜ தயா பாத்ரம் ?

கருடாழ்வார் தனக்கென விசேஷமாய்
தடுத்தாட்கொண்ட சத்சிஷ்யனோ
எங்கள் ஞான வைராக்ய பூஷணம் ?

ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகைகள்
தானே கண்டெடுத்த பரதனோ
 நம் வேதாந்தாசார்யன் ?

காஞ்சி பேரருளாளன் தன்னைப்
பற்றி வாயாரப் பாட மீண்டும்
வரவழைத்த இராமானுஜனோ ?


திருவயிந்திரபுரம் தெய்வநாயகன்
தன் தெய்வீகத்தால் ஸ்ருஷ்டித்த
கவிதார்க்கிக ஸிம்ஹமோ ?

அத்வைத த்வைத சர்ச்சைகளுக்கு
நடு நாயகமாய் வந்த தலைவனோ
எங்கள் நிகமாந்த மஹா தேசிகன் ?

க்ருஷ்ணனின் கருணையே தனம் என
எல்லோருக்கும் புரிய வைக்க வந்த
உத்தம வேத சுதாமாவோ ?

 ரங்க நாயகியின் கருணை
ரங்கனின் கருணையை விட உசத்தி
என நிரூபித்த ஸ்ரீ ஸ்துதி குழந்தையோ ?

சுதர்சன சக்கரத்தின் பலத்தை
பாமர ஜனங்களுக்கும் புரிய வைத்த
 13வது ஆழ்வாரோ ?நிகமாந்த மஹா தேசிகரே !
வேதாந்த தேசிகரே !
சர்வ தந்த்ர ஸ்வதந்தரரே !
வேதாந்தாசார்யரே !
தூப்புள் பிள்ளையே !இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை . . . இல்லை . . .
போதவே போதாது !
இன்னும் ஒரு ஆயிரமாண்டிரும் !Read more...

Tuesday, September 25, 2012

உன் பங்கு !

ராதேக்ருஷ்ணா


உனக்கும் ஒரு பங்கு உண்டு !


உலகில் சூரியன் உதிப்பது
ஒருவருக்காக அல்ல !
சூரியன் உதிப்பது உனக்காகவும் தான் !


மழை பெய்வது யாரோ
சிலருக்காக மட்டுமல்ல !
மழையில் உனக்கும் ஒரு பங்கு உண்டு !


காற்று வீசுவது உலகில்
எல்லோருக்காகவும் தான் !
அந்த காற்று உனக்கும் சேர்த்து தான் !


பூமி சுழல்வது தனக்காக
மட்டுமல்ல ! நமக்காகவும் தான் !
அந்த பூமியில் உனக்கும் அதிகாரம் உண்டு !


விளையும் காய்கறிகளில், பழங்களில்
ஒவ்வொரு ஜீவனுக்கும் பங்கு உண்டு !
உனக்கும் அவை உண்டு !


வீசும் தென்றலை அனுபவிக்க
உலகில் யாருக்கும் உரிமை உண்டு !
உனக்காகவும் தென்றல் வீசுகின்றது !


அழகான குயிலின் நாதத்தைக் கேட்க
யாவருக்கும் பூரண அருகதை உண்டு !
உனக்காகவும் குயில் கூவுகின்றது !


கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்க
மனமுள்ளவர் எவராலும் முடியும் !
உனக்கும் மனம் உண்டு !


எல்லையற்ற ஆகாசத்தின் மேகங்கள்
எல்லோரையும் ஆசையாய் கவனிக்கின்றன !
அவை உன்னையும் பார்க்கின்றன !


வெள்ளி நிலவின் காதல் உலகின்
புல் வெளியின் மீது கூட உண்டு !
உன் மீதும் நிலவிற்கு காதல் !


உலகில் உற்பத்தியாகும் ஆடைகளில்
எல்லோருக்கும் ப்ரத்யேகமானது உண்டு !
உனக்கான ஆடையும் காத்திருக்கிறது !


 ஒவ்வொரு இரவும் எல்லோருக்காகவும்
பொதுவாகத் தான் வருகிறது !
உனக்கும் இரவில் ஒரு பங்கு உண்டு !


நகரும் ஒவ்வொரு நொடியிலும்
எல்லோருக்கும் நேரம் பொது தான் !
உனக்கான நேரம் தினமும் உண்டு !


மாறும் காலங்களில் எல்லோருக்கும்
மாறுதல் நிச்சயம் வரும் !
உனக்கும் மாறுதல் வருகிறது !


உலகில் வாழ எல்லோருக்கும்
நிச்சயம் அதிகாரமும், உரிமையும் உண்டு !
உனக்கும் வாழ்க்கை உண்டு !


வாழ்ந்து பார் . . .
அனுபவித்து பார் . . .


உன் பங்கு வாழ்க்கையை வாழ் !
உன் பங்கு சந்தோஷங்களை அனுபவி !
உன் பங்கு முயற்சிகளை செய் !
உன் பங்கு வெற்றிகளை அடை !
உன் பங்கு காத்திருக்கிறது !

 

Read more...

Monday, September 24, 2012

கல்பக வ்ருக்ஷம் ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
 
கல்பக வ்ருக்ஷம் !
 
வானுலகில் ஒரு மரம் !
 
 
 
அதன் பெயர் !
கல்பக வ்ருக்ஷம் !
அதன் அடியில் போய் நின்று கேட்டால்,
அது கேட்டதையெல்லாம் தரும் !
 
என்ன ஆசையாய் இருக்கிறதா ? ! ?
 
 
நீயும் இந்த உலகில் ஒரு அழகான
கல்பக வ்ருக்ஷத்தின் கீழ் தான்
இத்தனை வருஷமாய் நிற்கிறாய் !
 
 
இது வரை அந்த கல்பக வ்ருக்ஷம்
உனக்கு வேண்டிய பலவற்றை
தாராளமாகக் கொடுத்திருக்கிறது !
 
 
நீ பலமுறை உன் ஆசையினால்
வழி தவறினபோதும் அந்த மரம்
உனக்கு நல்லதையே செய்திருக்கிறது !
 
 
இப்பொழுதும் அது உனக்கு
நல்லதை மட்டுமே செய்கிறது !
 
 
இனி வரும் காலத்திலும் உனக்கு
நல்லதை மட்டுமே செய்யும் !
 
 
அந்த கல்பக வ்ருக்ஷத்தின் பெயர்
"வாழ்க்கை" !


அது எப்படி என்று கேட்கிறாயா ?

யோசித்து பார் !


சிறிய வயதில் பொம்மை கேட்டாய் ;

வளரும் வயதில் நிறைய கேட்டாய் ;

ஆசை ஆசையாய் வெற்றிகள் கேட்டாய் ;
 
 
உன் முன் வினைகளால்
நீ நொந்து போன சமயத்திலும்
இந்த கல்பக வ்ருக்ஷம்
உனக்கு நல்லதைக் கொடுத்தது !

இது போல் நிறைய சொல்வேன் !

எல்லாவற்றையும் நான் உள்ளபடி
சொல்லிவிட்டால் நீ எப்பொழுதுதான்
யோசிப்பாய் . . .


யோசி . . .யோசி . . . யோசி . . .


நீயும் உன் அனுபவங்களை
ஆனந்தவேதமாய் சொல்லவேண்டாமா ?


எனக்கு ஆசை . . .
உன் ஆனந்தவேதத்தைப் படிக்க ! ! !


நீயும் எழுதுவாய் . . .
எனக்கு நம்பிக்கை இருக்கிறது ! ! !


உன் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
என் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
நம் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !


வாழ்க்கை என்னும் கல்பக வ்ருக்ஷத்திடம்
வித விதமாய் கேட்கலாம் !
கொஞ்சம் உதாரணங்கள் சொல்லட்டுமா ?த்ருவன் ஸ்ரீஹரியைக் கேட்டான் !

ப்ரஹ்லாதன் நரசிம்மனைக் கேட்டான் !

கோபிகைகள் க்ருஷ்ணனைக் கேட்டனர் !

மீரா கிரிதாரியைக் கேட்டாள் !

சக்கு பாய் விட்டலனைக் கேட்டாள் !

விபீஷணன் ராமனைக் கேட்டார் !

லக்ஷ்மணன் கைங்கர்யத்தைக் கேட்டார் !

சத்ருக்னன் பாகவத பக்தியைக் கேட்டார் !

யசோதா பகவானின் தாயாகவும்,
பாலக்ருஷ்ண லீலையையும் கேட்டாள் !

சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை
திடமாகக் கேட்டான் !

குலசேகர ஆழ்வார் அடியவர்
குழாத்தில் வாழ்க்கைக் கேட்டார் !
 
 நம் கோதை நாச்சியார் ரங்கனை
மணாளனாகக் கேட்டாள் !

பத்ராசல ராமதாசரோ தன் ராமனுக்கு
அழகான ஒரு கோயிலைக் கேட்டார் !

வேத வ்யாசரோ தன் ஆத்மாவுக்கு
த்ருப்தியான ஒரு நூலைக் கேட்டார் !

சுகப்ரும்ம மஹரிஷியோ தன் பாகவதம்
கேட்க ஒரு சிஷ்யனைக் கேட்டார் !

பரீக்ஷித்தோ தனக்கு சரியான வழி காட்ட
ஒரு சத் குருவைக் கேட்டார் !
 
 துந்துகாரி தன் பிசாசு ஜன்மம் நீங்க
சரியான தீர்வு கேட்டான் !
 
சந்த் துகாராம் தன் விட்டலனின்
இதயத்தில் ஓர் இடம் கேட்டார் !
 
பெரியாழ்வார் தன் பகவான் பல்லாண்டு
பல்லாண்டு நன்றாயிருக்கக் கேட்டார் !

சைதன்யர் எல்லா ஜனங்களும் பகவன் நாமம்
விடாமல் ஜபிக்கக் கேட்டார் !

கஜேந்திரன் முதலைப் பிடியில் இருந்து
தன்னைக் காப்பாற்றக் கேட்டது !
 
கூரத்தாழ்வான் தான் பெற்ற நாலூரானும்
பெற வேண்டுமெனக் கேட்டார் !

ஸ்வாமி இராமானுஜர் எல்லோரும்
மோக்ஷம் அடைய தனக்கு நரகம் கேட்டார் !

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு
நம் இராமானுஜரைக் கேட்டார் !

இப்படி பல கோடி பேர்
அற்புதமான பல விஷயங்களைக்
கேட்டுப் பெற்றனர் !

இந்தக் கல்பக வ்ருக்ஷத்திடம்
தப்பானவற்றைக் கேட்டவரும் உண்டு !

இராவணன் அடுத்தவரின்
மனைவியைக் கேட்டான் !

இரண்ய கசிபு பக்தரை
அழிக்கக் கேட்டான் !

இரண்யாக்ஷன் பலசாலியான
விரோதியைக் கேட்டான் !
 
நான் ஏன் தப்பாகக் கேட்டவரைப்
பற்றி நிறைய சொல்லுவானேன் ?
 
இப்பொழுது நீ சொல் ?
 
ஓ ! நான் என்ன கேட்டேன்
என்று கேட்கிறாயா ?
 
நான் என்ன கேட்டேன் என்பதை
காலம் பதிலாய் சொல்லும் ! ! !


நீ சொல் . . .
நீ என்ன கேட்டாய் ?


போனதெல்லாம் போகட்டும் !


இனி நீ என்ன கேட்கப்போகிறாய் ! ! !


யோசித்து முடிவெடு . . .

உனக்குத் தர உன்
கல்பக வ்ருக்ஷம் ( வாழ்க்கை)
சுகமாய் காத்திருக்கிறது !


சீக்கிரம் கேட்டுக்கொள் ! ! !
 
 

Read more...

Sunday, September 23, 2012

அன்புக்கு நான் அடிமை !

ராதேக்ருஷ்ணா
 
 
 
அன்புக்கு நான் அடிமை !
 
 
ராதாவின் அன்புக்கு நான் அடிமை !
 
 
க்ருஷ்ணனின் ப்ரிய நாயகியான
ராதிகா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
 
 
 
ப்ரேம ரூபிணி நீளா தேவியின் அவதாரமான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
வ்ருஷபானு தேவரின் செல்ல புத்ரியான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
கீர்த்தி ராணி தேவியின் குழந்தையான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
பர்சானாவின் அழகு ராஜகுமாரியான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !


லலிதா,விசாகா,சுதேவி, துங்கவித்யா,
இந்துலேகா,சித்ரா,சம்பகலதா,ரங்கதேவி
ஆகிய அஷ்ட சகிகளின் தலைவியான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
உலகில் க்ருஷ்ண பக்தர்களுக்கு தாயான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
ராச மண்டலத்தின் ஆனந்த வேதமான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
க்ருஷ்ணனின் இதயத்தில் அன்புமய ரூபமான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
ஜயதேவரின் கீத கோவிந்த ரஹஸ்யமான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
கலியுகத்தில் சைதன்யரின் அவதாரமான
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !
 
 
 சேவா குஞ்சத்தில் க்ருஷ்ணனும்
எவளிடம் சரணாகதி செய்து 
அன்பிற்காக கையேந்துகிறானோ
அந்த ப்ரேம ஸ்வரூபியான என்
ராதா ராணியின் அன்புக்கு நான் அடிமை !


ஹே ராதே !
இன்று உன் பிறந்த நாள் !
 
 
உன் குழந்தையான நான்
உன் பிறந்த நாளுக்கு என்ன பரிசு தர ?


க்ருஷ்ணனிடம் அவன் பிறந்த நாளுக்கு
என்ன தர என்று கேட்டேன் ?

அவன் தன்னைப் பரிசாக
எனக்குத் தந்து விட்டான் !
 
 
 
ஒன்று செய்யலாமா ? ! ?
பேசாமல் நீ என் இதயத்துள்
நிரந்தரமாக குடியேறி விடு !
 
 
அப்பொழுது நீ என்னிடம் உள்ள
உன் க்ருஷ்ணனை ரஹஸ்யமாய்
வித விதமாய் அனுபவிக்கலாம் !
 
 
இதுவே உன் பிறந்த நாளுக்கு
நான் தரும் பரிசு !
 
 
சரி . . . சரி . . .
சீக்கிரம் என் இதயத்தில்
குடியேறிவிடு . . .
 
உன் க்ருஷ்ணனை
உள்ளபடி அனுபவித்துக்கொள் !
 

Read more...

Friday, September 21, 2012

பகவன் நாம போதேந்திராள் !

ராதேக்ருஷ்ணா
 
 
 
ராம . . . ராம . . . ராம . . .
 
 
 
"ஆயுதம் தரிப்பவரில்
நான் ராமன்" என்று
போர்களத்தில் முழங்கினான்
கீதாசார்யன் கண்ணன் !
 
 
 
 "ராம" என்பதை தப்பாக
"ம ராம ரா" என்று ஜபித்தே
 கொள்ளைக்காரன் ரத்னாகரனும்
வால்மீகி மஹரிஷியானான் !
 
 
 
மூன்று முறை "ராம"
என்று சொன்னால்
சஹஸ்ர நாமம் சொன்னதற்கு
சமம் என்றார் சிவபெருமான் !
 
 
 
கற்பார் ராம பிரானை அல்லால்
மற்றும் கற்பரோ என்று
ஆச்சரியமாக உலகைக் கேட்டார்
நம் ஸ்வாமி நம்மாழ்வார் ! 
 
 
 
சினத்தினால் தென்னிலங்கை
கோமானைச் செற்ற மனத்துக்கினியானை
பாடவும் நீ  ஏன் வாய் திறவாய்
என்று கேட்டாள் கோதை நாச்சியார் !
 
 
 
 ஒரு முறை "ராம"
என்று சொன்னால்
நன்மையும்,செல்வமும்,
நாளும் நல்கும் என்றான் கம்பன்!" ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம "
என்று எல்லோரையும் ஜபிக்கச்
சொல்லி பவித்ரமாக்கிக் காட்டினார்
ஸ்வாமி சமர்த்த ராமதாசர் !நிதி தருவது சுகமா அல்லது
ராம சந்நிதி தருவது சுகமா என்று
தன் மனதைக் கேட்டார்
சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் !
 
 
 
ராம ராம என்று விடாமல்
ஜபித்து ஜபித்து மாருதியையும்
வசப்படுத்திக் காட்டினார்
துளசி போல் பாவனமான துளசிதாசர் !
 
 
 
 "ராம" நாமமே கற்கண்டு;
அதை அறியாதவன் மனம் கற்குண்டு
என்று கோபத்தில் வைதனர்
நம் மூதாதையர் !எத்தனை சொல்லி என்ன பயன் ?இந்தக் கலியுக ஜனங்கள் என்ன
கேட்டுவிடப்போகிறார்களா ?
இல்லை . . . கேட்டுவிட்டு உடனே
ஜபிக்கத்தான் போகிறார்களா ?


ஜனங்களை ராம நாமம் ஜபிக்க
வைக்கவேண்டுமென்ற ஒரு ஆசை
ஒருகால் ஒரு கோல் சன்னியாசிக்கு
வந்துவிட்டதையா . . .
 
 
 காஞ்சியில் சங்கரா சங்கரா
என்று சொல்லிக் கொண்டிருக்காமல்
"ராம ராம" என்று ஜபித்து ஆசை தீராமல்
காசிக்கு போனாரையா . . .


ஜகந்நாதனின் புரியில் "ராம ராம"
என்று ஜபித்து அதன் பலத்தை
ஜனங்களுக்கும் ஒரு பதிவிரதையின்
மூலமாய் நிரூபித்தாரையா . . .


சிவனே என்று சும்மா இருக்கமுடியாமல்
ராமா என்று ஊர் முழுக்க பிதற்றிக்
கொண்டு, ஊமைப் பையனையும்
மனதில் ராம என்று ஜபிக்க வைத்தாரையா . . .ராம நாமத்தை ஜபிக்க வைத்து
ஆற்காடு ஜனங்களையும், நவாபையும்
கொடிய வியாதியிலிருந்து
மீட்டு ஆரோக்கியம் தந்தாரையா . . .தாசிக்கும் ராமன் உண்டு என்று,
வேசிக்கும் ராம நாமத்தைத் தந்து அவள்
காசிக்குப் போகாமலேயே காசினியை
விட்டு பரமபதம் அடைய வைத்தாரையா . . .என்றும் ராமன் உண்டு, ராம நாமமுண்டு,
என்று நாம் என்றும் விடாமல் ஜபிக்க
இன்றும் காவேரிக் கரையில்
சுகமாய் ஜபிக்கிறாரையா . . .ராம என்று சொல்லடி என்ற சிவனே
ராம என்று சொல்வீர் என்று வந்தாரையா !


நாமமே நமக்குக் கலியுகத்தில் கதி என்று
பகவன் நாம போதேந்திரர் சொல்கிறாரையா !


கோவிந்தபுரம் போம் ஐயா !
காது கொடுத்து ராம ஜபம் கேளும் ஐயா !
பாபத்தை கொளுத்திப் போடும் ஐயா !ஐயா வாரீர் . . . அம்மா வாரீர் . . .
தாதா வாரீர் . . . பாட்டி வாரீர் . . .
அண்ணன் வாரீர் . . . அக்கா வாரீர் . . .
தம்பி வாரீர் . . . தங்கை வாரீர் . . .
பெரியவர் வாரீர் . . . சிறியவர் வாரீர் . . .நாம போதேந்திரரைக் காண வாரீர் . . .
காவேரி ஆற்றங்கரைக்கு வாரீர் . . .
கோவிந்தபுரம் வாரீர் . . .
கும்பகோணம் வாரீர் . . .
 
 
 
நாமத்தில் போதையேறி
கோவிந்த புர இந்திரனாய் வீற்றிருக்கும்
பகவன் நாம போதேந்திரரைக் காண வாரீர் !
 
 
 
ராம நாம போதையில்
தான் என்னும் போதமிழந்த
ஒரு கோல் இந்திரனான
பகவன் நாம போதேந்திரரைக் காண வாரீர் !வானுலக இந்திரன் சூழ்ச்சிக்காரன் !
கோவிந்தபுர போத(தே)இந்திரன் பாகவதன் !


இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும் அச்சுவை
பெறினும் வேண்டேன் என்று
ராம நாமச் சுவையில்
பித்தேறிய சடையில்லாத
ஒரு கோல் சிவனைக் காண
கோவிந்தபுரம் வாரீர் !இந்த இந்திரனைப் பாரும் . . .
வானுலக இந்திரனை மறக்கவும் . . .


போதேந்திரா . . .
எனக்கும் நாம போதை வேண்டும் !
உன் போல் ராம நாம போதையில்லை !
க்ருஷ்ண நாம போதை வேண்டும் !


இந்த ஏழைக்கு க்ருஷ்ண நாம
போதையில் தன் போதமிழக்க
விரைவாய் அருள்வாய் !


சத்குரு பகவன் நாம
போதேந்திர மஹராஜரின் திருவடிகளில்
அடியேன் தாசன் சேவிக்கிறேன் !


 

Read more...

Wednesday, September 19, 2012

ராஜகோபாலா ! ! !

ராதேக்ருஷ்ணா


ராஜகோபாலா !

மன்னார்குடி ராஜகோபாலா ! ! ! 


எத்தனை நாள் உன்னை
பார்க்க ஏங்கியிருந்தேன் !

கடைசியாக உன் குழந்தையை
கூப்பிட்டு விட்டாயே
ராஜகோபாலா !


நிஜமாகவே நான் உன்னைப்
பார்த்துவிட்டேனா ?

 நினைக்க நினைக்க
அதிசயமாய் இருக்கிறதே ! ? !
எனக்கு அழுகைதான் வருகிறது !


என்னையும் உன் பக்தனாக
ஏற்று உன் தரிசனத்தைத்
தந்துவிட்டாயே ? ! ?


கோபிலருக்கும்,கோப்ரலயருக்கும்
அனுக்ரஹம் செய்ய மன்னார்குடிக்கு
நீ வந்தாயென புராணம்
சொல்கிறது . . .

ஆனால் நான் சொல்கிறேன் !
இந்த உலகில் உன் பக்தியின்
எல்லையை அனுபவிக்கத்
துடிக்கும் இந்த கோபாலவல்லியை
கலியுகத்தில் தேற்றவே நீ வந்தாய் ! ! !உன் இடுப்பு வளைவில் நான்
என்னைத் தொலைத்தேன் !


உன் அழகிய திருமார்பில் நான்
என்னை இழந்தேன் !


உன் அற்புத கை அழகில் நான்
என்னை பறிகொடுத்தேன் !


உன் அசத்தலான காலழகில் நான்
என்னை மறந்துவிட்டேன் !


உன் கையில் என்னை ஒரு
மாடு மேய்க்கும் கோலாகக்
கொள்வாயா ? ? ?


உன் காதில் என்னை ஒரு
குண்டலமாக ஏற்றுக் கொள்வாயா ? ? ?


உன் காலில் என்னை ஒரு சலங்கையாக
ஏற்றுக்கொள்வாயா ? ? ?


உன் இடுப்பில் தொங்கும்
சாவிக்கொத்தாக என்னை
மாற்றிவிடமாட்டியா ? ? ?


உன் காது குடையும் குறும்பாக
என்னை செய்யமாட்டாயா ? ? ?


உன்னால் மேய்க்கப்படும்
ஒரு மாடாக இந்த தாசனை
செய்துவிடமாட்டாயா ? ? ?


உன்னையே பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு கன்றுக்குட்டியாக என்னை
செய்துகொள்வாயா ? ? ?


உன் இடுப்பில் ஒரு
அரைச்சலங்கையாக என்னை
மாட்டிக்கொள்ள மாட்டாயா ? ? ?


உன் அழகையெல்லாம்
தான் மட்டும் ரஹஸ்யமாய்
அனுபவிக்கும் உனது
பீதாம்பரமாய் என்னை
உடுத்திக்கொள்ளமாட்டாயா ? ? ?


என்னை ஏதேனும் செய் . . .
என் ராஜகோபாலா . . .


என்னை உன்னோடு எதுவாகவாவது
வைத்துக்கொள் ராஜகோபாலா ! ! !


காத்திருக்கிறேன் உன்
சொத்தாய் . . .


வருவாய் என் ராஜகோபாலா !

கொண்டுசெல்வாய் என்னை ராஜகோபாலா !

உன்னோடு வைத்துக்கொள்வாய்
உலகில் மிகச்சிறந்த மேய்ப்பனே
மன்னார்குடி ராஜகோபாலா ! ! !


 

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP