ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, September 19, 2012

ராஜகோபாலா ! ! !

ராதேக்ருஷ்ணா


ராஜகோபாலா !

மன்னார்குடி ராஜகோபாலா ! ! ! 


எத்தனை நாள் உன்னை
பார்க்க ஏங்கியிருந்தேன் !

கடைசியாக உன் குழந்தையை
கூப்பிட்டு விட்டாயே
ராஜகோபாலா !


நிஜமாகவே நான் உன்னைப்
பார்த்துவிட்டேனா ?

 நினைக்க நினைக்க
அதிசயமாய் இருக்கிறதே ! ? !
எனக்கு அழுகைதான் வருகிறது !


என்னையும் உன் பக்தனாக
ஏற்று உன் தரிசனத்தைத்
தந்துவிட்டாயே ? ! ?


கோபிலருக்கும்,கோப்ரலயருக்கும்
அனுக்ரஹம் செய்ய மன்னார்குடிக்கு
நீ வந்தாயென புராணம்
சொல்கிறது . . .

ஆனால் நான் சொல்கிறேன் !
இந்த உலகில் உன் பக்தியின்
எல்லையை அனுபவிக்கத்
துடிக்கும் இந்த கோபாலவல்லியை
கலியுகத்தில் தேற்றவே நீ வந்தாய் ! ! !உன் இடுப்பு வளைவில் நான்
என்னைத் தொலைத்தேன் !


உன் அழகிய திருமார்பில் நான்
என்னை இழந்தேன் !


உன் அற்புத கை அழகில் நான்
என்னை பறிகொடுத்தேன் !


உன் அசத்தலான காலழகில் நான்
என்னை மறந்துவிட்டேன் !


உன் கையில் என்னை ஒரு
மாடு மேய்க்கும் கோலாகக்
கொள்வாயா ? ? ?


உன் காதில் என்னை ஒரு
குண்டலமாக ஏற்றுக் கொள்வாயா ? ? ?


உன் காலில் என்னை ஒரு சலங்கையாக
ஏற்றுக்கொள்வாயா ? ? ?


உன் இடுப்பில் தொங்கும்
சாவிக்கொத்தாக என்னை
மாற்றிவிடமாட்டியா ? ? ?


உன் காது குடையும் குறும்பாக
என்னை செய்யமாட்டாயா ? ? ?


உன்னால் மேய்க்கப்படும்
ஒரு மாடாக இந்த தாசனை
செய்துவிடமாட்டாயா ? ? ?


உன்னையே பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு கன்றுக்குட்டியாக என்னை
செய்துகொள்வாயா ? ? ?


உன் இடுப்பில் ஒரு
அரைச்சலங்கையாக என்னை
மாட்டிக்கொள்ள மாட்டாயா ? ? ?


உன் அழகையெல்லாம்
தான் மட்டும் ரஹஸ்யமாய்
அனுபவிக்கும் உனது
பீதாம்பரமாய் என்னை
உடுத்திக்கொள்ளமாட்டாயா ? ? ?


என்னை ஏதேனும் செய் . . .
என் ராஜகோபாலா . . .


என்னை உன்னோடு எதுவாகவாவது
வைத்துக்கொள் ராஜகோபாலா ! ! !


காத்திருக்கிறேன் உன்
சொத்தாய் . . .


வருவாய் என் ராஜகோபாலா !

கொண்டுசெல்வாய் என்னை ராஜகோபாலா !

உன்னோடு வைத்துக்கொள்வாய்
உலகில் மிகச்சிறந்த மேய்ப்பனே
மன்னார்குடி ராஜகோபாலா ! ! !


 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP