ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 செப்டம்பர், 2012

கல்பக வ்ருக்ஷம் ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
 
கல்பக வ்ருக்ஷம் !
 
வானுலகில் ஒரு மரம் !
 
 
 
அதன் பெயர் !
கல்பக வ்ருக்ஷம் !
அதன் அடியில் போய் நின்று கேட்டால்,
அது கேட்டதையெல்லாம் தரும் !
 
என்ன ஆசையாய் இருக்கிறதா ? ! ?
 
 
நீயும் இந்த உலகில் ஒரு அழகான
கல்பக வ்ருக்ஷத்தின் கீழ் தான்
இத்தனை வருஷமாய் நிற்கிறாய் !
 
 
இது வரை அந்த கல்பக வ்ருக்ஷம்
உனக்கு வேண்டிய பலவற்றை
தாராளமாகக் கொடுத்திருக்கிறது !
 
 
நீ பலமுறை உன் ஆசையினால்
வழி தவறினபோதும் அந்த மரம்
உனக்கு நல்லதையே செய்திருக்கிறது !
 
 
இப்பொழுதும் அது உனக்கு
நல்லதை மட்டுமே செய்கிறது !
 
 
இனி வரும் காலத்திலும் உனக்கு
நல்லதை மட்டுமே செய்யும் !
 
 
அந்த கல்பக வ்ருக்ஷத்தின் பெயர்
"வாழ்க்கை" !


அது எப்படி என்று கேட்கிறாயா ?

யோசித்து பார் !


சிறிய வயதில் பொம்மை கேட்டாய் ;

வளரும் வயதில் நிறைய கேட்டாய் ;

ஆசை ஆசையாய் வெற்றிகள் கேட்டாய் ;
 
 
உன் முன் வினைகளால்
நீ நொந்து போன சமயத்திலும்
இந்த கல்பக வ்ருக்ஷம்
உனக்கு நல்லதைக் கொடுத்தது !

இது போல் நிறைய சொல்வேன் !

எல்லாவற்றையும் நான் உள்ளபடி
சொல்லிவிட்டால் நீ எப்பொழுதுதான்
யோசிப்பாய் . . .


யோசி . . .யோசி . . . யோசி . . .


நீயும் உன் அனுபவங்களை
ஆனந்தவேதமாய் சொல்லவேண்டாமா ?


எனக்கு ஆசை . . .
உன் ஆனந்தவேதத்தைப் படிக்க ! ! !


நீயும் எழுதுவாய் . . .
எனக்கு நம்பிக்கை இருக்கிறது ! ! !


உன் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
என் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
நம் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !


வாழ்க்கை என்னும் கல்பக வ்ருக்ஷத்திடம்
வித விதமாய் கேட்கலாம் !
கொஞ்சம் உதாரணங்கள் சொல்லட்டுமா ?



த்ருவன் ஸ்ரீஹரியைக் கேட்டான் !

ப்ரஹ்லாதன் நரசிம்மனைக் கேட்டான் !

கோபிகைகள் க்ருஷ்ணனைக் கேட்டனர் !

மீரா கிரிதாரியைக் கேட்டாள் !

சக்கு பாய் விட்டலனைக் கேட்டாள் !

விபீஷணன் ராமனைக் கேட்டார் !

லக்ஷ்மணன் கைங்கர்யத்தைக் கேட்டார் !

சத்ருக்னன் பாகவத பக்தியைக் கேட்டார் !

யசோதா பகவானின் தாயாகவும்,
பாலக்ருஷ்ண லீலையையும் கேட்டாள் !

சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை
திடமாகக் கேட்டான் !

குலசேகர ஆழ்வார் அடியவர்
குழாத்தில் வாழ்க்கைக் கேட்டார் !
 
 நம் கோதை நாச்சியார் ரங்கனை
மணாளனாகக் கேட்டாள் !

பத்ராசல ராமதாசரோ தன் ராமனுக்கு
அழகான ஒரு கோயிலைக் கேட்டார் !

வேத வ்யாசரோ தன் ஆத்மாவுக்கு
த்ருப்தியான ஒரு நூலைக் கேட்டார் !

சுகப்ரும்ம மஹரிஷியோ தன் பாகவதம்
கேட்க ஒரு சிஷ்யனைக் கேட்டார் !

பரீக்ஷித்தோ தனக்கு சரியான வழி காட்ட
ஒரு சத் குருவைக் கேட்டார் !
 
 துந்துகாரி தன் பிசாசு ஜன்மம் நீங்க
சரியான தீர்வு கேட்டான் !
 
சந்த் துகாராம் தன் விட்டலனின்
இதயத்தில் ஓர் இடம் கேட்டார் !
 
பெரியாழ்வார் தன் பகவான் பல்லாண்டு
பல்லாண்டு நன்றாயிருக்கக் கேட்டார் !

சைதன்யர் எல்லா ஜனங்களும் பகவன் நாமம்
விடாமல் ஜபிக்கக் கேட்டார் !

கஜேந்திரன் முதலைப் பிடியில் இருந்து
தன்னைக் காப்பாற்றக் கேட்டது !
 
கூரத்தாழ்வான் தான் பெற்ற நாலூரானும்
பெற வேண்டுமெனக் கேட்டார் !

ஸ்வாமி இராமானுஜர் எல்லோரும்
மோக்ஷம் அடைய தனக்கு நரகம் கேட்டார் !

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு
நம் இராமானுஜரைக் கேட்டார் !

இப்படி பல கோடி பேர்
அற்புதமான பல விஷயங்களைக்
கேட்டுப் பெற்றனர் !

இந்தக் கல்பக வ்ருக்ஷத்திடம்
தப்பானவற்றைக் கேட்டவரும் உண்டு !

இராவணன் அடுத்தவரின்
மனைவியைக் கேட்டான் !

இரண்ய கசிபு பக்தரை
அழிக்கக் கேட்டான் !

இரண்யாக்ஷன் பலசாலியான
விரோதியைக் கேட்டான் !
 
நான் ஏன் தப்பாகக் கேட்டவரைப்
பற்றி நிறைய சொல்லுவானேன் ?
 
இப்பொழுது நீ சொல் ?
 
ஓ ! நான் என்ன கேட்டேன்
என்று கேட்கிறாயா ?
 
நான் என்ன கேட்டேன் என்பதை
காலம் பதிலாய் சொல்லும் ! ! !


நீ சொல் . . .
நீ என்ன கேட்டாய் ?


போனதெல்லாம் போகட்டும் !


இனி நீ என்ன கேட்கப்போகிறாய் ! ! !


யோசித்து முடிவெடு . . .

உனக்குத் தர உன்
கல்பக வ்ருக்ஷம் ( வாழ்க்கை)
சுகமாய் காத்திருக்கிறது !


சீக்கிரம் கேட்டுக்கொள் ! ! !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP