ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Sunday, September 30, 2012

தனிமை இனிமை !

ராதேக்ருஷ்ணா
தனிமை . . .

அமைதி . . .

நிம்மதி . . .


 தனிமை ஒரு வரம் !

தனிமை ஒரு சுகம் !

தனிமை ஒரு பலம் !

தனிமை ஒரு தவம் !

தனிமை ஒரு யாகம் !

தனிமை கிடைப்பது அரிது !
தனிமை கிடைப்பது அவசியம் !
தனிமை கிடைப்பது அனுக்ரஹம் !


தனிமை நிறைய வேண்டும் !
தனிமை நிறைய தரும் !
தனிமை நிறைய சொல்லும் !
தனிமை நிறைய பக்குவப்படுத்தும் !
தனிமை நிறைய யோசிக்கவைக்கும் !
தனிமை நிறைய கேள்விகள் கேட்கும் !


தனிமை நம்மை நம்மோடு சேர்க்கும் !
தனிமை நம்மை நம்மிடம் தரும் !
தனிமை நம்மை ஆராயச் செய்யும் !
தனிமை நம்மை உறுதியாக்கும் !
தனிமை நம்மை க்ருஷ்ணனிடம் கொடுக்கும் !


தனிமை மனதில் ஒரு மாறுதல் தரும் !
தனிமை நம் பேச்சில் நிதானம் தரும் !
தனிமை நம் மூளையைச் சலவை செய்யும் !
தனிமை நமக்கு ஒரு தைரியம் தரும் !


தனிமை ஒரு மௌனக் கவிதை !
தனிமை ஒரு அழகான தென்றல் !
தனிமை ஒரு மெல்லிய பூவின் வாசம் !


தனிமை குளிர் தரும் மேகம் !
தனிமை சுகமான மார்கழியின் பனி !
தனிமை இதமான கோடை மழை !


தனிமையில் இயற்கை நிறைய சொல்லும் !
தனிமையில் சிறு பொருளும் தத்துவம் பகரும் !
தனிமையில் தாய் மொழியின் அழகு தெரியும் !


தனிமை நம் ரஹஸ்ய தோழன் / தோழி !
தனிமை நம்முடைய அற்புத ஆசான் !


தனிமையில் இருளும் பகலாகும் !
தனிமையில் பகலும் இரவாகும் !
தனிமையில் மற்றவரின் அருமை புரியும் !
தனிமையில் நம் குற்றங்கள் தெரியும் !தனிமை க்ருஷ்ணனின் தேவையைச் சொல்லும் !
தனிமை க்ருஷ்ணனின் பலத்தைக் காட்டும் !
தனிமை க்ருஷ்ணனை வரவழைக்கும் !


தனிமை கண்டு கலங்காதே !


தாயின் கருவறையில் தனிமையில்
தானே நாம் இருந்தோம் !

குளியலறையில் தனிமையில்
தானே நாம் இருக்கோம் !

இது போல் பல தனிமை !


சில நேரங்களில் நாமே
தனிமையைத் தேடுகிறோம் !

சில சமயங்களில் தனிமையே
நம்மை நாடி வருகிறது !


எது எப்படியோ தனிமை நல்லதே !


ஆனால் சிலர் தனிமையைக்
கண்டு அஞ்சுகின்றனர் !

சிலர் தனிமையில்
பலவீனமாகுகின்றனர் !

சிலர் தனிமையில் புலம்புகின்றார் !

சிலர் தனிமையில் அழுகின்றார் !

சிலர் தனிமையில் குழம்புகின்றார் !


க்ருஷ்ணா என்று சொல்லிப்பார் !


அப்பொழுது நீயே தனிமை
எப்போது கிடைக்கும் என்று ஏங்குவாய் !


தனிமை உலகிடமிருந்து தான் !
தனிமை ஜனங்களிடமிருந்து தான் !
தனிமை ஓட்டத்திடமிருந்து தான் !


தனிமை நம்மை நாம ஜபத்திடமிருந்து
தனிமைப்படுத்தாது !

தனிமை நம்மை பக்தியிடமிருந்து
தனிமைப்படுத்தாது !

தனிமை நம்மை பக்தரிடமிருந்து
தனிமைப்படுத்தாது !

தனிமை நம்மை க்ருஷ்ணனிடமிருந்து
தனிமைப்படுத்தாது !


உனக்கு ஒரு நாள் புரியும் !


தனிமை விலை கொடுத்து
வாங்க முடியாத ஒரு பொக்கிஷம் !

தனிமை தானாய் கிடைக்கும்
ஒரு அரிய வாய்ப்பு !


நான் தேடின ஒரு தனிமை !
நான் ஏங்கின ஒரு தனிமை !
நான் காத்திருந்த ஒரு தனிமை !
இப்பொழுது க்ருஷ்ணன் தந்திருக்கிறான் !


நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் !
தனிமையின் இனிமையை ரசிக்கிறேன் !


தனிமை என்னை மாற்றுகிறது !
தனிமை என்னை 
மாற்றிக் கொண்டிருக்கிறது !
தனிமை என்னை மாற்றும் !


ஒரு புதியவனாய் நான் மாறுகிறேன் !
ஒரு புதியவனாய் புதியதாய் பிறக்கிறேன் !
ஒரு புதியவனாய் புதியதாய்
உலகைப் பார்க்கிறேன் !


தனிமை என்னை வார்த்தெடுக்கிறது !
தனிமை என்னை செதுக்கிறது !
தனிமை என்னை உற்சாகப்படுத்துகிறது !


தனிமை இனிமை !


இந்த தனிமைக்கு நன்றி !
தனிமை தந்த க்ருஷ்ணனுக்கு நன்றி !

என் தனிமையை மதிக்கும்
அனைவருக்கும் நன்றி !

என் தனிமையை கெடுக்காத
எல்லோருக்கும் மிக்க நன்றி !

எனது தனமையே நீ வாழ்க !
எனது தனிமையே நீ வளர்க !

எனது தனிமையே என்றும்
என்னை விட்டு விடாதே !


தனிமையே நீயும் நானும்
உயிர் தோழர்கள் அல்லவா !

பல வருடம் கழித்து நீயும்
நானும் சேர்ந்திருக்கிறோம் !

 பல வருஷ விஷயங்களைப்
பகிர்ந்துகொண்டேன் உன்னுடன் !

 என்னை விட நீ தான்
மிகவும் சந்தோஷமாயிருப்பாய் !

என்னை நீ மட்டும்
அனுபவிக்க காத்திருந்தாயே !

வா . . . நிம்மதியாய் இருப்போம் !
சுகமாய் பொழுதைக் கழிப்போம் !

க்ருஷ்ணனை ரசிப்போம் !
உலகை ரசிப்போம் !
நம்மை ரசிப்போம் !


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP