ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, September 25, 2012

உன் பங்கு !

ராதேக்ருஷ்ணா


உனக்கும் ஒரு பங்கு உண்டு !


உலகில் சூரியன் உதிப்பது
ஒருவருக்காக அல்ல !
சூரியன் உதிப்பது உனக்காகவும் தான் !


மழை பெய்வது யாரோ
சிலருக்காக மட்டுமல்ல !
மழையில் உனக்கும் ஒரு பங்கு உண்டு !


காற்று வீசுவது உலகில்
எல்லோருக்காகவும் தான் !
அந்த காற்று உனக்கும் சேர்த்து தான் !


பூமி சுழல்வது தனக்காக
மட்டுமல்ல ! நமக்காகவும் தான் !
அந்த பூமியில் உனக்கும் அதிகாரம் உண்டு !


விளையும் காய்கறிகளில், பழங்களில்
ஒவ்வொரு ஜீவனுக்கும் பங்கு உண்டு !
உனக்கும் அவை உண்டு !


வீசும் தென்றலை அனுபவிக்க
உலகில் யாருக்கும் உரிமை உண்டு !
உனக்காகவும் தென்றல் வீசுகின்றது !


அழகான குயிலின் நாதத்தைக் கேட்க
யாவருக்கும் பூரண அருகதை உண்டு !
உனக்காகவும் குயில் கூவுகின்றது !


கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்க
மனமுள்ளவர் எவராலும் முடியும் !
உனக்கும் மனம் உண்டு !


எல்லையற்ற ஆகாசத்தின் மேகங்கள்
எல்லோரையும் ஆசையாய் கவனிக்கின்றன !
அவை உன்னையும் பார்க்கின்றன !


வெள்ளி நிலவின் காதல் உலகின்
புல் வெளியின் மீது கூட உண்டு !
உன் மீதும் நிலவிற்கு காதல் !


உலகில் உற்பத்தியாகும் ஆடைகளில்
எல்லோருக்கும் ப்ரத்யேகமானது உண்டு !
உனக்கான ஆடையும் காத்திருக்கிறது !


 ஒவ்வொரு இரவும் எல்லோருக்காகவும்
பொதுவாகத் தான் வருகிறது !
உனக்கும் இரவில் ஒரு பங்கு உண்டு !


நகரும் ஒவ்வொரு நொடியிலும்
எல்லோருக்கும் நேரம் பொது தான் !
உனக்கான நேரம் தினமும் உண்டு !


மாறும் காலங்களில் எல்லோருக்கும்
மாறுதல் நிச்சயம் வரும் !
உனக்கும் மாறுதல் வருகிறது !


உலகில் வாழ எல்லோருக்கும்
நிச்சயம் அதிகாரமும், உரிமையும் உண்டு !
உனக்கும் வாழ்க்கை உண்டு !


வாழ்ந்து பார் . . .
அனுபவித்து பார் . . .


உன் பங்கு வாழ்க்கையை வாழ் !
உன் பங்கு சந்தோஷங்களை அனுபவி !
உன் பங்கு முயற்சிகளை செய் !
உன் பங்கு வெற்றிகளை அடை !
உன் பங்கு காத்திருக்கிறது !

 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP