ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கூட்டிக் கழித்து பார் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
கணக்கு பார்க்காதே !
 
 
எத்தனை நாம ஜபம்
செய்தாய் என்று கணக்கு பண்ணாதே !
 
 
எத்தனை நேரம் பூஜை
செய்கிறாய் என்று கணக்கு பண்ணாதே !
 
 
எத்தனை வருஷமாய் பக்தி
செய்துகொண்டிருக்கிறாய் என்று
கணக்கு பண்ணாதே !
 
 
எவ்வளவு கைங்கர்யம் செய்தாய்
என்று ஒரு நாளும் கணக்கிடாதே !
 
 
எத்தனை தான தர்மம் செய்கின்றாய்
என்று கணக்கு வைக்காதே !
 
 
எத்தனை திவ்ய தேசங்கள் சேவித்தாய்
என்று கணக்கு வைத்துக்கொள்ளாதே !
 
 
எத்தனை தடவை திவ்யப்ரபந்தம்
பாராயணம் செய்தாய் என்று கணக்கிடாதே !
 
 
 எத்தனை முறை ஆசார்யனுக்கு
என்ன என்ன செய்தாய் என்ற
கணக்கை மறந்தும் வைத்துக்கொள்ளாதே !
 
 
எத்தனை பேர் உன்னைப் பாராட்டினார்
என்று கணக்கெடுக்காதே !
 
 
எத்தனை முறை நீ தோற்றாய் என்பதை
கணக்கு வைக்காதே !
 
 
 எத்தனை கோயிலில் எத்தனை பணம்
இதுவரை போட்டாய் என்று
கணக்கிட்டு விடாதே !
 
 
க்ருஷ்ணன் உனக்கு செய்த
உதவிகளை கணக்கு செய் !
 
 
ஆசார்யன் உனக்கு சொன்ன
அறிவுரைகளை கணக்கு செய் !
 
 
பாகவதர்களின் சங்கம் எத்தனை
கிடைத்தது என்று கணக்கு செய் !
 
 
 
எத்தனை தடவை க்ருஷ்ணனைப்
பார்த்தாய் என்று கணக்கு செய் !



வாழ்வில் வீண் செய்த வருடங்களை
நிதானமாய் கணக்கு செய் !



நீ செய்த பாபங்களை பட்டியலிட்டு
கணக்கெடுப்பாய் !


இந்த பாரத தேசத்திற்கு நீ செய்த
நன்மைகளை கணக்கு செய் !


இந்து தர்மத்திற்கு நீ செய்த
கைங்கர்யங்களை கணக்கு செய் !


சில கணக்குகள் அதிசயமாய் இருக்கும் !
சில கணக்குகள் அசிங்கமாய் இருக்கும் !
சில கணக்குகள் குறைவாய் இருக்கும் !
சில கணக்குகள் அதிகமாய் இருக்கும் !


கணக்கு . . .
கூட்டிக் கழித்து பார் . . .


மிச்சம் ?
என்னவென்று உன் மனதைக் கேள் ! ! !


மிச்சம் க்ருஷ்ணன் வந்தால் நீ ஜெயித்தாய் !
மிச்சம் நீ வந்தால் ? ? ?


என்ன சொல்ல . . .?

மிச்சம் க்ருஷ்ணன் வருமாறு
நீ உன்னை மாற்றிக்கொள் . . .
 
 
அதுவே என் ஆசை . . .
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP