ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Wednesday, October 10, 2012

தோழா / தோழி !

ராதேக்ருஷ்ணா மனம் விட்டுப்போகாதே
தோழா / தோழி !உன்னோடு பலர் உன்னை
விட்டுப் பிரியாமல் என்றுமுண்டு
தோழா / தோழி !

 

நமக்கு பல சந்தர்ப்பங்களில்
வாழ்வில் பிடிப்பு போகும் !முக்கியமாக நம்மிடம்
அன்பாக இருந்தவர்கள்,
திடீரென்று நம்மை தவறாய் புரிந்து
நம்மை விட்டு விலகும்
சந்தர்ப்பங்களில் வாழ்வில் ஒரு
பிடிப்பில்லாமல் போகும் !அந்த சமயங்களில் நீ
நினைவில் கொள்ளவேண்டிய
சில தோழர்கள் . . .


சூரிய வெளிச்சம் . . .
நம் வாழ்வின் எல்லை வரை
நமக்கு தினமும் வெளிச்சம்
தரும் தோழன் / தோழி !


நீ சுவாசிக்க, உன்
வியர்வையை துடைக்க,
வாழ்வின் கடைசி வரை
உன்னோடு இருக்கும் காற்று
நல்ல தோழன் / தோழி !


உன் தாகம் தீர்க்க,
உன் உடலை சுத்தப்படுத்த,
உன் உடைகளை தோய்க்க,
உனக்கு உதவும் நீர்
 அருமையான தோழன் / தோழி !


 அழகாக சப்தமிடும்
 ஆச்சரியமான பறவைகளின் நாதம்,
உனக்குள் ஒரு நம்பிக்கையை
நிச்சயமாய் தரும்
தோழன் / தோழி !


மென்மையாய் சிரிக்கும்,
துளியும் கள்ளம் கபடமில்லாத,
கடவுளின் அன்புத் தூதுவர்களான,
சின்னக் குழந்தைகள்
விசேஷமான தோழன் / தோழி !


வித விதமான வண்ணங்களில்,
பிறந்து கடவுளின் திருவடியில்
நீ சேர்க்க, உனக்கு அருளை
வாங்கித் தரும் மலர்கள்
சிறப்பான தோழன் / தோழி !


வானத்தில் நாள் தோறும்
அழகாய் வைரங்களாய் ஜொலிக்கும்
கைக்கெட்டாத நக்ஷத்திரங்கள்,
நம்மோடு வாழும்
ஆச்சரியமான தோழன் / தோழி !தினமும் வளர்ந்து ஒரு நாள் பூரணமாய்,
பிறகு தினமும் தேய்ந்து ஒரு நாள் ஒளிந்து,
வித விதமாய் கதைகள், கவிதைகள்,
சொல்லித் திரியும் நிலவு
விளையாட்டான தோழன் / தோழி !


வெயில் காலத்தில் ஆகாயத்தின் நரையாய்,
மழைக்காலத்தில் அழகான கருப்பாய்,
நாரதர் போல் கவலையில்லாமல்
சுகமாய் திரிந்துகொண்டிருக்கும்
மேகம் உற்ற தோழன் / தோழி !


நாம் காண மறந்தாலும்,
ஒரு நாளும் மறவாமல் நம்மை
விடாமல் ரசித்துக்கொண்டே இருக்கும்
தாய் போல் அருமையான ஆகாயம்
ஜோரான தோழன் / தோழி !


எத்தனை கோபமாய் நாம் இருப்பினும்,
சோம்பேறியாய் நாம் திரிந்தாலும்,
அசிரத்தையாய் இருந்தாலும், நமக்கு
தவறாமல் நேரம் காட்டும் கடிகாரம்,
உரிமையுள்ள தோழன் / தோழி !


இது போல் உலகம் முழுதும்,
உனக்கும், எனக்கும், நமக்கும்
கோடிக்கணக்கான தோழனும்,
தோழியும் என்றுமுண்டு !


இவர்களில்லாமல்,
நாமே மறந்தாலும், நம்மை மறக்காது,
நாமே விலகினாலும்,தவறாய் பேசினாலும்,
நமக்காக ப்ரார்த்திக்கும், நம் சத்குரு
அதிசயமான தோழன் / தோழி !


 நாமே நம்மை மறந்து கிடந்தாலும்,
வித விதமாய் நமக்கு அருள் செய்து,
நம்மை உயர்த்தி, நாம் வாழ
பல விதத்திலும் நம்மைக் காக்கும்
க்ருஷ்ணன் என்றும் மாறாத
தோழன் / தோழி !


அதனால் . . .
கவலைப்படாதே தோழா / தோழி !

மனம் விட்டுப்போகாதே
தோழா / தோழி !


இத்தனை தோழர் உனக்குண்டு !
அதனால் வாழ்வில் ஆனந்தமுண்டு !
உலகில் உனக்கு அதிகாரமுண்டு !


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP