ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Wednesday, October 3, 2012

நம்பிக்கை . . .அதானே எல்லாம் !

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கை வை !

வாழ்வில் நம்பிக்கை வை !

எதிர்காலத்தில் நம்பிக்கை வை !

முன்னேற்றத்தில் நம்பிக்கை வை !

முயற்சியில் நம்பிக்கை வை !

உன் மீது நம்பிக்கை வை !

நல்லவற்றில் நம்பிக்கை வை !

நல்லவரிடம் நம்பிக்கை வை !

க்ருஷ்ணனிடம் நம்பிக்கை வை !

பக்தியில் நம்பிக்கை வை !

நாம ஜபத்தில் நம்பிக்கை வை !

 குருவிடம் நம்பிக்கை வை !


சத்சங்கத்தில் நம்பிக்கை வை !


நிகழ்காலத்தில் நம்பிக்கை வை !


தேசத்தின் மீது நம்பிக்கை வை !


காலத்தின் மீது நம்பிக்கை வை !


கடமையின் மீது நம்பிக்கை வை !


உணமையின் மீது நம்பிக்கை வை !


நல்ல எண்ணங்களின் மீது நம்பிக்கை வை !


அன்பின் மீது நம்பிக்கை வை !


அயராத உழைப்பின் மீது நம்பிக்கை வை !


நம்பிக்கை வை !

ஒரு பொழுதும் இந்த நம்பிக்கைகள்
குறையவே கூடாது !


இந்த நம்பிக்கைகள் உன்னோடு
இருக்கும்வரை நீ ஜெயிப்பாய் !

உன் நம்பிக்கை
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும் !

உன் நம்பிக்கையின்
அளவைப் பொறுத்தே
உன் வாழ்வின் வெற்றிகள் !

உன் நம்பிக்கையின்
ஆழத்தைப் பொறுத்தே
உன் வாழ்வின் ஆனந்தங்கள் !

உன் நம்பிக்கையின்
தீவிரத்தைப் பொறுத்தே
உன் முயற்சிகள் !

உன் நம்பிக்கையே என்றும்
உன்னை விட்டு அகலாத
உயிர் தோழன்/தோழி !உன் நம்பிக்கையே உனது
நாளைய வாழ்வின் அஸ்திவாரம் !

உன் நம்பிக்கையே உன்
கையில் இருக்கும் ப்ரம்மாஸ்திரம் !

உன் நம்பிக்கையே உன்
லக்ஷிய வாழ்வின் யஜமானன் !

உன் நம்பிக்கையே
கரடு முரடான வாழ்க்கைப் பாதையில்
உன் வழியைக் காக்கும் செருப்பு !


உன் நம்பிக்கையே
இருள் தரும் புரியாத சூழ்நிலைகளில்
உன் கையிலிருக்கும் வழி காட்டும் விளக்கு !


உன் நம்பிக்கையே
சம்சார பாலைவனத்தில்
உனக்கு நிழல் தரும் சோலை !


உன் நம்பிக்கையே
நா வரண்டு போகும் அவமரியாதைகளில்
உனக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் !


உன் நம்பிக்கையே
உன் மனது பலவீனமாகும் போது
உனக்கு ஊட்டம் தரும் அற்புத அம்ருதம் !


உன் நம்பிக்கையே
உடலை வருத்தும் வியாதிகளிடமிருந்து
உன்னைக் காக்கும் மருத்துவர் !

உன் நம்பிக்கையே
இடிந்து போக வைக்கும் நஷ்டங்களில்
உன்னிடம் இருக்கும் காப்பீடு !

உன் நம்பிக்கையே
உன்னிடமிருந்து யாரும் திருடமுடியாத
என்றுமே அழியாத வைத்தமாநிதி !

உன் நம்பிக்கையே
உன் மரணம் வரை உன்னோடு வரும்
ஒரே உன்னத வழித்துணை !

அதனால் உன் நம்பிக்கை மீது
முதலில் நம்பிக்கை வை ! 

க்ருஷ்ணன்தான் உனக்கு
நம்பிக்கை தருகிறான் !

க்ருஷ்ணன்தான் உனது
நம்பிக்கையாய் இருக்கிறான் !

உன் நம்பிக்கை வளர
நான் நம்பிக்கையோடு ப்ரார்த்திக்கிறேன் !
உன் நம்பிக்கை வளர
நீயும் நம்பிக்கையோடு ப்ரார்த்தனை செய் !நம்பிக்கை . . .அதானே எல்லாம் !


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP