ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, October 2, 2012

மஹாத்மா காந்தி !

ராதேக்ருஷ்ணா
 
 
 
காந்தி மகான் !
மஹாத்மா காந்தி !
தேசப்பிதா காந்தி !
 
 
 
 
 
ஒரு தனிமனிதனை
ஒரு தேசமே தன் தேசப்பிதாவாக
ஏற்குமா என்ன ?
 
 
 ஏன் ஏற்றது ?
என்னுள் எழுந்த கேள்விகள் !
அதற்கு நான் கண்ட பதில்கள் !
 
 
 பட்டப்படிப்பு படித்தும்
பாமரனின் உடையை ஏற்ற எளிமை !


பணக்காரராக இருந்தும்
எல்லோருடனும் கலந்து பழகின தன்மை !


ஆடம்பரமாய் வாழ வழி இருந்தும்
அடித்தட்டு மக்களுக்காய் போராடின நேர்மை !


பலவிதமாய் போராடும் ஜனங்களை
அஹிம்சா வழியில் சேர்த்த திறமை !


ஆங்கிலேயரின் அடக்குமுறைகளைத்
சத்யாக்ரஹத்தினால் வென்ற பொறுமை !


தன் குடும்பத்தாரிடம் காட்டாத,
தேச ஜனங்களிடம் காட்டின மென்மை !
 
 
ஹரிச்சந்திரன் வாழ்வில் இருந்து
தான் எடுத்துக் கொண்ட உண்மை !
 
 
சத்தியத்தை சோதனை செய்து
அதை மட்டுமே நம்பின வலிமை !
 
 
 பிடிவாத தீவிரவாதம் தவிர்த்து,
ஒத்துழையாமையைக் கண்ட புத்தி கூர்மை !


ஆங்கிலேயர் யோசிக்க முடியாத
உன்னத தொலை நோக்கு பார்வை !
 
 
மரணத்தின் வாயிலிலும்
ஹே ராம் ! என்று சொன்ன நம்பிக்கை !


இதுவே தேசப்பிதாவாய் நான்
அவரைக் கண்ட காரணம் !


அவருடைய சில விஷயங்களில்
எனக்கு உடன்பாடில்லை !
ஆயினும் என் பாரதத் தாயின்
அடிமைத்தளையை நீக்கின
பெருமை அவருக்கு என்றுமுண்டு !
அதை நான் மறுப்பதிற்கில்லை !
 
 
நாம் யார் இந்த மஹாத்மாவைப்
பற்றி அபிப்ராயம் சொல்ல ! ? !


நாம் என்ன செய்துவிட்டோம்
இந்த தேசத்திற்க்காய் ?

நாம் என்ன தந்துவிட்டோம்
இந்த தேசத்திற்க்காய் ?

நாம் என்ன இழந்தோம்
இந்த தேசத்திற்க்காய் ?


அவரைப் போல் ஒரு
தேசப் பற்றாவது நமக்கு உண்டா ?
ஒரு துளியும் உண்டா ?
ஒரு நாளாவது உண்டா ?

ஒவ்வொரு நாளும் உண்டா ?
ஒவ்வொரு நிமிஷமும் உண்டா ?


நாட்டைக் குறை கூறும்
அதமர் அல்லவா நாம் ?

நாம் போய் அந்த உத்தமரைப்
பற்றி பேசவும் அதிகாரம் உண்டோ ?


அவர் வாங்கித் தந்த சுதந்திரம்,
அவரைப் பற்றி குறை கூறவா ?

இல்லை நம்மை சரி செய்து,
ஆங்கிலேயரை அசத்தவா ?


நாம் எல்லாம் சுத்தமான சுயநலவாதிகள் !
மஹாத்மா காந்திஜீ சுத்தமான தேசபக்தன் !


தேசபக்தன் . . .
நல்ல தேச பக்தன் . . .


இன்று சுகமாய் வாழ
வெளிநாடு போன எத்தனை பேருக்கு
எல்லாவற்றையும் விட்டு,
நம் தேசத்திற்க்காய் உழைக்க
தைரியம் இருக்கிறது ?


போனவரை விடுவோம் . . .

இருப்பவரைப் பார்ப்போம் !
இங்கிருப்பவரைப் பார்ப்போம் !


எத்தனை பேர் தேசத்திற்க்காய்
என்ன செய்துவிட்டோம் ?


நீ என்ன செய்துவிட்டாய் ?
நான் என்ன செய்துவிட்டேன் ?


முதலில் அவரைப் போல்
ஒன்றாவது செய்வோம் . . .
செய்வோமா ?  ?  ?


செய்துவிட்டு பிறகு
மார்தட்டிக் கொண்டு நாம்
இந்த தேச பக்தரைப் பற்றி
தோன்றியபடியெல்லாம் பேசலாம் ! ! !


அதுவரை அவர்
தேசப்பிதா என்பதை ஏற்றே ஆகவேண்டும் !


பாரத மாதாவின் தீவிர பக்தன் !
அதனால் . . .
ஸ்ரீமான் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி
அவர்கள் தேசப்பிதா தான் !


நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் !
இது என் தேசப்பிதாவின் மேல் சத்தியம் !


உலகம் போற்றும் உத்தமரை,
தன் தேசத்தந்தையை
வாயில் வந்தபடி பேசும் இந்தியரே !
என்று நீர் திருந்துவீர் . .?
 
 
ஆங்கிலேயனே அவரின் மதிப்பறிந்து,
திரைப்படம் எடுத்த பிறகும்,
தப்பாய் பேசுவதேன் ?
 
 
இந்தியரே இனியாவது திருந்தும் !
 
 

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP