ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, November 2, 2012

எடு . . . எடு . . . எடு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
ஜபி . . . ஜபி . . . ஜபி . . .
விடாமல் நாமம் ஜபிப்பாய் !
 
 
நினை . . . நினை . . . நினை . . .
க்ருஷ்ணனை என்றும் நினை !
 
 
மற . . . மற . . . மற . . .
மற்றவர் தவறை மற !
 
 
செய் . . . செய் . . . செய் . . .
எப்பொழுதும் முயற்சி செய் !
 
 
விடு . . . விடு . . . விடு . . .
உன் அஹம்பாவத்தை விடு !
 
 
சொல் . . . சொல் . . . சொல் . . .
நல்லதை மட்டுமே சொல் !
 
 
நில் . . . நில் . . . நில் . . .
இவ்வுலகில் தைரியமாக நில் !
 
 
கொடு . . . கொடு . . . கொடு . . .
உன்னால் முடிந்ததைக் கொடு !
 
 
கேள் . . . கேள் . . . கேள் . . .
குரு சொல்வதை சரியாகக் கேள் !
 
 
விதை . . . விதை . . . விதை . . .
நல்ல எண்ணங்களை மட்டுமே விதை !
 
 
அழி . . . அழி . . . அழி . . .
உன் சுயநலத்தை முற்றிலும் அழி !
 
 
படி . . . படி . . . படி . . .
உன் வாழ்க்கையை ஒழுங்காய் படி !
 
 
அழு . . . அழு . . . அழு . . .
க்ருஷ்ண பக்தியில் சுகமாய் அழு !
 
 
 விழு . . . விழு . . . விழு . . .
க்ருஷ்ணன் திருவடியில் விழு !


எழு . . . எழு . . . எழு . . .
வீறு கொண்டு வாழ்வை வெல்ல எழு !


பிடி . . . பிடி . . . பிடி . . .
நம்பிக்கையை இறுக்கிப் பிடி !


ஓடு . . . ஓடு . . . ஓடு . . .
சத்சங்கத்திற்கு ஆசையாய் ஓடு !


தடு . . . தடு . . . தடு . . .
கெட்டவர் உன்னை நெருங்காமல் தடு !
 
 
கூடு . . . கூடு . . . கூடு . . .
நல்லவரோடு மட்டுமே கூடு !


எடு . . . எடு . . . எடு . . .
சீக்கிரமாய் நல்ல முடிவை எடு !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP