ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, December 11, 2012

தப்பில்லை !

ராதேக்ருஷ்ணாதப்பில்லை !


நிச்சயமாக தப்பே இல்லை !


சத்தியமாக தப்பே இல்லை !
 
 
 
பெற்றோருக்காக குழந்தைகள்
வளைந்து கொடுப்பது தப்பில்லை !
 
 
பெற்றோருக்காக பிள்ளைகள்
தியாகம் செய்வது தப்பில்லை !


பெற்றோருக்காக மக்கள்
தங்கள் ஆசைகளை மறப்பது தப்பில்லை !


பெற்றோருக்காக குழந்தைகள்
விட்டுக்கொடுப்பது தப்பில்லை !


பெற்றோருக்காக பிள்ளைகள்
கஷ்டப்படுவதில் தப்பில்லை !


பெற்றோருக்காக குழந்தைகள்
தணிந்து போவது தப்பில்லை !
 
 
பெற்றோர்களிடம் குழந்தைகள்
பணிந்து வாழ்வது தப்பில்லை !
 
 
பெற்றோர்கள் சொல்படி
பிள்ளைகள் கேட்பது தப்பில்லை !
 
 
பெற்றோர்கள் இஷ்டப்படி
குழந்தைகள் நடப்பது தப்பில்லை !
 
 
பெற்றோர்களின் ஆசைக்காக பிள்ளைகள்
காரியங்கள் செய்தால் தப்பில்லை !


நண்பர்களுக்காக உன்னால்
விட்டுக்கொடுக்க முடியுமென்றால்  !
உன்னை மாற்றிக்கொள்ள முடியுமென்றால்  !
 
 
 வேலை செய்யும் இடத்தில் உன்னால்
விட்டுக்கொடுக்க முடியுமென்றால்  !
உன்னை மாற்றிக்கொள்ள முடியுமென்றால்  !
 
 
கணவன் / மனைவி இவருக்காக உன்னால்
விட்டுக்கொடுக்க முடியுமென்றால்  !
உன்னை மாற்றிக்கொள்ள முடியுமென்றால்  !
 
 
பிராயணத்தில் சக பயணிக்காக உன்னால்
விட்டுக்கொடுக்க முடியுமென்றால்  !
உன்னை மாற்றிக்கொள்ள முடியுமென்றால்  !
 
 
உனக்காக தன் வாழ்வில்
கணக்கிட முடியாத அளவு,
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு,
எத்தனையோ இழந்த உன் பெற்றோருக்காக
உன்னால்
விட்டுக்கொடுக்க முடியாதா ?
உன்னை மாற்றிக்கொள்ள முடியாதா ?
 
 
 முடியாதென்றால்....
நீ வாழ்ந்தென்ன ?
நீ சாதித்தென்ன ?
நீ ஜெயித்தென்ன ?
 
 
 உன் வாழ்வின் அர்த்தம் தானென்ன ?
உன் வாழ்வின் பயன் தானென்ன ?
 

 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP