ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, December 14, 2012

தலை எழுத்து ! ! !

ராதேக்ருஷ்ணா என்னுள் காமம் உண்டு !


என்னுள் கோபம் உண்டு !


என்னுள் ஆசை உண்டு !


என்னுள் தாபம் உண்டு !


என்னுள் வெறுப்பு உண்டு !


என்னுள் பொறாமை உண்டு !


என்னுள் அஹம்பாவம் உண்டு !


என்னுள் குழப்பம் உண்டு !


என்னுள் சந்தேகம் உண்டு !


என்னுள் பயம் உண்டு !


என்னுள் திமிர் உண்டு !


என்னுள் அழுகை உண்டு !


என்னுள் இன்னும் நிறைய உண்டு . . .


இவைகளோடு நான் பல ஜன்மங்கள்
வாழ்ந்துவிட்டேன் !


பார்த்தான் கண்ணன் . . .


நான் என்று திருந்தி,
எந்த ஜன்மாவில் கடைத்தேருவேன் என்று
கண்ணனுக்கு பெரிய கவலை ! ! !


அதனால் அவனே முடிவு செய்தான் !


என் தலையில்
"க்ருஷ்ண  பக்தி செய்"
என்று எழுதிவிட்டான் ! ! !


நான் திருந்தினேனா என்று எனக்குத் தெரியவில்லை !ஆனாலும்...கண்ணனின் ஆசை வீண்போகாது !

கண்ணனின் ஆணை தோற்காது !
 
 
 
அதனால்தான் நான் க்ருஷ்ண பக்தி செய்கிறேன் !


 
இதுவே என் பக்தியின் ரஹஸ்யம்  !


க்ருஷ்ணன்  வாழ்க !

பக்தி வாழ்க !

நாம ஜபம் வாழ்க !


இந்த பக்தியை அவன்
என் குருவைக் கொண்டு
என் தலையில் எழுதி வைத்தான் ! ! !


என் குரு  வாழ்க !


வாழ்க ! வாழ்க ! வாழ்க ! ! !


என் தலை எழுத்து வாழ்க !


நல்ல தலை எழுத்து !


நல்ல வேளை ...
இதனால் நான் பிழைத்தேன் !0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP