ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Sunday, December 16, 2012

மார்கழி வருகிறாள் !

ராதேக்ருஷ்ணா
மார்கழி வருகிறாள் !


க்ருஷ்ணனுக்கு பிடித்தவள் வருகிறாள்  !


கோபிகைகளின் நாயகி வருகிறாள் !


வைகுண்ட ஏகாதசியின் தாய் வருகிறாள் !


கோதையின் தோழி வருகிறாள் !


தொண்டரடிப்பொடி ஆழ்வாரைத்
தந்தவள் வருகிறாள் !


நம்மை எல்லாம் குளிர்விக்க வருகிறாள் !


கண்ணனை எழுப்ப வருகிறாள் !


தேவர்களை எல்லாம் பூமிக்கு
அழைத்து வருகிறாள் !


ஸ்வாதித் திருநாளுக்கு மோக்ஷம்
தந்தவள் வருகிறாள் !


உத்தராயண தேவியை வரவேற்க வருகிறாள் !


தை மகளின் சகோதரி வருகிறாள் !


நம்மை  வில்லாய் வளைக்க வருகிறாள் !


நமக்கு திருப்பாவையைத் தர வருகிறாள் !


அவளிடம் நம்மை ஒப்படைப்போம் !


தினமும் திருப்பாவை ஒப்புவிப்போம் !


வைகுந்த மாநகருக்கு பயணிப்போம் !


பாகவதரோடு நம்மை இணைப்போம் !


பக்தியில் நாம் திளைப்போம் !


குள்ளக் குளிர கண்ணனைக் குடைவோம் !


கண்ணனின் காதலில் நம்மை இழப்போம் !


ராமானுஜன் வழி நடப்போம் !


ராச லீலைக்கு நம் பெயரைக் கொடுப்போம் !


குருவின் திருவடியை இறுக்கிப் பிடிப்போம் !


மார்கழி தேவியின் திருவடியில்
நம்மைத் தருவோம் !
0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP