ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Wednesday, January 2, 2013

ஆசீர்வாதம் தேவை !

ராதேக்ருஷ்ணா
 
 
 
 
கிளிகளே !
நான் சுகப்ரஹ்மம் என்னும்
கிளியை தரிசிக்க வேண்டும் . . .
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
நாரைகளே !
நான் குலசேகரன் என்னும்
திருமலை நாரையை உடனே
காணவேண்டும் . . .
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
 கழுகுகளே !
நான் ஜடாயு என்னும்
ராம தாச கழுகைப்போல்
சீதா கைங்கர்யம் செய்யவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
மயில்களே !
நான் க்ருஷ்ணனின் தலையை
ஒரு நாளாவது  அலங்கரிக்கவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
கருட பக்ஷிகளே !
நானும் கருடாழ்வார் போலே
பெருமாளை மட்டும் சுமக்க வேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
காக்கைகளே !
நானும் கண்ணனின் அழகான 
கரு வண்ணத்தை அடைய வேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
புறாக்களே !
நானும் திவ்யதேச ஆலயங்களில்
குடும்பத்தோடு வசிக்கவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
 க்ரௌஞ்ச பக்ஷிகளே !
என் மீதும் வால்மீகி மஹரிஷியின்
கருணைப் பார்வை விழவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
 குயில்களே !
நானும் ப்ருந்தாவனத்தில் கண்ணனின்
குழலிசையோடு பாடவேண்டும் !
எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் !
 
 
 
நீங்கள் எல்லாம்
ஆசீர்வதித்தால் அது பலிக்கும் !
 
 
 
உடனே என்னை
மனதார ஆசீர்வதியுங்கள் !உங்கள் மூதாதையர்கள்
பலர் மஹாத்மாக்கள் !உங்களில் பலர் தினமும்
திவ்ய தேச எம்பெருமான்களையும்,
பாகவதர்களையும் பார்க்கிறார்கள் !அதனால் அடியேனுக்கு
உடனடியாக உங்கள் ஆசீர்வாதம் தேவை !

 
 
என் விலாசம் . . .
க்ருஷ்ண பைத்தியம்,
இந்து மாதா இல்லம்,
கதவு எண் : 143 / 4000,
நாம சங்கீர்த்தன தெரு,
தொண்டர் அடி பொடி ஜில்லா,
பக்தி மாநிலம் ,
உத்தம பாரத தேசம்
பின் குறியீடு - கைங்கர்யம்  ...

தொலை பேசி : சத்குரு க்ருபா  ...
அலைபேசி : ஆழ்வார்கள் அனுக்ரஹம் ...


உங்கள் வரவு எனக்கு
பக்தி வரவாகுக . . .0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP