ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 ஜனவரி, 2013

காணப் போனேன் !

ராதேக்ருஷ்ணா



விட்டலனைக் காணப் போனேன் !
 
 
 



சந்திரபாகா நதிக்கரையில்
புண்டலீக வரதனாக நிற்கும்
விட்டலனைக் காணப் போனேன் !


ஞான சூன்யங்களை விசேஷமாக
அனுக்ரஹிக்கும் கருமை நிற
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
மயில் பீலி சூடாத க்ருஷ்ணனை,
பாமரனுக்கும் சுலபனான
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
 தீண்டாமை பேசும் உலகில்,
பக்தனின் தீண்டலில் மயங்கும்,
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
தன்னையே தர இடுப்பில்
கை வைத்து காத்திருக்கும்
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
கூட்டமாய் பக்தர் போனால்,
கூடியிருந்து குளிர வைக்கும்,
 விட்டலனைக் காணப் போனேன் !


ருக்மிணியும்,சத்தியபாமையும்,ராதையும்
எப்பொழுதும் பிரியாமலிருக்கும்
 விட்டலனைக் காணப் போனேன் !
 
 
ஒன்றும் தெரியாத நல்ல ஜனங்களின்
குதூகல ஆட்டத்தை ரசிக்கும்
விட்டலனைக் காணப் போனேன் !
 
 
திருப்பாவை பாடும் மார்கழியில்,
திருடர்களில் சாமர்த்தியசாலியான
விட்டலனைக் காணப் போனேன் !
 

அவனுக்காகப் போவதே சுகம் !
அவனைக் காணப் போவதே சுகம் !
அதுவே ப்ரேமானந்தம் . . .
அவனே ஆத்மானந்தம் . . .


விட்டல் பஜோ, விட்டல் பஜோ,
விட்டல் பஜோரே . . .
மோக்ஷானந்தமே விட்டல் பஜோரே !
 
 
பண்டரியே மோக்ஷானந்தம் ! ! !
 
 
பண்டரீ செல்வோர் பாக்கியவான் !
பண்டரீ செல்வோர் புண்ணியவான் !
 
 
 பண்டரீ என்று சொல்வோர்,
வைகுந்தம் காண்பார் !
பண்டரீ என்று நினைப்போர்,
பகவானை அடைவர் !
 
 
நீயும் சொல் . . .
நீயும் வருவாய் . . .
 
 
நீயும்,நானும் ஒரு நாள்
பண்டரீ நிச்சயம் செல்வோம் ! ! !
 
 
அதுவரை சொல் . . .
அதுவரை நினை . . .
 
காலம் வரும் . . . காத்திரு . . .
 
நமக்காக அவன் காத்திருக்கிறான் !
 
 
  
  

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP