ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, May 31, 2013

அடியேன் ராமானுஜ தாசன் . . .

ராதேக்ருஷ்ணா

நான் நல்லவனில்லை , , ,
ஆனாலும் கண்ணன் என்னோடிருக்கிறான் !


என் மனதில் தூய்மையில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !


என் வாயில் நல்ல சொற்களில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

என்னிடம் துளி கூட தர்மமில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !


எனக்கு திய்வதேசத்தில் வாழ்க்கையில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

 
நான் விடாமல் நாமஜபம் செய்வதில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

 என்னிடம் நல்ல குணங்களே இல்லை , , ,
 ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

 எனக்கு இம்மியளவு கூட பணிவேயில்லை , , ,
ஆனாலும் என் கண்ணன் என்னோடிருக்கிறான் !

ஏன் ? ஏன் ? ஏன் ?
ஒரே ஒரு காரணம் தான் , , ,

அடியேன் ராமானுஜரை நம்புகின்றேன் !
என் ராமானுஜன் . பவிஷ்யதாசர்யன்,ஆழ்வார் திருநகரி.
இந்த நம்பிக்கையே அடியேனைக் காக்கும் !
எனவே இதுவே போதும் ! ! !

அடியேன் ராமானுஜ தாசன் . . .

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP