ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, November 2, 2013

நிறைவான தீபாவளி ! ! !

ராதேக்ருஷ்ணா


தீபாவளி . . .
 
 
 


ராமனும் வனவாசம் முடிந்து
அயோத்யா மீண்டு வந்த தீபாவளி !


பூதேவியின் புதல்வன் நரகனுக்கும்
க்ருஷ்ணனை அளித்த தீபாவளி !


16100 ராஜகுமாரிகளுக்கு க்ருஷ்ணன்
மணாளனாக முடிவான தீபாவளி !


அதிதிக்கும் குண்டலங்கள்
மீண்டும் கிடைத்த தீபாவளி !


வருணனுக்கும் அவனது குடை
திரும்பிக் கிடைத்த தீபாவளி !


கங்கை எல்லோருடைய வீட்டையும்
ஆனந்தமாய் அடையும் தீபாவளி !
 
 
தேவலோகத்து பாரிஜாதமும்
பூலோகத்தை அடைந்த தீபாவளி !
 
 
பகவான் தன்வந்திரியும் அமிர்தத்தோடு
திருப்பாற்கடலில் வெளிப்பட்ட தீபாவளி !
 
 
லக்ஷ்மி தேவியும் ஆனந்தமாய்
நம்மை ஆசீர்வாதம் செய்யும் தீபாவளி !
 
 
இத்தனை மஹிமை உண்டு
நாம் கொண்டாடும் தீபாவளிக்கு ! ! !
 
 
குழந்தைகளுக்கு பட்டாசு
தரும் தீபாவளி !
 
பெரியவர்களுக்கு சந்தோஷம்
தரும் தீபாவளி !
 
இளசுகளுக்கு புத்தாடை
தரும் தீபாவளி !
 
உலகிற்கு வெளிச்சம்
தரும் தீபாவளி !
 
புதுமண தம்பதியருக்கு
தலையாய சுகம் தரும் தீபாவளி !
 
பகவானும் புத்தாடை
உடுத்தும் தீபாவளி !
 
சன்னியாசிகளும் பட்டாசு
வெடிக்கும் தீபாவளி !
 
இந்து தர்மத்தின் பெருமையை
உலகிற்கு பறைசாற்றும் தீபாவளி !

உன்னையும் என்னையும் நம்மையும்
இணைக்கும் தீபாவளி !


இந்த தீபாவளி வியாதியஸ்தர்களுக்கு
ஆரோக்கிய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி ஏழைகளுக்கு
ஐஸ்வர்ய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி பயந்தாக்கொள்ளிகளுக்கு
தைரிய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி நாஸ்தீகர்களுக்கு
ஆஸ்தீக தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி அஹம்பாவிகளுக்கு
வினய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி செல்வந்தருக்கு
இரக்க தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி முதியவருக்கு
மரியாதை தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி இளசுகளுக்கு
பொறுப்பான தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி குழந்தைகளுக்கு
நிதான தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி புத்தி ஸ்வாதீனமற்றவருக்கு
அனுக்ரஹ தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி மாற்றுத் திறனாளிகளுக்கு
பலமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி தம்பதியருக்கு
சமரசமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி குடும்பத்திற்கு
ஆசிர்வாத தீபாவளியாகட்டும் !
 

இந்த தீபாவளி பெற்றோருக்கு
நிம்மதியான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி பெண்களுக்கு
மகிழ்ச்சி தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி ஆதரவற்றோருக்கு
அருளான தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி பொய்யர்களுக்கு
மெய் தரும் தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி மதமாற்றம் செய்வொருக்கு
மன மாற்ற தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி உழைப்பாளிகளுக்கு
உயர்வான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி வியாபாரிகளுக்கு
லாபமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி இந்துக்களுக்கு
ஒற்றுமை தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி பக்தர்களுக்கு
தரிசன தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி பாரதத்திற்கு
ஏற்றமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி உலகிற்கு
அமைதியான தீபாவளியாகட்டும் !


ராதேக்ருஷ்ணா...
மொத்தத்தில் இந்த தீபாவளி
எல்லோருக்கும்
நிறைந்த தீபாவளியாகட்டும் . . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP