ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, January 30, 2016

ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸ்ரீவைஷ்ணவத்திற்கு
கூரம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

ஹஸ்த நக்ஷத்திரத்திற்கு
தை மாதம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

ஸ்வாமி ராமானுஜருக்கு
வரதராஜன் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

கலைவாணிக்கு
ஸ்ரீபாஷ்யம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

பராசர பட்டருக்கு
ரங்கராஜன் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

நாலூரானுக்கு
ராமானுஜர் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

வைகுந்தத்துக்கு
ஸ்ரீவைஷ்ணவம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

சுயநல சம்சாரிகளுக்கு
கலியுகம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

கூரத்தாழ்வானே...
உம்மைப் போல் ராமானுஜருக்கு
பிடித்தாற் போல் வாழ
எம்மை ஆசீர்வதியும் !!!

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP