ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, February 8, 2016

மரங்கொத்தி...

ராதேக்ருஷ்ணா...

மரங்கொத்தி பார்த்ததுண்டா ?!?

அது மரத்தைக் கொத்திக்கொண்டே இருக்கும், வேண்டியது கிடைக்கும் வரை...
அது நினைத்ததை அடையும் வரை...

நீயும் கொஞ்சம் மரங்கொத்தி ஆகிவிடேன் ??!?!??

கொத்தும் விஷயங்கள்தான் வேறு !!!

துன்பத்தைக் கொத்திக்கொண்டே இரு...
இன்பம் அதில் பிறக்கும் வரை...

பிரச்சனைகளை கொத்திக்கொண்டே இரு....
தீர்வு கையில் கிடைக்கும் வரை...

விதியைக் கொத்திக்கொண்டே இரு...
விடியல் வாழ்வில் வரும் வரை...

வியாதியைக் கொத்திக்கொண்டே இரு....
ஆரோக்கியம் உன்னுள் வளரும் வரை...

தோல்விகளை கொத்திக்கொண்டே இரு....
வெற்றிகள் உன்னோடு நடக்கும் வரை...

அவமானங்களை கொத்திக்கொண்டே இரு....
மனதில் சமாதானம் பரவும் வரை...

நஷ்டங்களை கொத்திக்கொண்டே இரு...
லாபங்கள் அதில் முளைக்கும் வரை...

பயத்தைக் கொத்திக்கொண்டே இரு...
தைரியம் விஸ்வரூபம் எடுக்கும் வரை...

நம்பிக்கை துரோகங்களை கொத்திக்கொண்டே இரு...
உன்னுள் நம்பிக்கை வேர் விடும் வரை...

சண்டை சச்சரவுகளை கொத்திக்கொண்டே இரு...
சமாதானம் சிறகடித்து பறக்கின்ற வரை...

சோம்பேறித்தனத்தை கொத்திக்கொண்டே இரு...
விடாமுயற்சி உன்னுள் ஊற்றெடுக்கும் வரை...

சந்தேகங்களை கொத்திக்கொண்டே இரு...
தெய்வீகத்தில் பூரணமாக திளைக்கும் வரை...

இனி நீ மரங்கொத்தி....
இல்லை இல்லை....
மனங்கொத்தி....
உன் மனங்கொத்தி...

உன் மனதைக் கொத்திக்கொண்டே இரு...
க்ருஷ்ணன் உன்னோடு
பிரியாமல் வாழும் வரை...

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP