ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, May 10, 2016

ராமானுஜா !!!

ராமானுஜா...

சித்திரைக்கும் சீர்மை கொடுத்த
ராமானுஜா !!!

திருவாதிரைக்கும் திருவான
ராமானுஜா !!!

ஸ்ரீபெரும்புதூருக்கு ஸ்ரீயைத் தந்த
ராமானுஜா !!!

காந்திமதியின் கருவறையில் வந்துதித்த
ராமானுஜா !!!

கேசவ சோமயாஜியின் தவப்பயனே
ராமானுஜா !!!

பெருந்தேவியின் தாகத்தையும் தீர்த்த
ராமானுஜா !!!

வரதனையும் வழித்துணையாக்கிய
ராமானுஜா !!!

திருக்கச்சி நம்பியைப் பெருமைபடுத்திய
ராமானுஜா !!!

ஆளவந்தாரின் 3 விரல்களையும் நிமிர்த்தின
ராமானுஜா !!!

பெரிய நம்பிகளின் திருவடி
நிழலில் ஒதுங்கின ராமானுஜா !!!

திருக்கோஷ்டியூர் நம்பியின் சோதனையில் ஜெயித்த
ராமானுஜா !!!

திருமாலையாண்டானுக்கும் திருவாய்மொழியின் ரகசியத்தை சொன்ன
ராமானுஜா !!!

திருவரங்க பெருமாள் அரையருக்கு
மஞ்சள் காப்பிட்ட ராமானுஜா !!!

பெரிய திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்ட
ராமானுஜா !!!

திருமலையானுக்கும் திருத்தமாய்
மாலை தர அனந்தாழ்வானைத் தந்த
ராமானுஜா !!!

ரங்கனும் " பரமபதத்துக்கும், பூலோகத்துக்கும் உடையவன்(ர்) நீ " என்ற
ராமானுஜா !!!

அடியோங்களையும் ஆட்கொள்ள வந்த காரேய் கருணை ராமானுஜா !!!

நீர் எமக்கு முன் பிறந்ததால்
நாங்களும் உய்தோம் !!!

உய்ய ஒரே வழி
என்றும் உடையவர் திருவடி !!!

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP