ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, November 24, 2016

நந்தலாலா...நந்தலாலா...

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா !

பயிரின் வாசமெல்லாம் நந்தலாலா,
உந்தன் இளமை வாசமடா நந்தலாலா !

உயிரின் தேவையெல்லாம் நந்தலாலா,
உந்தன் தரிசனம் தானடா நந்தலாலா !

சூரிய ஒளியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் ஜோதி ரூபமடா நந்தலாலா !

ஏழையின் சிரிப்பிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் கருணை புரியுதடா நந்தலாலா !

மழையின் துளியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் மகிமை தெரியுதடா நந்தலாலா !

தனிமையின் நேரமெல்லாம் நந்தலாலா,
உந்தன் காதல் ருசிக்குதடா நந்தலாலா !

வறுமையின் பிடியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் அரவணைப்பு சிலிர்க்குதடா நந்தலாலா !

குழந்தையின் முத்தத்திலே நந்தலாலா,
உந்தன் ஈரம் உரசுதடா நந்தலாலா !

தென்றல் காற்றினிலே நந்தலாலா,
உந்தன் ஸ்பரிசம் தீண்டுதடா நந்தலாலா !

ஒவ்வொரு விடியலிலும் நந்தலாலா,
உந்தன் ஆசை எழுப்புதடா நந்தலாலா !

ஒவ்வொரு இரவினிலும் நந்தலாலா,
உந்தன் காமம் இனிக்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நந்தலாலா,
உந்தன் அக்கறை துடிக்குதடா நந்தலாலா !

வியாதியின் வலியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் நேசம் மயக்குதடா நந்தலாலா !

வாழ்வின் பயணத்திலே நந்தலாலா,
என்றும் வழித்துணைவன் நீயடா நந்தலாலா !

எந்தன் தவறிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் அன்பு உருக்குதடா நந்தலாலா !

எந்தன் பாவமெல்லாம் நந்தலாலா,
உந்தன் அருளிலே மூழ்குதடா நந்தலாலா !

எந்தன் உளரலெல்லாம் நந்தலாலா,
உன்னால் உயிர் பெற்றதடா நந்தலாலா !

என்னை கொள்ளை கொள்ளடா நந்தலாலா
உன்னை உள்ளபடி தந்துவிடடா நந்தலாலா !

அணுவின் துகளிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் ஆளுமை அதிசயமடா நந்தலாலா !

பெண்மையின் மென்மையெல்லாம் நந்தலாலா,
உந்தன் ஊடுருவல் உசுப்புதடா நந்தலாலா !

ஆண்மையின் வீரியத்தில் நந்தலாலா,
உந்தன் புத்துயிர் துளிர்க்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு பிரசவத்திலும் நந்தலாலா,
உந்தன் தாய்மை விளங்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு பிடி உணவினிலும் நந்தலாலா,
உந்தன் உரிமை அதிகரிக்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு தோல்வியுமே நந்தலாலா,
உந்தன் தோளில் சாய்க்குதடா நந்தலாலா !

குருவின் திருவருளே நந்தலாலா,
என்னை உன் காலில் கிடத்துதடா நந்தலாலா !

இனி வாழ்வின் பொருளெல்லாம் நந்தலாலா,
உந்தன் இச்சைப்படியே
நந்தலாலா !

ஒவ்வொரு ருசியிலுமே நந்தலாலா,
உந்தன் ரசமே நிறைந்திருக்குதடா நந்தலாலா !!!

ஒவ்வொரு குழப்பத்திலும் நந்தலாலா,
உந்தன் தீர்மானமே தீர்வாகுதடா நந்தலாலா !!!

ஒவ்வொரு வெற்றியிலும் நந்தலாலா,
உந்தன் ரகசியமே ஜெயிக்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு அழுகையிலும் நந்தலாலா,
உந்தன் ஆசி கூடுதடா நந்தலாலா !

ஒவ்வொரு செயலிலுமே நந்தலாலா,
உந்தன் காரணமே காரியமடா நந்தலாலா !

விதைத்த விதைதனிலே நந்தலாலா,
உந்தன் புதுமை சித்திக்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு யோசனையிலும் நந்தலாலா,
உந்தன் அறிவே துணையாகுதடா நந்தலாலா !

ஒவ்வொரு பிழையினிலும் நந்தலாலா,
உந்தன் திறமை திருத்துதடா நந்தலாலா !

ஒவ்வொரு களவினிலும் நந்தலாலா,
உந்தன் அதிகாரம் அடக்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு பொய்யிலுமே
நந்தலாலா,
உந்தன் மெய்மை அடக்குதடா நந்தலாலா !

ஒவ்வொரு அழிவினுலும் நந்தலாலா,
உந்தன் பலமே காக்குதடா நந்தலாலா !

உலகின் ஓட்டமெல்லாம் நந்தலாலா,
உன்னிடமே ஒடுங்குதடா நந்தலாலா !

மனிதர் தேடலெல்லாம் நந்தலாலா,
உனையன்றி யாரறிவார்
நந்தலாலா !

முடிந்தவரை சொல்லிவிட்டேன் நந்தலாலா,
முடிவுரை நீயல்லவோ நந்தலா !

ஒவ்வொரு முயற்சியிலும் நந்தலாலா,
உந்தன் திருவருளே விளைகிறது நந்தலாலா !

என்னிடம் ஏதுமில்லை நந்தலாலா,
உன்னிடம் குறையுமில்லை நந்தலாலா !

எல்லாம் உன் வசமே நந்தலாலா,
எனையும் வசீகரித்தாய் நந்தலாலா !

உள்ளதை தந்துவிட்டேன் நந்தலாலா,
உள்ளத்தையும் கொடுத்துவிட்டேன் நந்தலாலா !

எழுதும் எழுத்திலெல்லாம் நந்தலாலா,
ஆதியான உன் உருவன்றோ நந்தலாலா

மூச்சுக் காற்றிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் முத்தத்தின் சாரலடா நந்தலாலா !

சொல்ல வார்த்தை இல்லை நந்தலாலா,
சொல்லைக் கடந்த சோதி நீ நந்தலாலா !

அடக்காத ஆசையெல்லாம் நந்தலாலா,
உன் அணைப்பில் அசந்ததடா நந்தலாலா !

கோபாலவல்லியின் காதலெல்லாம் நந்தலாலா,
இந்த கோபாலனுக்கு மட்டுமே நந்தலாலா ...

இப்பாட்டின் வார்த்தையெல்லாம் நந்தலாலா,
உந்தன் பாரதியின் பிச்சையடா நந்தலாலா !

நான் உன் அருகிலில்லை நந்தலாலா,
ஆயினும் நீ ஒதுக்கவில்லை நந்தலாலா !

உறவு புரியவில்லை நந்தலாலா,
உன் நிழலில் என் வாழ்க்கை நந்தலாலா !

ஒன்றும் தெளிவில்லை நந்தலாலா,
உனையன்றி தேவையில்லை நந்தலாலா !

எனக்கு அன்பன் நீயன்றோ நந்தலாலா,
எந்தன் அனுபவமும் நீயல்லவோ நந்தலாலா !

முதலும் நீயன்றோ நந்தலாலா,
முழுதும் நீயன்றோ நந்தலாலா !

ஒவ்வொரு தாகத்திலும் நந்தலாலா,
உன் உணர்வே தாக்கமடா நந்தலாலா !

ஒவ்வொரு முடிவினிலும் நந்தலாலா,
மீண்டும் தொடக்கம் நீயல்லவோ நந்தலாலா !

பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா,
உன்னையே பார்க்க வேண்டுமடா நந்தலாலா !

Read more...

Wednesday, November 9, 2016

புதிய விடியல்

புதிய விடியல்...
புத்தம் புதியதாய் ஒரு விடியல்...

நம்பிக்கை விடியல்...
நல்லதோர் விடியல்...

சுத்தமான விடியல்...
சுத்தப்படுத்தும் விடியல்...

சாமானியனுக்கான விடியல்...
சாந்தி தரும் விடியல்...

உற்சாகமான விடியல்...
உள்ளம் சிலிர்க்கும் விடியல்...

உழைப்பிற்கான விடியல்...
உண்மையான விடியல்...

நேர்மைக்கான விடியல்...
நெடுநாளாய் ஏங்கின விடியல்...

பதுக்கியவரை பரிகசிக்கும் விடியல்...
பதுக்காதவர் புன்னகைக்கும் விடியல்...

நெஞ்சம் நிறைந்த விடியல்...
நெக்குருக நன்றி சொல்லும் விடியல்...

நல்லவருக்கான விடியல்...
நன்மை தரும் விடியல்...

புதிய விடியல்...
புதிய பாரதத்தின் விடியல்...
புத்தம் புதிய பாரதத்திற்கான விடியல்...

உறுதியான விடியல்...
உலகையே உசுப்பேத்தும் விடியல்...

பிரமாதமான விடியல்...
பிரதமரால் வந்த விடியல்...

தீவீரவாதம் அழும் விடியல்...
தெய்வம் தந்த விடியல்...

வாழிய...வாழிய...வாழியவே....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP