ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஆதலால் காதல் செய்வீர் !

ராதேக்ருஷ்ணா...

காதல்...

அழகான தெய்வீக மொழி...

அன்பென்னும் மொழி...

ஆனால் காதல் என்னும்
வார்த்தையை ஏன் இள வயது
ஆணும் பெண்ணும் மட்டுமே பேச வேண்டும் ?!?

அது தவறல்லவா !?!

அன்பு எதிர்பார்ப்பு இல்லாததே ...

எதையும் எதிர்பார்க்காமல்
நம்மை காதலோடு சுமப்பவள்
நம் அன்னையல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம் அன்னையை....

நம் வாழ்வின் எதிர்காலத்தை
நமக்கு முன்னாடியே காதலோடு
யோசிப்பது நம் தகப்பனல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம்
தந்தையை....

நம்மோடு உறவு இல்லையெனிலும்,
நம்மிடம் காதலோடு பால பாடம் சொல்லித்தந்தது நம் ஆசிரியரல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம்
ஆசிரியர்களை...

நாம் எது செய்தாலும் நம்மிடம்
கோபமே கொள்ளாமல் நம்மைக்
காதலோடு அருளுவது தெய்வமல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் க்ருஷ்ணனை...

நம் மீது அக்கறை கொண்டு
நம்மைத் திருத்திப் பணிகொள்ளும்
காதல் மிகுந்தவர் நம் குருவல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம் குருவை...

நம்மை யாரென்றே தெரியாமல்,
தன் குடும்பத்தை விட்டு, தேசத்தின்
மீது காதலோடு காப்பவர் நம் ராணுவ வீரர்களல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் நம் வீரர்களை...

நம்மை சுமப்பதே சுகம் என்று
காதலோடு சுற்றி நம்மை வாழவைப்பது
நம் பூமித்தாய் அல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் நம் பூமித்தாயை...

நம்மை நமக்காக நேசிக்கும்
காதல் நம் தோழர்களுக்குத் தானே...
ஆதலால் காதல் செய்வீர் உம்
தோழர்களை...

நம் ஜாதி மதம் வயது எல்லாவற்றையும்
கடந்து நம்மை உண்மையாய்
காதல் செய்வது குழந்தைகள் தானே...
ஆதலால் காதல் செய்வீர் எல்லாக் குழந்தைகளையும்...

ஆதலால் காதல் செய்வீர்...
ஆதலால் காதல் செய்வோம்...
உலகையே காதலால் வசப்படுத்துவோம்...

Read more...

திங்கள், 8 பிப்ரவரி, 2016

மரங்கொத்தி...

ராதேக்ருஷ்ணா...

மரங்கொத்தி பார்த்ததுண்டா ?!?

அது மரத்தைக் கொத்திக்கொண்டே இருக்கும், வேண்டியது கிடைக்கும் வரை...
அது நினைத்ததை அடையும் வரை...

நீயும் கொஞ்சம் மரங்கொத்தி ஆகிவிடேன் ??!?!??

கொத்தும் விஷயங்கள்தான் வேறு !!!

துன்பத்தைக் கொத்திக்கொண்டே இரு...
இன்பம் அதில் பிறக்கும் வரை...

பிரச்சனைகளை கொத்திக்கொண்டே இரு....
தீர்வு கையில் கிடைக்கும் வரை...

விதியைக் கொத்திக்கொண்டே இரு...
விடியல் வாழ்வில் வரும் வரை...

வியாதியைக் கொத்திக்கொண்டே இரு....
ஆரோக்கியம் உன்னுள் வளரும் வரை...

தோல்விகளை கொத்திக்கொண்டே இரு....
வெற்றிகள் உன்னோடு நடக்கும் வரை...

அவமானங்களை கொத்திக்கொண்டே இரு....
மனதில் சமாதானம் பரவும் வரை...

நஷ்டங்களை கொத்திக்கொண்டே இரு...
லாபங்கள் அதில் முளைக்கும் வரை...

பயத்தைக் கொத்திக்கொண்டே இரு...
தைரியம் விஸ்வரூபம் எடுக்கும் வரை...

நம்பிக்கை துரோகங்களை கொத்திக்கொண்டே இரு...
உன்னுள் நம்பிக்கை வேர் விடும் வரை...

சண்டை சச்சரவுகளை கொத்திக்கொண்டே இரு...
சமாதானம் சிறகடித்து பறக்கின்ற வரை...

சோம்பேறித்தனத்தை கொத்திக்கொண்டே இரு...
விடாமுயற்சி உன்னுள் ஊற்றெடுக்கும் வரை...

சந்தேகங்களை கொத்திக்கொண்டே இரு...
தெய்வீகத்தில் பூரணமாக திளைக்கும் வரை...

இனி நீ மரங்கொத்தி....
இல்லை இல்லை....
மனங்கொத்தி....
உன் மனங்கொத்தி...

உன் மனதைக் கொத்திக்கொண்டே இரு...
க்ருஷ்ணன் உன்னோடு
பிரியாமல் வாழும் வரை...

Read more...

வியாழன், 4 பிப்ரவரி, 2016

அக்ஷயபாத்திரம் !!!

ராதேக்ருஷ்ணா...

வாழ்க்கை அழகானது...
வாழ்க்கை அற்புதமானது...
வாழ்க்கை அதிசயமானது...

உன் வாழ்வை நீ
வாழும் முறையில் தான்
அது அக்ஷயபாத்திரமாகிறது...

என்னால் முடியாது என்பதே பலவீனம்...

எதுவும் முடியும் என்பதே தெய்வீகம்...

எதுவும் மாறாது என்பதே தோல்வி...

எல்லாவற்றையும் மாற்றமுடியும் என்பதே வெற்றி...

யாரும், எதுவும் சரியில்லை என்பதே முட்டாள்தனம்...

என்னை சரி செய்துகொள்ள வேண்டும் என்பதே புத்திசாலித்தனம்...

தவறுகளை நியாயப்படுத்துபவர் வாழ்வில் உயர்வதில்லை...

தவறுகளை திருத்திக்கொள்பவர்
உலகையே ஜெயிக்கிறார்...

எதையும் புரிந்து கொள்ளத் தயங்குபவர் துரதிருஷ்டசாலி !

தன்னையும் தெய்வத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவர் அதிருஷ்டசாலி !

உன் வாழ்வை நீ
பார்க்கும் முறை என்ன ?

Read more...

திங்கள், 1 பிப்ரவரி, 2016

பூரணமாய் உண்டாகட்டும் !

உன் மனதின் காமங்கள் அழிந்து
பூரணமான சாந்தி உண்டாகட்டும் !

உன் மனதின் குழப்பங்கள் தீர்ந்து
பூரணமான நிம்மதி உண்டாகட்டும் !

உன் மனதின் கோபங்கள் ஒழிந்து
பூரணமான திருப்தி உண்டாகட்டும் !

உன் மனதின் சந்தேகங்கள் கழிந்து
பூரணமான அமைதி உண்டாகட்டும் !

உன் மனதின் ஏக்கங்கள் முடிந்து
பூரணமான சமாதானம் உண்டாகட்டும் !

உன் மனதின் பயங்கள் சிதைந்து
பூரணமான ஞானம் உண்டாகட்டும் !

உன் மனதின் யோசனைகள் அடங்கி
பூரணமான தெளிவு உண்டாகட்டும் !

உன் மனதில் கண்ணன் தெரியட்டும் !
உன் மனதில் கண்ணன் விளையாடட்டும் !
உன் மனது கண்ணனின் சொத்தாகட்டும் !

பூரணமாய் நீ வாழ்வை அனுபவிக்க,
பூரணமாய் நீ பக்தியில் திளைக்க,
பூரணமாய் நீ ஞானத்தில் மகிழ,
பூரணமாய் ஆசீர்வாதங்கள்....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP