ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, February 7, 2017

ஆயிரம் ஆயிரமாய் !

என்ன சொல்வேன் !

ஆயிரம் பொய்கள் வாயினிலே !

ஆயிரம் எண்ணங்கள் மனதினிலே !

ஆயிரம் யோசனைகள் வாழ்வினிலே !

ஆயிரம் பயங்கள் சிந்தையிலே !

ஆயிரம் குழப்பங்கள் புத்தியிலே !

ஆயிரம் ஆசைகள் ரகசியத்திலே !

ஆயிரம் வியாதிகள் உடலினிலே !

ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளிலே !

ஆயிரம் ஏமாற்றங்கள் முயற்சிகளிலே !

ஆயிரம் தோல்விகள் செயல்களிலே !

ஆயிரம் வெறுப்புகள் மனிதரிடத்திலே !

ஆயிரம் அழுகைகள் கண்களிலே !

ஆயிரம் கெட்ட வார்த்தைகள் நாவினிலே !

ஆயிரம் உளரல்கள் பேச்சினிலே !

ஆயிரம் தவறுகள் வார்த்தைகளிலே !

ஆயிரம் பாவங்கள் கர்மாவிலே !

ஆயிரம் பெருமைகள் கடமைகளிலே !

ஆயிரம் எதிர்பார்ப்புகள் உலகினிலே !

ஆயிரம் சுவைகள் உணவினிலே !

ஆயிரம் வண்ணங்கள் இயற்கையிலே !

ஆயிரம் முனகல்கள் உதட்டினிலே !

ஆயிரம் அழகுகள் அண்டத்திலே !

ஆயிரம் ஆயிரமாய் இன்னும் !

இத்தனை ஆயிரம் தெரிந்த எனக்கு,
உன்னை துதிக்க ஆயிரம் நாமம்,
சொல்லவரவில்லையே !

உன் பக்தன் பீஷ்மரே,
அதை சொன்னார் உன்னிடம் !

க்ருஷ்ணா !
இனி பீஷ்மர் சொன்ன ஆயிரம் போதும் !
என்னைக் காக்க இந்த ஆயிரம் போதும் !
எப்போதும் இந்த ஆயிரம் போதும் !

என்னிடமுள்ள எல்லா ஆயிரமும் போகட்டும் !
பீஷ்மர் சொன்ன ஆயிரம் நாமம் வரட்டும் !

கண்ணா !
ஆயிரம் ஆயிரமாய் உன்னைப் பார்க்க ஆசை !

நான் பீஷ்மரில்லை !
ஆனால் அவர் சொன்ன ஆயிரம் நாமம் சொல்லி, நிச்சயமாக உன்னை ஆயிரம் கண்ணனாய் பார்ப்பேன் !

ஆயிரம் பிறவிகள் எடுத்தாவது,
ஆயிரம் நாமங்கள் சொல்லி,
ஆயிரம் கண்ணனைப் பார்க்க,
பீஷ்மா நீர் ஆசி கூறும் !

பீஷ்மா ! உமக்கு ஆயிரம் வந்தனங்கள் !
பீஷ்மா ! உமக்கு ஆயிரம் முத்தங்கள் !

பீஷ்மா ! ஆயிரம் அம்பில் படுத்து,
ஆயிரம் நாமம் சொல்லி,
ஆயிரம் கண்ணனைக் கண்டவரே !

என்னையும் ஆயிரம் நாமம் புலம்ப வையும் !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP