ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, March 5, 2017

முதல் முறையாய் !

அமுதனே உனக்காக வருகிறேன் !

அரங்கத்து அமுதனே உனக்காகவே வருகிறேன் !

திருவரங்கத்து அமுதனே,
உன்னடிமை வருகிறேன் !

அமுதனின் அமுதான,
ராமானுஜ அமுதை,
அடியோங்களுக்கு உள்ளபடி
காட்டித் தந்த,
திருவரஙகத்தமுனாரே,
உன் திருவடியில் அடியேனைத் தர வருகிறேன் !

பல ஜன்மாக்கள்
சுற்றிவிட்டேன் !
பல உடலில்
வாழ்ந்துவிட்டேன் !
பல பிறப்புகள்
பிறந்துவிட்டேன் !
பல இறப்புகள்
அடைந்துவிட்டேன் !

இன்னும் பக்குவம்
வரவில்லை !
இன்னும் வைராக்கியம்
வரவில்லை !
இன்னும் ஆசை
விடவில்லை !
இன்னும் அகம்பாவம்
அடங்கவில்லை !
இன்னும் சுயநலம்
அழியவில்லை !

அரங்கத்தில் படுத்திருக்கும்,
அரங்கனுக்கும்
என் நிலை தெரியவில்லை !

அடியேனைக் காக்கும்
இராமானுசனை அடைய
எனக்கும் வழியில்லை !

திருவரங்கத்து அமுதனாரே !
இந்த நாயேனையும்,
உடையவரின் சொத்தாக
ஆக்கிவிடுமய்யா !

என்னிடம் உமக்குத் தர
ஏதுமில்லை...
உயிரைத் தவிர...

அதை உம் திருவடியில்
சமர்ப்பிக்கிறேன் !

இந்த ஜீவனை
ராமானுஜன்
என்னும் கருணைக் கடலில்
கரைத்துவிடுமய்யா !

காரேய் கருணை இராமனுசன் கருணையை
உம்மை விட அறிந்தவர் யார்...
இந்த ஸ்ரீரங்கத்திலே !!!
இந்த வையகத்திலே !!!

முதல் முறையாய்,
ஸ்ரீரங்கத்தில்,
உம்மை நினைத்து,
நுழைந்துவிட்டேன்...

இனி உம் பொறுப்பு....

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP