ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, April 30, 2017

அன்று நடந்த !

அன்று நடந்த திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு...

காஞ்சிபுரத்திலிருந்து கங்காயாத்திரைக்கு
யாதவ ப்ரகாசரோடு
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின் திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பெரிய நம்பிகளோடு,
ஸ்வாமி ஆளவந்தாரை தரிசிக்க ஸ்ரீரங்கத்திற்கு
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பெருந்தேவி தாயார்,
வரதராஜனுக்காக,
சாலைக்கிணற்றிலுருந்து,
தீர்த்தம் கொண்டுவர
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின் திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திவ்யதேச யாத்திரையாக
பாரத தேசம் முழுதும்
பவித்திரமாக்க
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

ப்ரும்மசூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுத
காஷ்மீரத்திற்கு கடமையோடு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திருக்கோஷ்டியூர் நம்பியிடம்
திரு மந்திர அர்த்தத்தைப் பெற
18 முறை பக்தியோடு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பெண் பித்தன் மல்லர்தலைவனை,
ரங்க பித்தனாக்க, கொதிக்கும்
காவிரி மணலில்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

மலையப்பன் திருமால்
என நிரூபணம் செய்ய
திருமலைக்கு தீர்கமாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

வேடுவரையும், கொங்கில் பிராட்டியையும் அனுக்ரஹிக்க,
ஸ்ரீரங்கம் விட்டு வேகமாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

காட்டிலும் மேட்டிலும்
அலைந்து சாளக்ராமத்திற்கும்,
தொண்டனூருக்கும் வைணவத்தை காட்டித்தர
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திருமண் தேடி,
திருநாரணனைத் தேடி,
திருநாராயணபுரம் அமைக்க
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

ராமப்ரியனைத் தேடி,
டில்லி பாதுஷாவை நாடி,
சம்பத்குமாரனாய் பெற
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

சம்பத்குமாரனோடும்,
பீவி நாச்சியாரோடும்,
தெய்வீகக் காதலோடும் மேல்கோட்டைக்கு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

அரங்கனைக் காண,
அந்தரங்க ஆசையுடன்,
ஸ்ரீரங்கத்திற்கு குழந்தையாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

ஊர் விட்ட பெண்பிள்ளையின்
81 வாக்கியங்களைக் கேட்க
திருக்கோளூர்க்கு தெய்வீகமாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திருப்பாவை செல்வியின்
பிரார்த்தனையான நூறு தடா தர
திருமாலிருஞ்சோலைக்கு துள்ளலாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பின்னே வரும் நாம்
வழி மாறாமல் இருக்க
வைகுந்த வாசலுக்கு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

அன்று நடந்த திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

உய்ய ஒரே வழியான,
உடையவர் திருவடிகளுக்கு
இன்றும், என்றும், என்றென்றும்
பாடுகிறேன் பல்லாண்டு !

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP