ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, July 28, 2017

கருடா சௌக்கியமா !!!

கருடா சௌக்கியமா !!!

கஷ்யபரின்
தவப்புதல்வா...
கருடா சௌக்கியமா !!!

வினதையின்
கடைக்குட்டியே...
கருடா சௌக்கியமா !!!

அருணனின்
சகோதரனே !
கருடா சௌக்கியமா !!!

அமிர்த கலசத்தை
கொண்டவனே !
கருடா சௌக்கியமா !!!

வினதையின் அடிமைத்தனத்தை மாற்றினவனே !
கருடா சௌக்கியமா !!!

நாரணனுக்கும் வரம்
தந்தவனே !
கருடா சௌக்கியமா !!!

நாரணனிடம் வரம்
பெற்றவனே !
கருடா சௌக்கியமா !!!

நாரணனின் கொடியில்
ஜொலிப்பவனே !
கருடா சௌக்கியமா !!!

கண்ணனை முதுகில்
சுமப்பவனே !
கருடா சௌக்கியமா !!!

ருக்மிணிக்காக தூது
போனவனே !
கருடா சௌக்கியமா !!!

பகவானுக்காக சுமுகனை
சுமப்பவனே !
கருடா சௌக்கியமா !!!

வேதமே சிறகுகளாய்
கொண்டவனே !
கருடா சௌக்கியமா !!!

வானமாமலையில்
தவம் செய்தவனே !
கருடா சௌக்கியமா !!!

திருநறையூரின்
கல் நாயகனே !
கருடா சௌக்கியமா !!!

ஸ்ரீரங்கத்தின்
மிகப்பெரியோனே !
கருடா சௌக்கியமா !!!

நிகமாந்த மஹாதேசிகருக்கு
ஹயக்ரிவரை தந்தவனே !
கருடா சௌக்கியமா !!!

நான் உன்னை
இத்தனை முறை கேட்டேனே...
சௌக்கியமா என்று...?
நீ என்னைக் கேட்டாயா ?!?

கேள் ! சொல்கிறேன் !
கேட்காமலும் சொல்லுவேன் !

ஏதோ பூமிக்குப் பாரமாய் இருக்கிறேன் !

உன் பலமோ பெரிது !
என் மனமோ சிறிது !
உன் அலகால் என்னைத் தூக்கி,
வைகுந்தத்தில் போட்டுவிடு !

இதுவே நான் வைகுந்தம் அடைய சுலபமான வழி !

நீ என்னை
வைகுந்தத்தில் போட்டால்,
உனக்குத்தான் பெருமை !!!

ஏனென்றால் உன் பலம், சக்தி வைகுந்தமே உணரும் !!!

இன்று உன் பிறந்தநாள் !
சீக்கிரம் என்னை வைகுந்தத்தில் போடு !

கர்மாவும் செய்யாமல்,
ஞானமும் இல்லாமல்,
பக்தியும் பண்ணாமல்,
வெறுமனே இருக்கும்
இந்த ஜீவனை உடனே
வைகுந்தத்தில் சேர்த்து,
உன் பிறந்தநாளில்,
பெருமை தேடிக்கொள் !!!

கருடா சௌக்கியமா !!!
சொல்லிவிட்டேன்...
இனி உன் பாடு...

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP