ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, December 16, 2017

640. மார்கழியே நீதானடி !

மார்கழி வந்ததோ !!!
மதி நிறைந்ததோ !!!

நீராட வந்தாயோ !!!
நீராட்ட வந்தாயோ !!!

சீர் மல்கியதோ !!!
ஆய்பாடி சிறந்ததோ !!!

கூர்வேல் நந்தகோபனோ !!!
ஏரார்ந்த கண்ணி யசோதையோ !!!

கார்மேனி செங்கண்ணனோ !!!
கதிர்மதியம் முகத்தனனோ !!!

நாராயணனும் நமக்கோ !!!
பறையும் நமக்கோ !!!

பாரோர் புகழ்வனரோ !!!
படிந்தே பாடுவோமோ !!!

ஆண்டாளும் வந்தாயே !!!
ஆளவே வந்தாயே !!

ஆட்கொள்ள வந்தாயே !!!
ஆடிப்பூரத்தில் வந்தாயே !!!

பூமகளாய் வந்தாயே !!!
பூவுலகிற்காய் வந்தாயே !!!

கலியுகத்தில் வந்தாயே !!!
கவலை தீர்க்க வந்தாயே !!!

மார்கழியே நீதானடி !!!
மாதவனும் உனக்காகதானடி !!!

மந்திரமே திருப்பாவையடி !!!
மகிழ்ச்சியும் தந்ததடி !!!

சோம்பேறிகள் நாங்களடி !!!
சுய சிந்தனை இல்லையடி !!!

கோதையே உன் திருவடியே....
கதியெனவே வந்தோமடி...

உன்னிடமே இருக்கவேண்டுமடி...
உன் கை கிளியாய் ஏற்பாயடி !!!

Read more...

Monday, December 11, 2017

ரௌத்திரக்கவி !

எங்கள் முண்டாசு கவிஞன் !

வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

தாடா காலனே !
எம்மை எடுத்துக்கொள் !

எம் முண்டாசு கவியை மீண்டும் தாடா !

இங்கே மொழிப்பற்று போதவில்லை !
இங்கே தேசப்பற்று பத்தவில்லை !
இங்கே தெய்வப்பற்று சரியாயில்லை !

வேண்டும் !
பாரதி வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

அன்று இதே நாளில்
எட்டயபுரத்தில்
பிறந்தவன்...
இன்று மீண்டும் இங்கே பிறக்கவேண்டும் !

வா...பாரதி...வா...
நீ அமரகவி...
இன்னும் பாடு...

எங்களை உயிர்ப்பிக்க
உன் தமிழைத் தவிர
எதற்கும் பலமில்லை !

போதாதடா முண்டாசுக்கவியே !
எங்களுக்கு சாமர்த்தியம் போதாதடா !

ரௌத்திரம் மறந்தோம் !
அச்சம் வளர்த்தோம் !
காதல் மறந்தோம் !
காமம் கற்றோம் !
கடவுள் மறந்தோம் !
ஆனந்தம் தொலைத்தோம் !
காணி நிலம் மறந்தோம் !
பணத்தில் வீழ்ந்தோம் !
கடமை மறந்தோம் !
கடனாளியாய் ஆனோம் !
பாசம் மறந்தோம் !
பகைமை கொண்டோம் !
தேசம் மறந்தோம் !
அடையாளம் தொலைத்தோம் !
காக்கைக் குருவி மறந்தோம் !
காலை தூங்கி வழிந்தோம் !
ஓடி விளையாட மறந்தோம் !
ஒடுங்கிப் போனோம் !

மாக்களாய் ஆன
எம்மை
மக்களாய் ஆக்க
உன்னால் மட்டுமே முடியுமடா
முறுக்கு மீசை கவிஞா !

நல்லதோர் வீணை செய்தாள் சிவசக்தி !
அதை நலம் தர
மீட்டுபவன் நீயன்றோ !

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவை காட்டியவனே !
கிளியின் வண்ணத்தை
சொல்ல வருவாயடா !

வாடா !
ரௌத்திரக் கவியே...

இது உன் தேசமடா !
இது உன் இனமடா !

இது உன் கடமையடா !

இனி பொறுப்பதில்லை !!

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP