ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, December 11, 2017

ரௌத்திரக்கவி !

எங்கள் முண்டாசு கவிஞன் !

வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

தாடா காலனே !
எம்மை எடுத்துக்கொள் !

எம் முண்டாசு கவியை மீண்டும் தாடா !

இங்கே மொழிப்பற்று போதவில்லை !
இங்கே தேசப்பற்று பத்தவில்லை !
இங்கே தெய்வப்பற்று சரியாயில்லை !

வேண்டும் !
பாரதி வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

அன்று இதே நாளில்
எட்டயபுரத்தில்
பிறந்தவன்...
இன்று மீண்டும் இங்கே பிறக்கவேண்டும் !

வா...பாரதி...வா...
நீ அமரகவி...
இன்னும் பாடு...

எங்களை உயிர்ப்பிக்க
உன் தமிழைத் தவிர
எதற்கும் பலமில்லை !

போதாதடா முண்டாசுக்கவியே !
எங்களுக்கு சாமர்த்தியம் போதாதடா !

ரௌத்திரம் மறந்தோம் !
அச்சம் வளர்த்தோம் !
காதல் மறந்தோம் !
காமம் கற்றோம் !
கடவுள் மறந்தோம் !
ஆனந்தம் தொலைத்தோம் !
காணி நிலம் மறந்தோம் !
பணத்தில் வீழ்ந்தோம் !
கடமை மறந்தோம் !
கடனாளியாய் ஆனோம் !
பாசம் மறந்தோம் !
பகைமை கொண்டோம் !
தேசம் மறந்தோம் !
அடையாளம் தொலைத்தோம் !
காக்கைக் குருவி மறந்தோம் !
காலை தூங்கி வழிந்தோம் !
ஓடி விளையாட மறந்தோம் !
ஒடுங்கிப் போனோம் !

மாக்களாய் ஆன
எம்மை
மக்களாய் ஆக்க
உன்னால் மட்டுமே முடியுமடா
முறுக்கு மீசை கவிஞா !

நல்லதோர் வீணை செய்தாள் சிவசக்தி !
அதை நலம் தர
மீட்டுபவன் நீயன்றோ !

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவை காட்டியவனே !
கிளியின் வண்ணத்தை
சொல்ல வருவாயடா !

வாடா !
ரௌத்திரக் கவியே...

இது உன் தேசமடா !
இது உன் இனமடா !

இது உன் கடமையடா !

இனி பொறுப்பதில்லை !!

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP