ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, February 27, 2018

641. மரணம்

👏🏻🕉🙌🏽🙏🏼🤲🏽🤝🏼💞

மரணம் !

இந்த வாரம்...
#மரண வாரம்...
பிணங்கள் வாரம்...

பயப்படாதீர்கள்..
#உலக #இயற்கை இது...
நாளும் நடக்கும் #காட்சி இது...

#ஊடகங்கள் பேசினாலும்,
#பேசவிட்டாலும்...
சமூக #வலைத்தளங்கள்...
#சொன்னாலும்,
சொல்லாவிட்டாலும்...
#நிரந்தர #விஷயம் இதுவே...

ஒருவர் #பெண்... 
#திரைத்துறை...
புகழின் உச்சியை அடைந்தவர்...
திருமணத்திற்கு சென்றார்...
வெளிநாட்டில் 
மரணம்...

ஒருவர் #ஆண்...
#ஆதிவாசி...
இயற்கையோடு வாழ்ந்தவர்...
இயற்கையான #பசிக்கு,
உணவு திருடப்போய்
அடிக்கப்பட்டு #இறந்தார்...
உள்நாட்டில் மரணம்...

இரண்டுமே #வெவ்வேறு...
ஆயினும் ஒன்று...

#வயது...
#அந்தஸ்து...
படிப்பு...
#சூழ்நிலை...
இறந்த #முறை...
உலகின் பார்வை...
எல்லாம் வெவ்வேறு...

மரணமடைந்தனர்..
இது இருவருக்கும் ஒன்றே...

இவையில்லாமல்...
செங்கல்பட்டு 
கருணை(?) இல்ல ரகசிய
புரியாத புதிர் மரணங்கள்...

இந்த மரணங்களைத் தாண்டியும்
சில மரணங்கள்...

#தாய்நாட்டிற்காக தன்னுயிர் ஈந்த வீரர்களின் #தியாக #மரணம்...

இவர்களில்லாமல்,
#சிரியாவில் தாக்குதலில்
#பிஞ்சுக்குழந்தைகளின்
கொடூர மரணங்கள்...

இவையோடு நிற்கவில்லை...
பட்டியல்...

நமக்குத் தெரிந்தவருக்கு
வேண்டியவர்களின்,
நாம் பழகிய சிலரின்
மரணங்கள்...

நாம் அறியா...
நமக்குத் தெரியா...
பல பல மரணங்கள்...

இவையெல்லாம்...
புதியதா ?!?!?

இல்லையில்லை...
மரணத்தைப் போல் பழையதுமில்லை...
என்று எங்கோ
கேட்ட படித்த ஞாபகம்...

இந்த மரணங்கள்...
போதையால் ஒன்று...
பசியால் ஒன்று...
நாட்டிற்காக பல...
தாக்குதலால் பல...
காரணமறியாமல் பல...
முதுமையால் பல...
நோயினால் பல...
கொடுமையால் பல...

ஏதோ ஒரு காரணம்...
ஆனால் நிதர்சனம் ஒன்று...
மரணம் நிச்சயம்...
ஒரு நாள்...எப்படியும்...

ஆழ்வார்களும்,
நாயன்மார்களும்,
சொன்னதும் இதுவே...

இது தத்துவமல்ல...
யதார்த்தத்தின் உண்மை முகம்...

இந்த மரணத்தின் வரிசையில்
நாமும் நிற்கிறோம்...
நமக்கு பிடித்தவரும்,
நாம் வெறுப்பவரும்,
நம்மோடு நிற்கின்றனர்...
இந்த ஒரு கடைசி
பயணத்திற்காக...

#நமக்கும் #உண்டு இது...

செத்த பிணங்களைப் பார்த்து...
சாகப்போகும் பிணங்களின்...
அழுகை...ஒப்பாரி...
சாடல்...புலம்பல்...

எதுவும் நிறுத்தப்போவதில்லை...
இந்த மரணத்தை...

கோபாலன் சொல்ல கோபாலவல்லி எழுதுகிறான்...

அதனால்...
அதுவரை...
#அன்பைத் தருவோம்...
அன்பைப் #பெறுவோம்...
அன்பை வெளிப்படுத்துவோம்...
அன்பைப் #பகிர்வோம்...

நம் உடலுக்கு மரணம் உண்டு...
நமக்கு மரணமில்லை...
நம் அன்பிற்கும் எல்லையில்லை...

உடலிலிருந்து உயிர் பிரிதலே மரணம்...
பிரிந்த உயிர்கள் நிம்மதியாய் இறைவன் திருவடியில் இருக்க,
நாம் ப்ரார்த்திப்போம்...

தங்கள் அன்பிற்குறியவரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு,
மனோபலமும்,
நம்பிக்கையும், தர
எல்லாம் வல்ல
இறைவனைப்
ப்ரார்த்திப்போம்...

நம்மால் முடிந்த
ஆறுதலையும் தருவோம்...

அன்பு...
உயிர்...
வாழ்வு...

உள்ளவரை அன்போடு வாழ்வோம்...
உடலில் உயிர் உள்ளவரை...
நம் உடலில் உயிர் உள்ளவரை...

இதுவே மானுட தர்மம்..
அன்பின் வழியது உயிர்நிலை...

குருஜீ கோபாலவல்லிதாசர்

27/2/2018...

நள்ளிரவு12.40...

🙏🏼🙌🏽🕉👏🏻🤲🏽🤝🏼💞

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP